|
 |
|
கேள்வி: மனம்திறந்து பேசுகிறேன், உள்ளத்தில் ஆழத்திலிருந்து பேசுகிறேன், இப்போது உண்மையாக ஒன்றே ஒன்றைச் சொல்லப்போகிறேன். உள்ளம் திறந்து பேசுகிறேன். இப்படிப்பட்ட
தலைப்புகளில் ஒருநாளும் உங்கள் பத்திரிக்கையில் செய்திகள் வருவதில்லை. மற்ற எல்லா பத்திரிக்கைகளிலும் அந்த வார்த்தைகளை காண்கிறோமே?
பதில்: என் பேச்சும், எழுத்தும், என்
எல்லா செய்திகளும் எப்போதும் உண்மைகளாக இருக்கும் போது, இப்போது ஒரு
உண்மையை சொல்லப்போகிறேன் என்ற தலைப்பில் தனியாக நான் எதற்காக எழுதவேண்டும். அதை வித்தியாசப்படுத்தி ஏன் தனியாக பிரசங்கிக்கவேண்டும். சிலர் பிரசங்கத்திலும் ஒரு
உண்மையை சொல்லப்போகிறேன் என்று அந்த வார்த்தையை உபயோகிப்பார்கள். அப்படியானால் இதுவரை பேசியது உண்மையில்லை என்றாகிறதே! என்னைப்பொருத்தவரை என் வாசகர்களோடானாலும், என் குடும்பத்தினற்களோடானாலும் எதை பேசும்போதும் உள் ஒன்றும், புறம் ஒன்றும் வைத்துக்கொண்டு நான் பேசுவதில்லை.
கர்த்தரும் உள்ளதை உள்ளதென்றும் இல்லாதததை இல்லை என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆகவேதான் நீங்கள் இப்போது கேட்டதைப்போல்
உள்ளம் திறந்து பேசுகிறேன், உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசுகிறேன், மனம் திறந்துப் பேசுகிறேன் போன்ற
வித விதமான தலைப்புகளில் என்னிடம் செய்திகள் இல்லை. என் வாசகர்களுக்காக நான் எழுதுவது எதிலும் நான் பொய் சொல்லுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட சில விஷயங்களை நான் சொல்லாமல், எழுதாமல் இருந்ததுண்டு. அவைகளை தேவஆவியானவர் எப்போது என்னை எழுத தூண்டுகிறாரோ அப்போது என் வாசகர்கள் அறியவும், எச்சரிக்கப்படவும், ஜாக்கிரதையாக இருக்கவும், ஜெபிக்கவும் வேண்டி எழுதுவேன். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் பலர் பிரசங்கம் செய்யும்போது இப்போது
ஒரு உண்மையை கூறும்படி கர்த்தர் கூறுகிறார் என்பார்கள். அப்படியானால் இதுவரை கர்த்தரே உண்மையை அவர் மூலம் பேசவில்லை என்றாகிறது. இவர்கள் பேசும் பிரசங்கத்தில் பெரும்பாலானவை பொய் என்று இவர்கள் வாயாலேயே அறிக்கையிடுகிறார்கள்.
|
கேள்வி: இத்துடன் போட்டோ காப்பி எடுத்து அனுப்பியுள்ள
வில்லியம் பிரன்ஹாம் அவர்களின் கலப்பு மார்க்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தில் ஆதியாகமத்தில் ஏவாள் சர்ப்பத்தோடு உடலுறவு கொண்டாள் என்றும், அப்போது சர்ப்பம் பாம்பாக இருக்கவில்லை. மனிதனாக இருந்தான் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளதை வாசித்தபின் நான் தொடர்ந்து அந்த புத்தகத்தை வாசிக்க பிரியபடவில்லை. இதைக்குறித்து உங்கள் பதில் என்ன?
பதில்: நீங்கள் புத்தகம் படிக்கும் விஷயத்தில் உங்கள் ஜாக்கிரதையை நினைத்து சந்தோஷப் படுகிறேன். வசனத்தில் இல்லாத ஒன்றை புத்தகத்தில் வாசிக்க நேரும்போது உடனே அந்த புத்தகத்தை வாசிக்காமல் நிறுத்தியது உங்கள் ஜாக்கிரதை தன்மையைக் குறிக்கிறது.
வில்லியம் பிரன்ஹாம் இரண்டாம்முறை வரப்போகிறார் என்று அவர் சீஷர்கள் வெல்லூர், சென்னை இன்னும் பல இடங்களில் சுவரில் எழுதி வைத்துள்ளதை நானே கண்டேன். அதிலிருந்தே பிரன்ஹாமையும், அவர் உபதேசத்தின் தன்மையும் அவர் சீஷர்கள்பற்றியும், விசுவாசிகளும் புரிந்துக்கொள்ளலாம். அவரின் நல்ல பிரசங்கத்தின் மத்தியில் விஷம் வைத்த செயலுக்கு இதை ஒப்பிடலாம். தயவு செய்து வேதவசனத்தில் எழுதப்படாத விஷயங்களை கர்த்தரின் வழியில் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு
உதவும் விதத்தில் மட்டுமே நாம் சிந்திப்பது நல்லது. இப்படிப்பட்ட புத்தகங்களை இனி வாசிக்காததோடு மட்டுமல்ல, மற்ற யாரும் அந்தமாதிரி புத்தகங்களை படித்து குழம்பிவிடாமல் இருக்க எரித்துவிடுங்கள் அல்லது மறைத்து வைத்துவிடுங்கள்.
|
கேள்வி: இயேசு வரிப்பணம் செலுத்தினாரே அது வீட்டு வரியா? நில வரியா? என்ன வரி?
பதில்: இயேசுவுக்கு வீடும், நிலமும் இல்லையே, அது வீட்டுவரியுமல்ல, நிலவரியுமல்ல, யூதர்கள்
எருசலேமை தங்கள் நாட்டின் தலைநகரமாகவும், யெகோவாவை தொழுதுக்கொள்ளும் முக்கிய இடமாகவும் கருதினார்கள். யூதர்கள் எங்கிருந்தாலும் எருசலேமில் நடைபெறும் பண்டிகைக்கு கட்டாயம் போய் சேருவது வழக்கம்.
இருபது வயதான ஒவ்வொரு
யூதனும் ஆலய செலவுக்காக அரை சேக்கல் நிறையுள்ள வெள்ளியை கொடுக்கவேண்டும். யாத் 30:13-16.
நெகேமியாவின் நாட்களில் 3ல் ஒரு பங்கு
சேக்கல் நிறையைதான் கொடுத்தார்கள். நெகே 10:32-34.
வெளிநாட்டில் சிதறியிருந்த
யூதரும், எருசலேம் வரும்போது இந்த வரியைத்தான் செலுத்தி வந்தார்கள். இந்த வரிப்பணத்தைத்தான் எருசலேமுக்கு கொண்டுபோய் செலுத்துவார்கள். இயேசுவிடம் கொடுக்கும்படி கேட்ட வரி பணமும் இதுவே. மத் 17:24-27.
|
கேள்வி: வெள்ளி பணத்தில்
தேவனுடையது என்றும், ராயனுடையது என்றும் இருக்கிறதே அது எப்படி?
பதில்: அரை சேக்கல் வெள்ளி என்பது அந்த நாட்களில் ஒரு நபரின்
ஒருநாள் வேலை கூலியாம். இரண்டு டிராக்மா (Dracamae) நாணயங்களுக்கு சம மதிப்புள்ளது.
டிராக்கமா என்பது அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த
ஒரு வெள்ளி நாணயம் ஆகும்.
வெளிநாட்டிலிருந்து
எருசலேம் ஆலயத்துக்கு வரி செலுத்த விரும்பியவர்கள் இந்த டிராக்மா நாணயங்களை ஆலயத்துக்குள் கொண்டு வரக்கூடாது. ஏனெனில் அந்த நாணயத்தில்
அரசனின் உருவம் பதித்திருக்கும் அதிலிருந்த அரச உருவத்தை யூதர்கள்
சிலையாக கருதினார்கள். நமது இந்திய நாணயத்திலும் அந்தகாலத்தில் ஒருரூபாய் நாணயத்தில்
ராஜா தலை இருந்ததை பார்த்திருப்பீர்கள். அதைப்போல்
இந்த உருவம் பதித்த பணம் இராயனுடையது என்றும், அரசனின் உருவம் பதிக்கப்படாததை தேவனுடையது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
காசுக்கடைக்காரரின்
(Money
Exchange) பலகைகளை இயேசு ஏன் கவிழ்த்தார். அந்நிய நாடுகளில் இருந்து வருகிற யூதர்கள்
அரசனின் உருவம் பதித்த மற்றும் வெளிநாட்டு பணங்களை ஆலய வளாகத்தில் கூடியிருக்கும் காசுக்காரர்களிடம் (வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் அமெரிக்கா டாலரை இந்திய ரூபாயாக மாற்றுவதைப் போல) மாற்றுவார்கள்.
வெளிநாட்டு நாணயங்களைக் கொடுத்து அதற்கு சமமான ஆலய நாணயங்களை வாங்கி ஆலயத்தில் படைப்பது வழக்கம். அப்படி மாற்றுவதற்கு ஏறத்தாழ நாலிலொரு பங்கை கமிஷனாக (Commision)
காசுக்கடைக்காரர் (Money
Exchanger) எடுத்துக்கொள்வார்கள். அதில் சரியான அளவு நாணயம் மாற்ற பணம் கொடுக்காமல் அதிக கமிஷன் தாங்கள் எடுத்துக்கொண்டு கொஞ்சம்மட்டும் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டுவார்கள். இவ்வகையான பணகமிஷன்மூலம்
கொள்ளையடிப்பதை கண்டனம் செய்யவே இயேசு கிறிஸ்து காசுகடைக்காரர்களின் பலகைகளை கவிழ்த்தார். ஆலயத்தில் நடைப்பெறும் பணமாற்றத்தை
கொள்ளை என்றார். மட்டுமல்ல, பலிச்செலுத்த பல வகை மிருகங்களை குறிப்பாக சிறிதும், பெரிதுமான
புறா, ஆடு, மாடுகளை பாவ நிவாரணபலிக்காக ஆலய வாசலில் கொண்டுவந்து கறிகடையைப்போல வியாபாரம் செய்வார்கள். அதில் சம்பாதித்த பெரும்தொகையை ஆசாரியர்களுக்கு லஞ்சமாக கொடுப்பார்கள். இவர்களை விரட்டவே இயேசு கிறிஸ்து
சவுக்கை கையில் எடுத்தார். ஆலய வருமானத்தை
வியாபாரம்போல மாற்றியதால் இயேசுகிறிஸ்து சவுக்கை எடுத்து தேவ பிரசன்னத்தைக் கெடுக்கும் அவர்களை விரட்டி அவர்களை
கள்ளர்கள் என்று இயேசு கூறினார்.
குறிப்பு: இப்போதும்
CSI, லூத்தரன் சபைகளுக்காக மிஷனரிமார்கள் வாங்கி போட்ட சபை நிலங்களை விற்கும் பிஷப்மார்கள், சபை பொறுப்பாளர்கள் ஆகியவர்களை
கள்ளர்கள் என்று குறிப்பிட்டு துண்டுபிரதிகளை பல டையோசிஸ்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கேரளா
CSI டையோசிஸ்ஸில் தளிக்குளம்
CSI சபைக்கு சொந்தமான நிலத்தை 2.73 கோடி ரூபாய்க்கு பிஷப்
Rt.Rev.குருவில்லா அவர்களின் மேற்பார்வையில் விற்பனை செய்ததை இப்போது
கேரளா கோர்ட் தலையிட்டு விற்பனையை நிறுத்தியுள்ளது. இப்படி ஆங்காங்ககே
CSI சபையினர்,
CSI சொத்து பாதுகாப்பு சங்கங்களையும் கிறிஸ்தவ விழிப்புணர்வு சங்கங்களையும் தொடங்கி
சபைசொத்துக்களை விற்பனை செய்வதை தடுத்து வருகிறார்கள். இது சபை மக்களுக்குள் நல்ல விழிப்புணர்ச்சியை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல அடையாளமாகும். |
கேள்வி:
கள்ளத்தீர்க்கதரிசிகள் கடைசி காலத்தில் எழும்புவார்கள்..... என்று சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதியதை குறிப்பிட்டு தன்னைப்பற்றியும், சாது சுந்தர் செல்வராஜைப் பற்றியும் நாங்கள் எல்லாம் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று தன்னையும் அறியாமல் வின்சென்ட் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார் என்றும்,
பரலோக கமிட்டி என்று அடிக்கடி இவர்கள் கூறும் புளுகுகள் போலத்தான் வின்சென்ட் செல்வகுமாரின் ஊட்டி தீர்க்கதரிசனம் அமைந்துள்ளது என்று நீங்கள் எழுதினீர்கள். அப்படியிருக்க அவரின் பத்திரிக்கையில்
வெளிவந்த செய்தியை மட்டும் அவர் பெயர் குறிப்பிடாமல் நீங்கள் எப்படி ஜாமக்காரனில் வெளியிடலாம்? அந்த கட்டுரையின் புகழ் அவருக்கு சேரக்கூடாது என்பதுதானே உங்கள் எண்ணம்!?
பதில்: தவறான உபதேசம் கொண்டவர்கள்கூட சில சமயங்களில் நல்ல தகவல்களை வெளியிடலாம். அந்த தகவல் ஜாமக்காரன் வாசகர்களுக்கு பிரயோஜனமாக இருக்குமானால், அந்த செய்தி கண்டிப்பாக நம் வாசகர்கள் அறியவேண்டும் என்று நான் அறிந்தால் அதை
Selected என்று குறிப்பிட்டு ஜாமக்காரனில் எழுதுவேன். அதன் அர்த்தம் அந்தத் தகவல் நான் தொகுத்ததல்ல என்று வாசகர்கள் அறியவேண்டும் என்பதாகும். அதேசமயம் அவருடைய பெயர் குறிப்பிட்டால்
பரலோக கமிட்டி போன்ற அவர்களின் மற்ற தவறான உபதேசங்களையும்
கரடி தரிசனம் என்று இப்போது அவர் கூறும் தவறான தரிசன உபதேசத்தையும் வாசகர்களும் பின்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன்.
உதாரணமாக
"பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை" என்ற பாடல் மிக நல்ல அர்த்தம் உள்ள பாடலாகும். மட்டுமல்ல, அது எழுதப்பட்ட சூழ்நிலையும், நல்ல சாட்சியுள்ளது. அது எல்லாரும் அறியவேண்டிய சாட்சியாகும். ஆனால், அவரின் கடைசி காலங்களில் அந்த குறிப்பிட்ட ஊழியர் கர்த்தரைவிட்டே விலகி
நானே நாராயணன், நானே அல்லா,
நானே கிறிஸ்து என்று கூறிவிட்டார். அப்படிப்பட்டவரின் பெயரை நான் பாடும்முன் முகவுரையாக இவர்தான் இயற்றினவர் என்று கூறினால் பலவீனமான விசுவாசிகளுக்கு அவர் புதிய உபதேசம் குழப்பம் உண்டாக்குமே! ஆகவே பாட்டு எழுதியவரின் பெயரை கூறாமல் பாட்டு எழுதிய சூழ்நிலையைமட்டும் விவரித்து பிறகு அந்த பாட்டை பாடுவேன்.
கேள்வி கேட்ட நீங்கள் அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை நான் எழுதியிருந்தால் அவர் ஏஞ்சல் டிவியில் கூறும் பல கற்பனை வெளிபாடுகளை
தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கூறுவதையெல்லாம் வாசகர்கள் நம்பிவிட நேருமே! அவர் கண்ட தரிசனம் உண்மை, அவருக்கு
தீர்க்கதரிசி என்று அவரை விளம்பரப்படுத்த பொய்சாட்சி
சாது செல்வராஜ் ஏஞ்சல் டிவியில் தினம் அவரை சிபாரிசு செய்கிறாரே அதுபோதும்! ஜாமக்காரனில் அவர் கட்டுரை பெயரோடு வெளிவந்ததால் அந்த நபர் கூறுவது எல்லாம் உண்மை, அவர் சரியான ஊழியர் என்றல்லவா கிறிஸ்தவ மக்கள் நம்பிவிடுவார்கள்.
மேலும் அவர் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட தகவல்
வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையை நானும் அறிவேன். அதில் இன்னும் நிறைய குழப்ப செய்திகளை நான் வாசிக்க நேர்ந்தது. அதையெல்லாம் நான் அவர் கட்டுரையோடு சேர்த்திருந்தால் பலருடைய விசுவாச ஜீவியமே கேள்விகுறியாகி இயேசுவின் வழியைவிட்டே விலகி போகநேரும்.
வாசகர்களில் சிலர் என்னை பிடிக்காதவர்களும் உண்டு. அவர்களில் பெரும்பாலோர் கேட்கும் கேள்வி நீங்கள் ஊழியர்களின் கெட்டபாகங்களையே சுட்டிக்காட்டுகிறீர்களே! அவர்களின் நல்ல பாகங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாதா? ஏன் அவர்களின்
நல்ல செய்தியை வெளியிடக்கூடாது என்பார்கள். அப்படி நல்ல செய்திகளை, நல்ல குணங்களை எடுத்து எழுதும்போது எப்படி அவரைப்பற்றி நீங்கள் எழுதலாம் நீங்கள்தான் அவரின் தவறான காரியங்களைக்குறித்து எழுதினீர்கள். அப்படியிருக்க அவரின் நல்ல காரியங்களை எழுத உங்களுக்கு என்ன உரிமையுண்டு என்றும் கேட்கிறார்கள். இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள். ஆகவே இவர்கள் பேசுவதையெல்லாம் நான் கவனித்தால் என் வாசகர்களுக்கு நல்லவைகளை அறிவிக்க முடியாமல்போகும். நல்ல செய்தி என் விரோதி எழுதினாலும் சரி, அது என் வாசகர்களுக்கு நன்மை பயக்குமானால் வெட்கப்படாமல் அவர்களின் நல்ல செய்தியை மட்டும் எழுதி அறிவிக்க நான் தயங்குவதில்லை.
|
கேள்வி: இந்தியாவில் 2008ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் பம்பாய் நகரத்தில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக்கொன்றனர். அப்படி வந்த தீவிரவாதிகள் அனைவரும் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன்
கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிப்பட்டான். இப்போது அவனுக்கு
மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டது. அதைக்குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில்: இந்தியாவுக்குள் நுழைந்து தாக்கிய
தீவிரவாதிகள் அனைவரும் தாக்குதல் நடத்தியபின் தாங்கள் உயிரோடு திரும்பிபோவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை. தாங்கள் மரிப்போம் என்பதை திட்டமாய் அறிவார்கள். அந்தளவு இஸ்லாமிய மதத்தில் ஒரு பகுதியினர்
ஜிகாத் - பரிசுத்த யுத்தம் அல்லாவுக்காக என்ற தவறான கொள்கையினால் அந்த தீவிரவாதிகள்
மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாய் தவறான கொள்கைக்கு
உயிர்விடும் ஆயத்தத்துடன்தான் இந்தியாவுக்குள் நுழைந்து ஏராளமானவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு
மரண தண்டனை ஒரு பொருட்டல்ல. தண்டனை என்பது ஒருவன் திருந்துவதற்காக அளிக்கப்படுவதாகும். நாம் குடும்பத்தில் பிள்ளைகள் தவறு செய்யும்போது தண்டிக்கிறோம். அவர்கள் அந்த தவறை திரும்ப செய்யாதிருக்க அப்படி செய்கிறோம். ஆனால் தண்டனை
மரணமானால் தண்டிக்கப்பட்ட நபர் திருந்த வழியேயில்லையே! அதனால்தானே
தீபாவளி பண்டிகையில் சொல்லப்படும் காரணம் தவறானது என்கிறோம். நரகாசூரன் என்ற கொடூரமானவன் இந்து மதத்தினரின் கடவுளால் கொல்லப்பட்டதை நினைத்து சந்தோஷப்படும் வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.ஆனால் நம் தெய்வம் இயேசு கிறிஸ்து கூறுகிறார். லூக் 9:56
மனுஷகுமாரன் மனுஷனுடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். இந்த கிறிஸ்தவ மார்க்க கான்ஸப்ட்டுக்கும்,
துஷ்டர்களை அழித்து - நல்லவர்களை காப்பாற்ற தெய்வம் வருகிறார் என்ற இந்துமத கான்ஸப்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தீர்களா! எவ்வளவு தவறு செய்தாலும் அல்லது கொலையே செய்தாலும் அதற்கு மரணம் என்பது தண்டனை ஆகாது.
சென்னையில் மெடிக்கல் காலேஜ் மாணவன் மற்ற சக மாணவனை கொன்று துண்டு துண்டாக அறுத்து பெரிய சூட்கேஸில ்போட்டு வீசினானே - அவனுக்கு
ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். இன்று ஜெயிலில் அவன் மனந்திரும்பிய கிறிஸ்தவனாகமாறி ஜெயிலுக்கு உள்ளேயே ஜெபகூட்டங்கள் நடத்தி அநேகரை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தினானே! எந்த மனிதனுக்கும் திருந்த சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமானால் அவன் உயிரோடு இருக்கவேண்டும். அவன் உயிரோடு இருக்கும்படியான தண்டனையாக அமைவது நல்லது.
|
கேள்வி: இப்போது எங்கு பார்த்தாலும் ஆராதனை, ஆராதனை என்று கூறி பாடும்பாட்டை தானே கேட்கிறோம். நாம் அப்படி பாடலாமா? சகோ.சாரா நவரோஜி -
TPM (CPM) சபையினர் இவர்கள் எல்லாரும் பாட்டுகள் இயற்றியுள்ளனர். ஆனால் இவர்கள் பாட்டில் ஆராதனை ஆராதனை என்ற வார்த்தைகளை பெரிதுப்படுத்தாமல் பாடல் இயற்றி அது வெற்றிகரமாக கிறிஸ்தவ மக்களிடையே வலம் வந்தது. இப்போதைய பாடலில் மட்டும் எல்லா பாடலிலும் ஆராதனை என்ற வார்த்தை மிக அதிகமாக இடம்பெறுகிறதே ஏன்?
பதில்: ஆராதனை என்ற வார்த்தையை இவர்கள் சேர்ப்பது, இப்போதைய டிரன்ட் (வழக்கம்) ஆகும். ஆராதனை என்பதற்கு இவர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ
அல்லேலுயா என்ற வார்த்தையை பாடலில் உபயோகிப்பதைப்போல்
ஆராதனை என்று கூறி தேவனை கூப்பிடுகிறார்கள்.
ஆராதனை என்ற வார்த்தை தேவனை அழைக்கும் பெயராகவே மாறிவிட்டது. அர்த்தம் தெரியாமல் எவ்வளவுபேர் தங்கள் கைகளை உயர்த்தி பயபக்தியுடன் இப்படி பாடுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சபையில் அல்லது கூட்டத்தில்
நடத்துகிறவர்களுக்கு அப்படியே கீழ்படியும் கிளிப்பிள்ளைகள். ஆமென் சொல்லுங்கள் என்றால் உடனே
ஆமென் என்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆமென் கூற சொல்கிறார்களே
ஏன்? என்று இவர்கள் சிந்திப்பதில்லை. அல்லேலுயா சொல்லுங்க, கை உயர்த்தி அல்லேலுயா சொல்லுங்கள் என்றால் அப்படியே கூறுவார்கள்.
ஏன் கூறுகிறோம்? அதில் என்ன ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை. வீதியில் குரங்காட்டி தடியெடுத்து ஆடு ராமா என்றால் குரங்கு ஆடும், குட்டிகரணம் போடு என்றால் குட்டிகரணம் போடும். இப்போதைய
பெந்தேகோஸ்தே சபைகளின் நிலையும் கரிஸ்மேட்டிக் கூட்டத்தினர் நிலையும் இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது. குரங்குகள் கேள்வி கேட்காது, குரங்குகள் யோசிக்காது. என்ன செய்வது ஜனங்களுக்கு இப்படிப்பட்ட ஆராதனை பிடிக்கிறதே!
ஆராதனை என்ற வார்த்தை இல்லாத பாட்டு ஜீவன் இல்லாத பாட்டாக மாறிவிட்டது. இது ஒரு
அலை (Wave). ஆராதனை, ஆராதனை என்ற வார்த்தைக்கு ஜனங்களிடம் சலிப்பு ஏற்பட்டபின் அது தானே நின்றுபோகும். அமெரிக்காவில் வேறொரு வார்த்தையில் பாட்டு தோன்றும் அப்போது இங்கும், நம் நாட்டிலும் ஆராதனை என்ற வார்த்தை மறந்து அமெரிக்கா உபயோகித்த புது வார்த்தை எல்லா பாடல்களிலும் வெளிவரும். காலம் மாறும்போது இவர்களும் இவர்களின்
ஆராதனை பாடல்களும் தானே மாறிவிடும். இவைகள் எல்லாம் நம் ஆட்கள் மூளையில் உதித்ததல்ல எல்லாம் அமெரிக்கா இறக்குமதி சரக்குகள் ஆகும். ஆனால் பாஸ்டர்கள் பிரசங்கத்தின் நடுவில்
ஆமென் அல்லது அல்லேலுயா கூறுவது மாறவே மாறாது. காரணம், உங்களை
ஆமென் அல்லது அல்லேலுயா என்று கூற சொல்லும் இடை வெளியில்தான் இவர்களின் பிரசங்கத்தில் பேசவேண்டிய அடுத்த வார்த்தையை ஞாபகத்தில் கொண்டு வரமுடியும். அந்த சவுகரியம் நடுநடுவே
அல்லேலுயா, ஆமென் என்று கூறும்போது உண்டாகும் அந்த தொழில் இரகசியம் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்குதான் விளங்கும் உங்களுக்கு விளங்காது. அவர்கள் சொல்லச்சொன்னார்களே என்று நீங்கள் தொண்டை கிழிய காரணம் தெரியாமல்
ஆமென் அல்லேலுயா என்று நீங்கள் கூறியது உங்களுக்கு வேஸ்ட்.
|
கேள்வி: மே மாதம்
FMPB மாநில முகாமில் பெத்தேலைப்பற்றி பெத்தேல் நிர்வாகத்தைப்பற்றி பல கேள்விகள் கேட்கப்படும், அப்போது பெத்தேலில் பெரிய மாற்றம் வரலாம் என்றீர்கள், ஒன்றும் காணோம்?
பதில்: இந்த ஜுன் மாத ஜாமக்காரன் இதழை மே மாதம் 20ம் தேதிக்குள் எழுதி முடித்தால்தான் பத்திரிக்கை அச்சாகி வெளிவந்து விலாசங்கள் ஒட்டி ஜுன் 15ம் தேதிக்குள் தபாலில் சேர்க்கமுடியும். ஆகவே மே மாதம் நடந்த
FMPBயின் மாநில முகாமில் நடந்த பெத்தேலைப்பற்றியும் செய்திகளின் விவரம் ஜுன் மாத ஜாமக்காரனில் வெளிவராது. ஆனால் உங்கள் கேள்விக்கான பதில் இப்போதே விளங்கிவிட்டது. பெத்தேலுக்கு நீங்கள் எல்லாம் எதிர்ப்பார்த்த மாற்றம் நிச்சயம் இப்போதைக்கு நடைபெறாது. மாநில முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே
Dr.சாம் கமலேசன் அவர்கள் தன்னுடைய ஊழிய ஒழுங்குகளையெல்லாம் மாற்றி கடல் கடந்து சென்றுவிட்டார்.
அக்டோபர் மாதம் இந்தியா திரும்பி வந்து பெத்தேலின் வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற செய்தி என்னிடம் அறிவித்துள்ளார்கள்.
 |
ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்.
பெத்தேலை உருவாக்கியவர்கள், ஸ்தாபகர்கள் என்பவர்கள் இரண்டு முக்கியமான நபர்களாவர். ஒருவர்
Dr.சாம் கமலேசன் மற்றவர்
சகோ.P.சாமுவேல் அவர்கள் ஆவர். பெத்தேலை
Mr.ஆண்டர்சன் (டென்மார்க்) என்பவரிடமிருந்து வாங்கி உருவாக்க ஆலோசனை கொடுத்தவர்
Dr.சாம் கமலேசன் அவர்கள். அதற்கான பணவுதவிகளுக்காக உலக நாடுகளில் அலைந்து
Sponsors உதவியாளர்களை கண்டுபிடித்து கொடுக்கும் பணியை மிக அருமையாக செய்தவர்
Dr.சாம் கமலேசன் அவர்கள். அந்த உதவிகளை வாங்கி பெத்தேலை அருமையாக செதுக்கிய
சிற்பி சகோ.P.சாமுவேல்
அவர்களாவார். அவருடைய கடுமையான உழைப்பு பிரம்மிக்கதக்கது. ஒரு
வாட்ச்மென்போல் டார்ச்சை கையில் பிடித்து இரவெல்லாம் பெத்தேலை சுற்றிசுற்றி வந்ததை பலமுறை நானே பார்த்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை பெத்தேலை சுற்றிவரும்போதெல்லாம் இந்த
நிலத்தில் என்ன செய்யலாம், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு அந்த இடத்தை இப்படி பயன்படுத்தினால் என்ன? என்று தம் சொந்த ஸ்தாபனம்போல் தன் சொந்த குடும்பத்தைக்கூட கவனிக்காமல் கடினமாக தன் சரீர உழைப்பை கொடுத்தவர்
சகோ.P.சாமுவேல் அவர்கள் ஆவார். இவர்கள் இரண்டு பேர்களின்
திட்டமிடல் - உழைப்பு ஆகியவைகள் சேர்ந்ததுதான்
பெத்தேல் என்ற அருமையான ஸ்தாபனம்.
இவர்களில் ஒருவர் மரித்துப்போனார். உயிரோடிருக்கும் ஸ்தாபகர்களில் மற்றவர்
Dr.சாம் கமலேசன் அவர்கள் ஆவார். இப்போது இருக்கும்
பெத்தேல் உருவாக காரணமாக இருந்தவரும், ஸ்தாபகருமான
Dr.சாம் கமலேசன் அவர்களுக்கே செத்துப்போய்கொண்டிருக்கும்
பெத்தேலை காப்பாற்ற அக்கறையில்லை என்றால், உங்களுக்கும் எனக்கும் அக்கறை என்ன வேண்டி கிடக்கிறது. இத்தனை வருடங்களாக ஏராளமான புகார் கடிதங்களை அவர் வாசித்தும், பல தேவமனிதர்கள் நேரில் அமர்ந்து பெத்தேலைக்குறித்து பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் கடல்கடந்து சென்று விட்டார் என்றால் பெத்தேலைப்பற்றி அதின் முன்னேற்றதைக்குறித்த விஷயத்தில் அவரின்
அக்கறையின்மை காரணமல்ல, ஏதோ ஒருவித பயம். அவரால்
துணிந்து முடிவு எடுக்கமுடியாத நிலை. இவைகளெல்லாம் பார்க்கும்போது அவர்
வாய், அவர் கைகள் கட்டப்பட்ட நிலையைத்தான் காண்பிக்கிறது. ஏதோ (ஒரு பைண்டிங்) ஒருகட்டுக்குள் அகப்பட்டுள்ளதாக பலரால் யூகிக்கப்படுகிறது.
பெத்தேலின்
தலைமை
FMPBயில் சம்பந்தப்பட்டவர்களின் கையில் போவதை பலர் விரும்பவில்லை. பெத்தேல் நிர்வாகத்தை ஏற்றெடுக்க, பெத்தேலை அறிந்தவர், புரிந்துக்கொண்டவர் அதன் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர் யாரையும்
Dr.சாம் கமலேசன் அவர்களால் இப்போதைக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பெத்தேலின் பழைய தலைமையின்மேல் எத்தனை
புகார் இருந்தாலும் அதே நிர்வாகி தான் தொடர்வார் என்று கூறி போய்விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பகால பெத்தேல் பைலாவில் 3 வருடத்துக்கு ஒருமுறை தலைமை மாறவேண்டும். ஏற்கனவே பதவி வகித்தவர் அடுத்தமுறை
பெத்தேல் பதவிக்கு வரமுயலக்கூடாது என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. அதோடு இன்னும் சில சட்டங்கள் அதில் எழுதியுள்ளது. மாதிரிக்கு பழைய பைலா கீழே வெளியிட்டுள்ளேன்.
|
 |
 |
மேலே எழுதப்பட்ட
பைலா இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அந்த பழைய சட்டத்தை நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டார்கள்.
பெரியமலை
காட்டில்
Dr.ஜெயசந்திரன், அவர்
மனைவியும் டாக்டர் இவர்கள் அந்த
ஆதிவாசிகளுக்காக ஆரம்பித்த ஆஸ்பத்திரி இன்று எத்தனை பெரியளவில்
குறுகியகாலத்தில் சிறப்பாக வளர்ந்துவிட்டதே!
ஓசூரிலிருந்தும், தர்மபுரியிலிருந்தும் வியாதியஸ்தர்கள் அந்த
டாக்டரைத்தேடி பெரியமலைக்கு வந்துபோக ஆரம்பித்துவிட்டார்களே! காரணம்,
சமர்பணம், தியாகம், ஜெபம், அர்பணிப்பு, தாழ்மை இவைகள் யாரிடம் உண்டோ
அவர்களால்தான் எந்த ஸ்தாபனத்தையும் வளர்ச்சியுற செய்ய முடியும்.
நீங்களும் நானும் அவரவர் இடத்தில் அமர்ந்து பெத்தேலுக்காக
கண்ணீர் வடித்து ஜெபிப்பதை தவிர இனி வேறு ஒருமார்க்கமும் கண்ணுக்கு
எட்டிய தூரம்வரை காணமுடியவில்லை. ஜெபியுங்கள். கர்த்தராலே கூடாத காரியம்
உண்டோ? |
கேள்வி: நீங்கள் ஆரம்பித்த TRIBAL MISSION மிஷனரி ஸ்தாபனத்தின் சபைகள் எந்த விதமான ஆராதனையை பின்பற்றுகின்றன?.
பதில்: உண்மையில் இந்த கேள்வி பிரச்சனையுள்ள கேள்வியாகும்.
Tribal Mission ஊழியத்தை நானும், சிலரும் முதன்முதல் ஆரம்பித்தகாலத்தில் சபைகள் உருவாக்கப்படவில்லை. சுவிசேஷம் மட்டும் அறிவித்தோம். அதன்பின் சுவிசேஷம் அறிவித்த இடங்களுக்கு மிஷனரிகளை அனுப்பினோம். அவர்களும் சுவிசேஷ ஊழியம் மட்டுமே செய்தார்கள். சில வருடத்தில் ஆதிவாசி ஆத்துமாக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர். சபைகள் எழும்பின.
பல பிரிவு உபதேசங்களைக்கொண்ட சபைவிசுவாசிகளை ஆவியானவர்
Tribal Mission மூலமாக ஒன்றாக ஒரே நோக்கத்துடன் இணைத்தார். அதில்
Jacobit, Catholic, Marthoma. CSI, பெந்தேகோஸ்தே சபை, இவாஞ்ஜிலிக்கல் சபைகள் என்று பல சபைவிசுவாசிகள் தங்கள் உபதேசங்களையெல்லாம் மூட்டையாககட்டி தூரம் போட்டுவிட்டு
இயேசு கிறிஸ்துவே தெய்வம், இரட்சகர், பாவ பரிகாரி என்று அறிவிப்பதில் கருத்து வேற்றுமையின்றி ஒருமனதுடன் இணைந்து செயல்பட்டோம்.
Dr.முரளிதர்.MD., அவர்கள் எங்களோடு
இணைந்தபோது அன்று நானே அவரிடம் கூறினேன். நீங்கள்
AOG சபை அங்கத்தினராக இருந்தாலும்
மிஷனரி பணியில் உபதேசங்கள் எதையும் முக்கியப்படுத்திவிடாதீர்கள். அது கர்த்தருக்கும் பிரியமில்லை. நம் நோக்கம்
இயேசு கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றுதான் என்று கூறினேன். அவரும் அதை மிக நன்றாக உணர்ந்தவராக எங்கு சென்றாலும், எங்கு பிரசங்கித்தாலும்
உபதேசங்கள் எதையும் பேசாமல் கிறிஸ்துவையே மிக அருமையாக வைராக்கியமாக பிரசங்கித்தார். அதனால்தான் பின்நாளில் அவருக்கு கர்த்தர் பிரசங்க தாலந்து கொடுத்து ஊழியத்தில் வல்லமையாக உபயோகப்படுத்தினார். வேதாகம கல்லூரிகளில் படித்த பண்டிதர்களைவிட மிக ஆழமான வசன வெளிப்பாடுகளை ஆவியானவரே அவருக்கு விசேஷமான முறையில் வெளிப்படுத்தினார். அதன்பின் எல்லா சபைகளும் உபதேச வித்தியாசம் பாராட்டாமல்
Dr.முரளிதர் அவர்களை கன்வென்ஷன் கூட்டங்களில் எல்லா சபையினரும் உபயோகித்தார்கள்.
நாளடைவில்
Tribal Mission மூலமாக ஆரம்பிக்கப்பட்ட சபைகளில் ஆத்துமாக்கள் அதிகம் சேர ஆரம்பித்தவுடன் சபைகளின் எண்ணிக்கை பெருகின. அந்த சபைகளில் ஊழியம் செய்ய தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள், மிஷனரிகள், பாஸ்டர்கள், பெரும்பாலும் பெந்தேகோஸ்தே சபைகளின் பின்னணியில் உள்ளவர்களாக வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலமாக மிக அருமையாக மிஷனரி ஊழியங்களும் நிறைவேற்றப்பட்டன. நாளடைவில்
கரிஸ்மேட்டிக் ஆராதனைமுறை -
Tribal Mission சபைகளுக்குள் நுழைய ஆரம்பித்தன.
IEM, FMPB, KTM போன்ற மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட சபைகளில் மட்டுமே கரிஸ்மேட்டிக் ஆராதனை என்ற வியாதி பரவவில்லை. இவர்கள் ஆரம்பித்த சபை விசுவாசிகள் வசனத்தில் ஊன்றக்கட்டப்பட்டார்கள். இந்த குறிப்பிட்ட ஸ்தாபனங்களைத்தவிர மற்ற எல்லா மிஷனரி ஸ்தாபனங்களிலும், சில இடங்களில்
CSI சபைகளிலும் கரிஸ்மேட்டிக்
பரவச ஆராதனை முறைமைகள் தடையின்றி பிரவேசிக்க ஆரம்பித்துவிட்டதை நான் சென்ற இடங்களில் எல்லாம் காண நேர்ந்தது. இந்த கரிஸ்மேட்டிக் ஆராதனை முறை சபை ஆராதனையின்
ஆரம்பத்திலும், முடிவிலும் நடக்கும். துதி ஆராதனை
(Worship Service) என்ற பெயரில் எழுந்து நின்று பல கோரஸ்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பாடுவதும், பாடும் சமயத்தில் ஆண்களும், பெண்களும்
கைகளை உயர்த்தி, கைகளை ஆட்டிக்கொண்டே பாடுவது இப்போதைய நவீன ஆராதனை முறையாக மாறிக்கொண்டுவருகிறது.
இப்போது சில இடங்களில்
CSI சபைகளிலும், மார்தோமா சபைகளிலும் இந்த புதிய ஆராதனை முறையை காண்கிறேன். இதில்
பிழை ஏதும் இல்லை. சொல்லப்போனால் அது நல்ல உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. ஆராதனையின் ஆரம்பத்தில் மெய்மறந்து தேவனை பாடல் வாயிலாக மகிமைப்படுத்துவதும், துதிப்பதையும் நானும் விரும்புகிறேன். பலமுறை அது என்னையும் என் ஆத்துமாவையும் சந்தோஷப்படுத்தியுள்ளது. அந்த ஆராதனை நேரத்தில் கலந்துக்கொள்வதற்காகவே ஆராதனைக்கு சீக்கிரமாக பலர் வந்துசேருகின்றனர். ஆனால், இந்த மாதிரி ஆராதனையை நடத்தும் நபர்கள் சரியான வசனதெளிவு இல்லாததால் பாடல் ஆராதனையில் மக்களை உற்சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில்
கைகளைத்தட்ட சொல்லிவிடுகிறார்களே, அங்கேயிருந்துதான் இவர்கள் ரயில் தண்டவாளத்தைவிட்டு இறங்கிய நிலையில்
பற்பல சப்தங்களை இவர்கள் வாயிலிருந்து புறப்பட விசுவாசிகளை பயிற்சிவிக்கிறார்கள். அதோடு வானளாவிய
சப்தங்கள் மூலமாக ஆவியானவரை கீழே இறக்க சரீர முயற்சியில் ஏற்பாடு செய்கிறார்கள். சில குறிப்பிட்ட பாடல்களை
மிக வேகமாக பாடவைத்து மனோதத்துவ ரீதியில் சரீரத்தை
பரவச நிலைக்கு மக்களை திசை திருப்பி அழைத்து செல்கிறார்கள். எவ்வளவு பலத்த சப்தங்களை உண்டாக்குகிறார்களோ அவ்வளவு வல்லமையாக ஆவியானவர் இறங்குவார் என்ற முட்டாள்தனமான ஆலோசனைகளை கூறி மக்களை நம்ப வைக்கிறார்கள். அந்த பாட்டின்
உச்சநிலை மதுபான போதைக்கு ஒப்பானது ஆகும்.
ஜெயிலில் உள்ள
சாது நித்தியானந்தா, நிர்வாண சாமியார் ஓசோ ஆகியவர்கள் கற்றுதரும் யோக முறையிலும் அந்த
உச்சநிலை மனோதத்துவ முறையில்தான் மக்களை மெய்மறக்க செய்கிறார்கள். ஒருமுறை அதை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் அனுபவிக்க தூண்டப்படுவார்கள். இது மிக ஆபத்தான மூளை சலவையாகும்.
அதனால்தான் இப்படிப்பட்ட முறையில் உள்ள ஆராதனையில் கலந்து அனுபவித்தவர்கள் சத்தம் இடாத ஆராதனை,
அல்லேலுயா என்று சத்தமாக கூறாத அல்லது ஆமென், ஆமென் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறாத,
சபைகள் எல்லாம் செத்த சபைகளாக இவர்களால் அழைக்கப்படுகிறார்கள். ஆவியில்லாதவர்கள் என்றும் இவர்களை அழைக்கிறார்கள்.
ஆவியிலும், ஆத்துமாவிலும் ஆராதிக்கும் ஆராதனை இப்போது வெகுவாக குறைந்துவிட்டன.
வெறும் சத்தம் மட்டுமே சபைகளில் காணப்படுகிறது. அவர்களுக்குள்
ஆத்ம சந்தோஷம் இல்லை.
அதோடு இப்போதெல்லாம் பெரும்பான்மையான சபைகளின் முடிவுஆராதனையில் பரிசுத்த முத்தம் என்ற பெயரில் சில அவலட்சனங்களை இப்படிப்பட்ட சபைகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். இதில் மக்களை மறைமுகமாக
பாவத்துக்கு மக்களை அழைத்துசெல்லும் அபாயம் உண்டு என்பதை இவர்கள் அறியவில்லை.
பெண்களை-பெண்களும், ஆண்களை-ஆண்களும் முத்தம் செய்தாலும், அது பரிசுத்த முத்தமாவதில்லை. காரணம்
பிசாசு இப்போது ஹோமோ-லெஸ்பியன் போன்ற
ஆபாச உறவுகளை சபைகளிலும் பலப்படுத்த மிஷனரி சபைகளிலும், பெந்தேகோஸ்தே சபைகளிலும் அவன் கால் ஊன்றிவிட்டான்.
சபையில்
ஆணோடு-ஆண் முத்தம் செய்து அதன்பின் ஆராதனை முடிந்தவுடன்
ஹேமோசெக்ஸ் உறவுக்கு இவர்களில் சிலர் தனியாக போய்விடுகிறார்கள். சபையில்
பெண்ணோடு-பெண் முத்தம் செய்து ஆராதனை முடிந்தவுடன்
லெஸ்பியன் உறவுக்கு இவர்களில் சிலர் தனியாக போய்விடுகிறார்கள். இந்த சம்பவம் என்னிடம் ஜெபிக்க வந்த பெந்தேகோஸ்தே சபை வாலிப ஆண்-பெண் இருவரிடமிருந்து இந்த செய்தியை கூறியவர்கள் அந்த பாவத்தில் விழுந்து மனம்திரும்பி எழுந்திருக்க ஆலோசனை பெற கேட்டு என்னிடம் வந்தார்கள். அறிந்துதான் இதை எழுதுகிறேன். இப்படி ஒரு பிரச்சனை ஆராதனை
பரிசுத்தமுத்தத்தில் ஆரம்பித்தது என்பதை சமீபத்தில்தான் அறிந்தேன். 1 கொரி 7:1 ஸ்திரீயை தொடாதிருப்பது புருஷனுக்கு நல்லது. இது பெண்ணுக்கும் பொருந்தும் வசனமாகும்.
மிஷனரி சபைகளுக்கு எச்சரிப்பாக இதை எழுதுகிறேன்:
பரம்பரை பெந்தேகோஸ்தே ஆராதனைகளை இப்போது சரிப்படுத்தமுடியாது. ஆனால் புதிய ஆதிவாசி விசுவாசிகளைகொண்டு ஆரம்பித்த புதிய சபை உருவாக்கும் மிஷனரிகள், பாஸ்டர்கள் நான் எழுதிய பதிலை ஆலோசனையாக எடுத்துக்கொண்டு நம் சபைகளையும், சபை விசுவாசிகளையும் காப்பாற்றுங்கள். வசன அடிப்படையில் சபையை நடத்துங்கள். சரீரத்தில் உண்டாக்கும் பரவசம் ஆராதனையுடன் தீர்ந்துவிடும். ஆனால் வசனத்துக்கு கீழ்படிவதின்மூலம் உண்டாகும் நிலையான சந்தோஷ ஆராதனை முடிந்தாலும் வெளியே போகும்போது எல்லா நாளும் எல்லா நிமிஷமும் வசனம் அவர்களை மகிழசெய்ய உபதேசியுங்கள். சபையில்லாமல் போனாலும், பாஸ்டர் இல்லாமல் போனாலும் வசனம் கடைசிவரை சபை மக்களை வழிநடத்தும். அந்த உதவியை சபை மக்களுக்கு செய்யுங்கள்.
CSI, மார்தோமா, லூத்தரன், பெந்தேகோஸ்தே ஆகிய எந்த சபைகளின் முறைகள் எதுவும் பின்பற்றாமல் இவைகளில் நல்லது எதுவோ, வசன அடிப்படை எதுவோ, தேவனை திருப்திப்படுத்தும் ஆராதனை எதுவோ அதை செயல்படுத்துங்கள்.
மிஷனரி ஸ்தாபனங்களில் உள்ள பொறுப்பாளர்கள் நம் மிஷனரி சபைகளை நடுத்துவதில் ஆராதனை முறையில்
நம் நிலை (Stand) என்ன? என்று தீர்மானிப்பது நல்லது. அதை செயல்படுத்த தீர்மானம் எடுப்பதும், மறுபரிசீலனை செய்வதும் மிஷனரி சபைகளுக்கு நல்லது இல்லை என்றால் ஆதிவாசிகள் காட்டுக்குள் கத்துவதுபோல, பிசாசு பிடித்து மக்கள் ஆடுவதுபோல நம் சபைகளிலும்
பரிசுத்த ஆவியின் நிறைவு என்ற பெயரில் சபை மக்கள் ஆட ஆரம்பிப்பார்கள். அப்படி சம்பவித்தால் அதற்கு காரணமானவர்கள் மிஷனரியானாலும், ஸ்தாபகரானாலும் கர்த்தரின் கோபத்துக்குள்ளாவார்கள். கஷ்டப்பட்டு ஆத்தும ஆதாயம் செய்து பிரயோஜனமில்லாமல்
போகும். எச்சரிக்கிறேன்!
தேவன் மிஷனரி சபைகளை நடத்தும்
பாஸ்டர்களை கணக்கு கேட்பார்.
தேவன் மிஷனரி ஸ்தாபன
பொறுப்பாளர்களை கணக்கு கேட்பார்.
மிஷனரி ஸ்தாபன பொறுப்பாளர்கள் ஜெபித்து ஒரு மனதோடு இயேசு கிறிஸ்துவை மட்டும் உயர்த்தும் திட்டத்தில் உட்கார்ந்து பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்
இப்போது கூறுகிறேன்.
Tribal Mission மூலமாக ஆரம்பித்த சபைகள் வசன அடிப்படையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. உபதேச விஷயத்தில் எந்த சபையையும் பின்பற்றாமல் வசன அடிப்படையிலான தனக்கென்றுள்ள பாணியில் ஆராதனை நடத்துகின்றனர். ஆனால் ஒரு சில சபைகள்
சில இடங்களில் மட்டும் சற்று குழப்பத்துடன் ஆராதனை நடத்துகின்றன. அதை சரிப்படுத்திவிடலாம். உங்கள் கேள்விக்கு நன்றி.
|
கேள்வி: 2010 மே மாதம் 19ம் தேதி ஆசீர்வாதம் டிவியில் அற்புத ஊழியர் சகோ.ஜான் சாலமோன் அவர்களின் நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அதில் சகோ.ஜான் சாலமோன் அவர்களின் மனைவி ஜெபநேரத்தில் பாடும்போது குதித்துக்கொண்டு அந்நியபாஷையில்
குச்சு குச்சு.. ஷரபலா என்று என்னென்னமோ கூறி சில வெளிப்பாடுகளையும் கூறினார் இது என்ன?
