| கேள்வி: சகோ.D.G.S.தினகரன் அடக்க ஆரானைக்கும் நீங்கள் வரவில்லை, துக்கநிவர்த்தி கூட்டத்துக்கும் நீங்கள் வரவில்லை. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பலர் உங்களைப்பற்றியே விசாரித்துக்கொண்டிருந்தனர். ஏன் நீங்கள் வரவில்லை? தைரியமில்லையா?
பதில்: நீங்கள் யாருடைய
ஆள் என்று தெரியவில்லை என்றாலும் என் பதிலை கூறுகிறேன். சகோ.தினகரன் அவர்கள் மரணமடைந்த நாளில் நான்
நெடுமங்காடு என்ற மலைப்பகுதியில் ஊழியம் செய்துகொண்டு இருந்தேன். என் துணைவியார் மரண நிகழ்ச்சி
T.Vயில் வந்துகொண்டிருப்பதாக தொலைப்பேசியில் கூறினார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சேனல்கள் எதுவும் நான் ஊழியம் செய்த பகுதியில் யாருடைய வீட்டிலும் காணப்படவில்லை. ஆகவே உடனே
INTERNET மூலம் கம்யூட்டரில் கொஞ்சநேரம் பார்க்கமுடிந்தது. நீங்கள் தைரியமில்லையா என்று கேட்டீர்கள்! தைரியமிருந்தது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளின்போது நான் சென்னையில் இருந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கமாட்டேன். அவரைப்பற்றி பல வருடமாக தவறுகளை சுட்டிக்காட்டி எழுதிவிட்டு இப்போது அங்கு வந்திருந்தால் என்னை வெறுக்கும் பலருக்கு சங்கடமாக
Embarrassஆக இருக்கும். என் மனமும் அப்படித்தான் சங்கடமாக இருந்திருக்கும். மிகவும் மனவேதனையுடன் இருப்பவர்கள் அவரை மிகவும் நேசிப்பவர்கள் என்னைக்கண்டு மிகவும் ஆத்திரமடையவும் ஏதுவுண்டு.
|