அன்று யூதர்களின் முக்கிய பண்டிகையான பஸ்கா பண்டிகையின் கடைசி நாளான அதாவது 50வது நாளான பெந்தேகோஸ்தே நாளை (பெந்தேகோஸ்தே என்றால் 50வது நாள்) நினைவுக்கூறும் வண்ணமாக தங்கள் சபைக்கும் பெந்தேகோஸ்தே சபை என்று வைத்துக்கொண்டார்கள். அதாவது புதிய ஏற்பாட்டு சபையான முதல்சபையின் வழிவந்தவர்கள் என்று அறிவித்து கொண்டார்கள். ஆகவே அந்த சபைகள் மிக உற்சாகத்தோடு உயிருள்ள ஆவிக்குரிய சபையாக இருந்தது. ஆகவே மற்ற சபைகளிலிருந்து ஏராளமானபேர் பெந்தேகோஸ்தே சபைகளில் சோந்தார்கள். இப்போது மற்ற சபைகளைவிட பெந்தேகோஸ்தே சபை வசனத்திலும், ஆவியிலும் மிகவும் சிறப்பாக வளர்ந்தது. |