Dr.Samson James
கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

Tribal Mission தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே ஆதிவாசிகள் மத்தியில் செய்யும் ஊழியத்தில் பங்கெடுத்து, டிரைபல்மிஷன் ஒரு ஸ்தாபனமாக அரசாங்க பதிவு செய்தபின் டிரைபிள் மிஷனில் பலபொறுப்புகள் வகித்து, டைரக்டராகவும், பிரசிடென்ட்டாகவும் பலவருடங்கள் தொடர்ந்து அந்த பதவி வகித்து டிரைபல்மிஷன் வளர முக்கிய காரணமானவராக திகழ்ந்தார். இவர் சொந்த ஊர் வெல்லூர். அதே வெல்லூரில் CMC ஆஸ்பத்திரியில் பணியில் சேர்ந்து தன் திறமையால் எஞ்ஜினியராக பதவி உயர்வுபெற்றார். அதன்பின் அமெரிக்காவில் பலவருடங்கள் தன்மனைவி,      பிள்ளைகளுடன் வாழ்ந்து டிரைபல்மிஷன் தேவைகளுக்காக ஏராளமான பண உதவிகளை செய்து உதவினார். இவர் நல்ல பிரசங்கியாகவும் திகழ்ந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் கன்வென்ஷன்களில் பிரசங்கித்தார்.

இவருக்கு மனைவி,      இரண்டு ஆண்பிள்ளைகள் உண்டு.      இருவருக்கும் திருமணத்தை முடித்தார்.      பிறகு இந்தியா திரும்பி ஆதிவாசிகள் நிறைந்த அட்டப்பாடி மலைகிராமத்தில் வீடுகட்டி வாழ்ந்து ஊழியமும் நிறைவேற்றினார். 2008 பிப்ரவரி 66ம் தேதி கர்த்தருக்குள் நல்ல ஓட்டத்தை முடித்தார். அவருடைய  மனைவி, பிள்ளைகள், மருமக்கள் யாவருக்கும் கர்த்தர் ஆறுதலை அருளுவாராக. டிரைபல்மிஷனில் அவரின் ஈடுபாடு மகத்தானது. பலமுறை எங்களோடும், தனிகுழுவாகவும் சென்று ஆதிவாசிகளை சந்தித்து சுவிசேஷம் அறிவிப்பார். அவர் மரணம் டிரைபல் மிஷனுக்கு பெரிய இழப்பாகும்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM