CSI டையோசிஸ்ஸில் ஜனநாயக குலைச்சல்

பெங்களுர் CSI டையோசிஸ் எலக்ஷன் முடிந்து நான்கு பேர் தெரிந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரான Rev.P.K.Samuel (Prasanna Kumar Samuel) என்பவரை CSI சினாட் பிஷப்பாக அறிவித்தது.

பிஷப் அபிஷேக ஆராதனை இன்னும் நடத்தப்படவில்லை. அதற்குள் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஆயர் தமிழன்.

ஆகவே கன்னட நாடான பெங்களுரூக்கு அவர் பிஷப்பாக வரக்கூடாது என்று அந்த டையோசிஸ்ஸில் அவர் பிஷப்பாக வருவதை பிடிக்காத சில தமிழர்கள் ஹிந்து அரசியல் கட்சியான பெங்களுர் BJP கட்சியை சேர்ந்த கர்நாடகா வெறியர்களைக்கூட அழைத்துக்கொண்டு ஊர்வலம் நடத்தி தமிழ் ஆயர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு டையோசிஸ் ஆபீஸிக்கு பூட்டு போட்டு சீல் வைத்துவிட்டார்கள்.

எல்லா மொழியை சேர்ந்த மக்களுக்காகவும் மரித்த இயேசு கிறிஸ்துவின் சபையின் (கண்காணி) பிஷப் பதவிக்கும் காவிரி பிரச்சனையைப்போல தமிழர்-கர்நாடகர் என்ற பிரச்சனையை சபைக்குள் கொண்டுவந்து டையோசிஸ்ஸை நடக்கவிடாமல் ஸ்தம்பித்துப்போக செய்துவிட்டனர். பிஷப் கமிஷனரி ஆயர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டுமே கையெழுத்து இடமுடியும். புதிய தீர்மானங்களோ, சட்டமோ இயற்ற முடியாது?. இப்படிப்பட்ட நிலை மாத கணக்கில் நீண்டுப்போவது நல்லதல்ல?.

ஒரு இஸ்லாமியர், ஒரு மலையாளி, ஒரு பஞ்சாபி ஜனாதிபதியாக முழு இந்தியாவையும் ஆளும்போது, CSI டையோசிஸ்ஸை நடத்தவிடாமல் ஜனநாயக முறையை சாகடிக்க நினைக்கும் பெங்களுர் ஆயர்களை, அந்த டையோசிஸ் மக்களை கர்த்தர் மன்னிப்பாராக.


CSI சினாட் செய்யவேண்டியது:

CSI மாடரேட்டர் தன் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிஷப் அபிஷேக ஆராதனையை நடத்தி முடிக்கவேண்டும். கவர்னருக்கு, பிரதமருக்கு, ஜனாதிபதிக்கு நிலைமையை எழுத்து பூர்வமாக எழுதி போலீஸ் பாதுகாப்பு கேட்டு அபிஷேக ஆராதனையை நடத்தி முடித்துவிட்டால் நல்லது. கர்நாடகா முதலமைச்சர், கர்நாடகா மொழி வெறி கொண்டவர். ஆகவே போலீஸ் பாதுகாப்பு அவர் கொடுக்கமாட்டார். ஆனால் கவர்னர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி போலீஸ் அல்லது ராணுவ பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யலாம். இதை தாமதமில்லாமல் CSI சினாட் மற்றும் மாடரேட்டர் செய்யவேண்டும். இதில் சினாட் தோல்வி கண்டால் பல பல CSI டையோசிஸ்ஸிகளில் இதன் விளைவு மோசமான ஜாதி என்ற பெயரில் வெளிப்படும்.

ஜாமக்காரன் சார்பில் CSI மாடரேட்டர் அவர்களுக்கு நான் இது விஷயமாக நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதி கேட்டுக்கொண்டேன். ஜெபிப்போம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM