இனி சபைகளின் ஆரம்பகால நிகழச்சிகளை கூறி நேரம் போக்காமல் விஷயத்துக்குள் கடந்து போவாம்.
இந்த அந்நியபாஷைக்கு பழைய ஏற்பாட்டின் வரலாறு என்ன? புதிய ஏற்பாட்டில் அதற்கு தொடர்பு உண்டாக காரணமென்ன? என்பதை அறிந்தால் இந்த போலி அந்நியபாஷைகளை நீங்கள் இனம் கண்டுக்கொள்ளமுடியும்.
இதற்கு வேதபுத்தகத்தின்
முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் எழுதப்பட்ட சரித்திர வரலாற்றை வாசிக்கவேண்டும். ஆதி 11:1,6-9. அன்றை உலக ஆரம்பகாலங்களில் உள்ள மக்கள் எல்லாரும் ஒரே
பாஷையைதான் பேசினார்கள், அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு பாஷைதான் இருந்ததது.
பாஷை-மொழி என்றால் ஒருவர் மற்றவரோடு பேச தொடர்புக்கொள்ள உபயோகிக்ககூடிய வித்தியாசமான சப்தம். ஆதிகாலத்தில் ஊமையர்கள் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளும் செய்கைமொழிதான், கற்கால மக்களுக்கு தொடர்புமொழியாக பயன்பட்டது. நாளாகநாளாக ஒரு
குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டிபேச அதற்கு எல்லாரும் குறிப்பிட்ட வார்த்தையை
பெயராக சூட்டினார்கள். இப்படி பல பெயர்கள் வார்த்தைகளாக உருவானது பின் அதுவே மொழியாக மாறியது. அதைத்தான் ஆதிமக்கள் பேசும் மொழியாக்கிக்கொண்டார்கள். அன்றைய உலகம் ஒரே
பேச்சும், ஒரே பாஷையுமாயிருந்தது என்று கூறுகிறது. ஆதி 11:1.
அன்றைய நாட்களில் பசிக்கு சாப்பாடு கிடைத்தால்போதும் என்று வாழ்ந்தார்கள். வேட்டையாடி, பயிரிட்டு அதை சாப்பிட்டு மீதி நேரம் முழுவதும் ஜனங்கள் சும்மாயிருந்தார்கள்.
அறிஞர்.அண்ணா அவர்கள் கூறினார். வீதி ஓரங்களில் வேலையற்றதுகள், வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் என்றார். இந்த வேலைவெட்டியில்லாதவர்கள் உண்டுவிட்டு சும்மா இருக்கும்போது பலவித தேவையற்ற சிந்தனைகள் அவர்களுக்குள் உருவாகிறது. இன்று இப்படி வேலையில்லாத வாலிபர்களைத்தான் கைநிறைய பணம்கொடுத்து பயன்படுத்தி தீவிரவாதத்துக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே சாப்பிட்டுவிட்டு வேலை ஒன்றும் இல்லாத அந்தகால மக்கள் எல்லாரும் இணைந்து
வானத்தைத்தொடும் உயர்ந்தகோபுரம் பணிந்தால் என்ன? (இப்போதுள்ள ஜெபகோபுர வியாபார கடைகளைபோல என்று கூறமாட்டேன்). கோபுரம் பணியும் ஆசை மக்களுக்குள் ஏற்பட்டது. உடனே கோபுரம் பணியும் வேலையை மிகத்திறமையாக செய்தார்கள். பெரியபெரிய எஞ்ஜினியர்கள் கட்டும் நான்கு
அடுக்குமாடிகள்கூட அடித்தளம் சரியில்லாமல், கலவையின் அளவு சரியில்லாமல் கட்டிய சில நாட்களில் இடிந்துவிழுந்தது என்று தினசரி செய்திதாள்களில் கேள்விப்படுகிறோம்.
ஆனால் எஞ்ஜினியர்கள், படித்தவர் இல்லாத அக்காலத்தில் எத்தனை திறமையாக யோசித்து வானத்தைதொடும் அளவு உயர்ந்த கோபுரத்தை பணித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிக ஆச்சரியமாகயிருக்கிறது. இந்த கட்டிட ஞானத்தோடு இரண்டு
தவறான எண்ணங்கள் இவர்களுக்குள் ஏற்பட்டது. அதுதான் தேவனின் மனதை தாக்கின. ஆதி 11:6-9.
(1). தங்களுக்கு பேர் உண்டாக இந்த கோபுரத்தை பணிவோம் என்றார்கள் (வச 4).
(2). தாங்கள் செய்ய நினைத்தது எதையும் யாராலும் தடைசெய்ய முடியாது என்று நினைத்தார்கள் (வசன 6).
முதலாவது கடவுளைப் புறக்கணித்தார்கள். தங்களுக்கு பெயர் உண்டாக வேண்டும்.
1. தான் இல்லாமல் போனால் இந்த சபையை, டையோசிஸ்ஸை கெடுத்துவிடுவார்கள் என்று சிலர் எண்ணுவதாலும் தங்களால்தான் சபையை நன்றாக நடத்தமுடியும் என்று எண்ணம் உள்ளவர்கள் உண்டல்லவா? இங்குதான் பிரச்சனை உருவாகிறது. தாங்கள் புகழப்படவேண்டும் என்று நினைக்கிறதால்தானே தேவனுக்கு கோபம் வந்தது. நான் கர்த்தர் என் புகழ்ச்சியையும், துதியையும் யாருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன் என்று கர்த்தர் கூறினார். ஏசா 42.8. தேவன் தனக்குவரும் புகழ்ச்சியை,
யார் தனக்கென்று எடுத்துக்கொண்டாலும் தேவனுக்கு கோபம் வரும்.
2. அடுத்தது தான் செய்வதுதான் சரி என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் எடுக்கும் முயற்சியை
யாராலும் தடுக்கமுடியாது என்ற பெருமையுள்ள எண்ணம் இவர்களுக்குள் இருந்தது.
என் திட்டம், என் எண்ணம், என் செயல், நான் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனுக்கு பிடிக்காதது.
கர்த்தர் சொல்கிறார்.
உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என் வழிகள் உன் வழிகளுமல்ல என்றார். ஆகவே இவர்களுக்குள்ளே இருந்த தேவனுக்கு பிரியமில்லாத பெருமை, தாங்கள் செய்வதை
யாரும் தடுக்க முடியாது என்று அகம்பாவத்தை உணர்த்த கர்த்தர் நடவடிக்கை எடுத்தார். மேலும் இவர்கள் பணியும் கோபுரத்தை வானம்வரை உயர்த்தி என்ன பிரயோஜனம்? - பிரயோஜனமில்லாத விஷயத்துக்கு நேரத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்களே என்றும் இவர்களுக்கும்மேல்
சக்தி வாய்ந்த ஒருவர் உண்டென்பதையும் இம்மக்கள் அறிந்து உணர்த்தப்படவும் இவர்களின்
அகம்பாவத்தை அதமாக்கவும் கர்த்தர் இறங்கி வந்தார்.
இது நடந்த காலம் ஏறக்குறைய கி.மு
2225ம் ஆண்டு ஆகும். உடனே கர்த்தர் அற்புதமாக செயல்பட்டார்.
அவர்களைக்கொண்டே அவர்கள் மூலமாகவே, அவர்களே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து ஓடத்தக்கதாய் அவர்கள்
நாக்கை மட்டும் தொட்டார். அவ்வளவுதான் ஒரே பாஷை - பல பாஷையாக மாறியது. இதைத்தான்
செமிட்டிக் லாங்வேஜ் என்பார்கள். அதாவது ஒரே ஒரு மொழியிலிருந்து சுமார்
18 மொழிகள் உருவாயின.
சமஸ்கிருத மொழி பலமொழிகளுக்கு ஆரம்பம் என்பார்கள். அதுதான்
செமிட்டிக் லாங்வேஜ் என்பது. சமஸ்கிருதம் கலக்காத இந்தியமொழிகள் மிககுறைவு அதைப்போலவே சம்பவித்தது.
அந்த சில நிமிடத்திலேயே
ஒருவர் பேசியது மற்றவர்களுக்கு புரியவில்லை. யார் பேசியது
யாருக்கு புரிந்ததோ அவர்கள் எல்லாரும் ஒரே கூட்டமாய் இணைந்து அந்த நாட்டைவிட்டே பெயர்ந்து உலகத்தில்
மறுகோடிக்கு சென்று குடியேறினார். இப்படியாக யார்யார் எந்தெந்த
பாஷைகளை பேசினார்களோ அவர்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமாக பிரிந்துபோனார்கள். இப்படியாக கர்த்தர் அந்த ஜனங்களை
பாஷைகளால் சிதறடித்தார். இப்படி உலகெங்கும் சிதறிடிக்கப்பட்ட மக்கள் எல்லாருக்கும்
பாவங்கள் கழுவப்பட பாவத்திலிருந்து விடுவிக்க தேவனோடு அந்த மக்களை
ஒப்புரவாக்க மேசியா இந்த உலகத்தில் பிறந்த விவரம் அறிவிக்கவே பெந்தேகோஸ்தே நாளை கர்த்தர் தெரிந்தெடுத்தார்.
பண்டிகையின் 50வது நாளிலே தேவன் தன் பரிசுத்த ஆவியானவராலே எல்லா மக்களையும்
ஒப்புரவாக்கும் பணியும், இணைக்கும் பணியும் ஒன்றாக நடந்தேறியது.
பிதாவோடு மனிதனை ஒப்புரவாக்கும் மீட்பின் பணியை இயேசுகிறிஸ்து நிறைவேற்ற அவரின் உதவியாளராக பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி வந்தார். ஆவியானவர் வரப்போவதை இயேசுவானவர் பலமுறை பல வசனங்கள் மூலமாக முன்னறிவித்ததைதான் நீங்கள் அறிவீர்களே. அதை மீண்டும் நான் இங்கு எழுதவில்லை நீங்களே எடுத்து வாசித்துக்கொள்ளுங்கள். |