பதில்: அந்த குச்சு குச்சு ஷரபலா பாஷை ஆண்டவருக்கும் தெரியாது. பேசிய அவர்களுக்கும் தெரியாது. அவர்களையும் அந்த பாஷையையும், நடுக்கத்தையும் பரிசுத்த ஆவியானவரின் செயல் என்று நம்புவதற்கு
வேதவசனம் தெரியாத ஆட்கள் நிறையபேர் இருக்கிறார்களே! ஆகவே அவர்கள் பாஷைகள் தொடரும். தாங்கள் பேசியதை அவரவர்களே அறியார்கள். இப்படித்தான் இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளும், சபைகளின் உபதேசங்களும் இருக்கிறது. விதவிதமான அந்நியாஷை பேசியவர்களின் சிடி விரைவில் வெளியிடுவேன். அவைகளை அந்நியபாஷை தானா என்று வாசிக்கிற நீங்களும் நிதானியுங்கள். பெந்தேகோஸ்தே பாஸ்டர்களும் அதைக்கண்டு நிதானிக்கடவார்களாக.
|
| பாவம் செய்தவருக்கு பதவி உயர்வு |
கேள்வி: பெங்களுர்
AOG பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரும், பிரபல பாட்டுக்காரருமான பாஸ்டர்.பால்தங்கையா அவர்களைப்பற்றி நீங்கள் எழுதியது உண்மை. பால்தங்கையா அவர்களின் மனைவியை
Vodafone டைரக்டர் ஒருவரோடு சம்பந்தப்படுத்தி பேசியதும் உண்மை. இப்போது பல மாதங்களாக பால்தங்கையாவின் மனைவி சபைக்கு வருவதில்லை. பால்தங்கையாவும் மனைவியும் இப்போதும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட பாஸ்டரை
AOG சபை விசேஷமாக கௌரவித்துள்ளதே?. இப்போது பால்தங்கையா அவர்களுக்கு
AOG சபைகளின் District
Superintendent பதவி அளித்துள்ளதாக அறிகிறேன். இது எப்படி?
பதில்: இது எப்படி என்றால்? அது அப்படித்தான். நீங்கள் கூறும் செய்தி உண்மையாக இருக்குமானால் அது
AOG பெந்தேகோஸ்தே சபையின் மிகமோசமான முன்மாதிரியாகும்.
AOG சபைவிசுவாசிகளே,
AOG சபையின் மாவட்ட தலைவரையும் (பாஸ்டர்.பால்தங்கையா) அவர்களின் வழியையும் இனி ஒவ்வொரு குடும்பமும் பின்பற்றலாம். புருஷன்-மனைவி சண்டைபோட்டு பிரிந்திருந்தாலும், மனைவியோ-புருஷனோ தவறான தொடர்பு கொண்டிருந்தாலும்
AOG சபைக்கு போனால் இவர்கள் தன் சொந்த பிரிவினை அனுபவத்தைக்கூறி உங்களுக்கு பிரிந்து வாழும் ஆலோசனையை இவர்கள் தெளிவாக கூறுவார்கள். நீங்கள் அதை சந்தோஷமாக பின்பற்றலாம். சாட்சியில்லாதவருக்கு
AOGயின் அருமையான பதவி உயர்வு ஊரே-நாடே மெச்சிக்கொள்ளும். இவர்களின்
அந்நியபாஷையை கற்றுக்கொள்ளுங்கள். இவர் குடும்பத்தைப் பார்த்து மற்ற பெந்தேகோஸ்தே
AOG கிளை சபைபாஸ்டர்கள் அவரவர்கள் மனைவிமார்களை அனுப்பிவிட்டு நீங்கள் சுதந்திரமாக டூர் அடிக்கலாம்.
AOG சபை மாவட்ட தலைவர்கள் நேரில்வந்து ஜெபம்பண்ணி அந்நியபாஷை பேசி புருஷன்-மனைவியை பிரிந்துபோக உதவி செய்வார்கள். ஆராதனையில் பாஸ்டர் அவர்கள் 100 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததைபோல உங்களுக்கும் புருஷன்-மனைவி இருவரும் தனித்தனியாக வாழ சகல உதவியும் செய்வார்கள் என்று நம்பலாம்.
AOG சபை எத்தனை கீழ்தரமாக போய்கொண்டு இருக்கிறது என்பதற்கு
பால்தங்கையாவுக்கு அவருக்கு எதிராக இத்தனைக் குற்றசாட்டுகள் எழும்பிய நிலையில் கொடுத்த (பிரமோஷன்) பதவி உயர்வே சான்று ஆகும்.
CSI, லூத்தரன் சபைகள்
பண ஊழலில் பெருமை சேர்க்கிறது. கொஞ்சம் நல்ல சபை, ஆவிக்குரிய சபை என்று பெயர் எடுத்து உயர்ந்துகொண்டிருக்கும்போது பல ஊர்களில்
AOG போன்ற சபைகளில் காணப்படும் குடும்ப பிரச்சனைகளுக்கும், பாவங்களுக்கும்
பரிசு கொடுக்கப்படும் நிலைகளையும் அறியும்போது மக்கள் ஆராதனைக்கு எங்குதான் போவது? கர்த்தாவே இரக்கமாயிரும் என்று
AOG சபை விசுவாசிகள் கூறி எழுதியதைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.
பணபலமானது
AOG சபையின் நல்ல தகுதியான பாஸ்டர்களையும் கீழேதள்ளி, மனைவியைவிட்டு பிரிந்துப்போன குடும்பநாதனையும்,
தலைமை பதவிக்கு கொண்டுபோகும் என்பதற்கு உதாரணம்தான் இது. பணம்
AOG சபையிலும் விளையாடுகிறது.
இந்துமதத்தினர் கூறுகிறார்கள் நாங்களே பரவாயில்லை எங்கள் கணவன்மார்களை நாங்கள்
கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம். அந்தளவு கணவனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால்
AOG சபை மனைவிமார்கள் புருஷனை மதிப்பதில்லை என்கிறார்கள்.
மனைவியை பிரிந்த பாஸ்டர் ஒருவருக்கு
AOG சபை பதவி உயர்வு கொடுத்து கௌரவித்து உள்ளதே என்று புறமதத்தினர் கேட்கிறார்கள்.
AOG சபை மக்கள், பாஸ்டர், சூப்பிரடெண்டன்ட் (Superintendent) பதில் கூறுவார்களாக.
பணபலம் சாட்சியில்லா பாஸ்டர்களையும் உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்தும் என்பதற்கு பெந்தேகோஸ்தே சபையும் விதிவிலக்கல்ல என்பதற்கு இது ஒரு சாட்சி.
உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும்
சிலகாலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி
ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்... மறுபடியும் கூடி வாழுங்கள்.
விவாகம் செய்தவர்களுக்கு நானல்ல
கர்த்தரே கட்டளையிடுகிறதாவது, மனைவியானவள் தன் புருஷனைவிட்டு பிரிந்துபோகக்கூடாது. 1 கொரி 7:5,10.
தன்
குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய
சபையை எப்படி விசாரிப்பான். 1தீமோ 3:5.
கண்காணியானவன் (சூப்பிரின்டென்டென்ட்) குற்றஞ்சாட்டப்படாதவனும்.... கோபமில்லாதவனும்..... அடியாதவனும்..... தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். தீத்து 1:7.
(இவர்கள் பொறுப்பு ஏற்கும்முன்) முன்னதாக சோதிக்கப்பட வேண்டும்.
குற்றஞ் சாட்டப்படாதவர்களானால்........ ஊழியம் செய்யலாம். 1தீமோ 3:10.
மனைவியைவிட்டு பிரிந்து இருக்கிறவர்கள் சபையில் சாதாரண விசுவாசிகளாக வந்து போகலாம். ஆனால் (மேய்ப்பன்)
பாஸ்டர் ஊழியத்தை அறவே செய்யக்கூடாது. தவறு யார் மேல் இருந்தாலும் சரி - அவிசுவாசி பிரிந்துபோனால் போகட்டும் என்கிறார் பவுல். அப்படி பிரிந்து போய்விட்டால்
மேய்ப்பன் பொறுப்பிலிருந்து இறங்கிவிடவேண்டும்.
சாட்சி மிகமிக முக்கியம்.
|
|
 |
|
|
|