சத்திய வசனம் - BACK TO THE BIBLE (SRI LANKA)

இலங்கை சத்தியவசனம் வானொலி மூலம் நடத்தப்பட்டு வந்த வேதபாட நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு குறிப்பாக வசனத்தைவிட்டு விலகிப்போன கிறிஸ்தவர்களுக்கு பெரும் உயிர்மீட்சியை அளித்தது.

  1957ம் ஆண்டு முதல் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சி திரு.மெடோஸ் அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார். எனக்கு 1965ம் வருடம் முதல் சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.ஆபிரகாம் மெடோஸ் & Mrs.Inbam Medows அவர்களுடன் கடிதத்தொடர்புகள் உண்டு. 1966ம் ஆண்டு திரு.மெடோஸ் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகளை அளித்தார். திரு.மெடோஸ் அவர்களின் மரணத்துக்குபிறகு Mrs.Medows அவர்கள் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகளை பொறுப்பெடுத்து நடத்தினார். Mr.Richerd Abraham அவர்கள் Back to the Bible வானொலி நிலைய அனைத்து மொழி நிகழ்ச்சிகளுக்கும் தலைமை பொறுப்பு ஏற்றெடுத்தப்பின் பெரிய மாற்றம் உண்டானது. இலங்கை Back to the Bible வானொலி ஸ்தாபனம் முழுவதற்கும் சத்தியவசனம் தமிழ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த காணிக்கைகள்தான் ஸ்தாபனத்தின் முழுதேவைகளையும் சந்திக்கக்கூடியதாக இருந்தது. திருமதி.மெடோஸ் ஓய்வு பெற்றார். அதன்பின் தமிழ் நிகழ்ச்சியின் பொறுப்பாளராக ஏற்றெடுத்து அவரவர் தாலந்துக்கேற்ப பொறுப்பெடுத்து நடத்தினார்கள். கடைசியாக சகோ.நீரியஸ் பெர்ணாண்டோஸ் அவர்கள் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சியின் நிர்வாகியாக பொறுப்பெடுத்தார்.

  இந்திய தமிழர்கள்தான் மிக அதிகமாக சத்தியவசனம் மூலம் ஆசீர்வாதம் பெற்றனர். அந்த ஆரம்ப காலங்களிலேயே நிகழ்ச்சிகளைப்பற்றிய கருத்து கடிதங்கள், சாட்சி கடிதங்கள் தபால் மூலம் வேதபாடம் ஆகியவைகளில் பங்கெடுத்ததில் பெரும்பாலும் இந்தியாவிலிருப்பவர்கள்தான் நன்மை பெற்றனர். ஆகவே Back to the Bible வானொலி பங்காளர்களுடன் கடிதத்தொடர்பு கொள்ளவும் ஜெப ஆலோசனை அளிக்கவும், வானொலி சம்பந்தமான பிரதிகள், பத்திரிக்கை, தபால் மூலம் வேதபாடம் ஆகியவைகளை அனுப்ப டெல்லி, ஐதராபாத் போன்ற இடங்களில் அலுவலகங்கள் பெரிய அளவில் தொடங்கி நன்றாக ஊழியம் வளர்ந்தது. பெரும்பாலான பங்காளர்கள் தமிழ்நாட்டில் இருந்ததால் மதுரையில் Back to the Bible சத்தியவசனம் தமிழ் நிகழ்ச்சி தொடர்பாக அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இப்போது சகோ.பழனி ஆபிரகாம் அவர்கள் பொறுப்பில் நல்ல வளர்ச்சி கொண்டிருக்கிறது. இலங்கை சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சிகளைவிட தமிழ் சத்தியவசன நிகழ்ச்சிகள் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் டிவி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அது மிக சிறப்பாக வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

  தமிழன் TVயிலும், பொதிகை TVயிலும் சத்தியவசன செய்திகள் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. தமிழன் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் மதியம் 12லிருந்து 12.30 வரையும், பொதிகை டிவியில் வெள்ளிகிழமை அதிகாலை 5.30 மணியிலிருந்து 6 வரையும் ஒளிபரப்பப்படுகிறது.

  சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சி சிற்றலை 31 மீட்டரில் காலை 7.15 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் சத்தியவசன Back to the Bible தலைமையிடமான இலங்கை அலுவலகத்தில் சத்தியவசன பொறுப்பாளராக பணியாற்றிய சகோ.நீரியஸ் பெர்ணான்ட்ஸ் அவர்கள் தலைமை பொறுப்பிலிருந்து சுதந்திர ஊழியராக ஊழியம் செய்ய சத்தியவசனத்திலிருந்து விலகிவிட்டார். ஒரு வருடத்திற்குமுன்பே சரியான நபர் அந்த பொறுப்புக்கு கிடைக்கும்வரை விலகவேண்டாம் என்று நானும் என் சார்பில் அவரை கேட்டுக்கொண்டேன். அதன்படியே அந்த பொறுப்பில் அவர் தொடர்ந்தார். ஆனால் கடந்த மாதம் சத்தியவசன வானொலி Back to the Bible ஊழிய பொறுப்பிலிருந்து முழுவதுமாக நீங்கிவிட்டார். தமிழ் சத்தியவசன ஊழிய பொறுப்புக்கு இப்போது இலங்கை அலுவலகத்தில் யாரும் இல்லை. நீண்டகால அனுபவமுள்ள சகோதரி.வசந்தா அவர்களும் கடந்த 2009 டிசம்பர் மாதம்முதல் ஓய்வு பெற்றுவிட்டார். தமிழ் ஊழியத்துக்கு இலங்கை தலைமை ஸ்தாபனத்தில் பொறுப்பாளர் பதவிக்கு யாரும் இல்லாததால் சிங்கள ஊழியத்தையும், தமிழ் ஊழியத்தையும் ஒன்றாக்கிவிட்டனர். சிங்கள ஊழியத்தில் காணிக்கை வரவு மிக குறைவு. ஆனால் தமிழ் ஊழியத்தில் காணிக்கை வரவு மிக அதிகம். ஆகவே சிங்கள ஊழியர்களின் சம்பளம், ஊழிய செலவுகளுக்கு அவர்களுக்கு பணவரவு குறைவானதால் தமிழ் சத்தியவசன காணிக்கை வரவிலிருந்து சிங்கள ஊழியத்துக்கும் பயன்படும் வகையில் இரண்டையும் ஒன்று சேர்த்து பொது கணக்காக்கிவிட்டதாக அறிகிறேன். இலங்கை தலைமை தமிழ் சத்தியவசன ஊழியத்தை நிர்வகிக்க ஆத்ம பாரம் உள்ள ஜெபிக்கும் ஒரு நல்ல நிர்வாகி வேண்டும். ஜெபிக்கத் தொடங்குவோம்.


உயிரோடு இருக்கும்போதே வாழ்த்துகிறேன்.
நானும், சகோதரி.இன்பம் மெடோஸ் அம்மையார்

படத்தில் சகோதரி.இன்பம் மெடோஸ் சத்திய வசனம் (Back to the Bible) 1966ம் வருடம் முதல் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து அளித்தவர். ஓய்வுப்பெற்ற பின்னும் சத்தியவசன நிலையத்துக்கு வந்து ஊழியத்தில் தன் பங்கை தொடர்ந்து நிறைவேற்றியவர். அன்றைய நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த இலங்கை வானொலி வர்த்தக நிகழ்ச்சியில் முதன் முதல் என்னை உலகுக்கு செய்தியாளனாக அறிமுகப்படுத்தியர் திருமதி.மெடோஸ் அம்மையராவார்.

இலங்கை சத்தியவசனத்தில் நான் பிரசங்கம் செய்ய தொடங்கியபின்தான் உலகநாடுகளில் நான் அறியப்பட்டு இன்று 162 நாடுகளில் நான் கன்வென்ஷன் செய்தியாளனாக உபயோகப்படுத்தப்பட ஆரம்ப காரணமாக அமைந்தவர் திருமதி.மெடோஸ் அம்மையாராவார்.

  இன்று சகோதரி.இன்பம் மெடோஸ் அம்மையார் அவர்கள் படுத்தபடுக்கையில் சுயநினைவு இழந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு சுயநினைவு இருந்தபோதே நான் அவர் வீட்டுக்குசென்று அவரை நேரில் கண்டு வேதவசனங்களைக் குறித்து பேசி அவர் ஆத்துமா கர்த்தரை சந்திக்க அம்மையாரை ஆயத்தப்படுத்திவந்தேன். என்மேல் தனி அன்பு வைத்தவர், என் பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர். சுயநினைவு இருந்தபோதே நான் அவரை நேரில் கண்டுவந்தது எனக்கு பெரிய திருப்தியும், மன சமாதானமும் உண்டானது. அம்மையாரின் ஆத்துமாவுக்காக வாசகர்கள், சத்தியவசன பங்காளர்கள் தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  அவருடைய கடந்தகால பாரமுள்ள ஊழியங்களுக்காக, பலருக்கு அவர் கடிதம்மூலம் எழுதிய ஆலோசனைகளும் அதன்மூலம் ஏராளமான மக்கள் பெற்ற ஆத்தும மாற்றங்களுக்காகவும் ஆறுதலுக்காகவும் தேவனைத் துதிக்கிறேன். கர்த்தர்தாமே அவர் மனதை பெலப்படுத்தி - ஆறுதல்படுத்தி - தன்னை வெளிப்படுத்தி தம் சந்நிதியில் சமாதானத்துடன் சேர்த்துக்கொள்வாராக. ஆமென்.

(இதை நான் 2010 மே மாதம் 20ம் தேதி எழுதி 2010 ஜுன் மாத ஜாமக்காரனுக்காக தயாரித்தேன்)


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM