தசமபாகம்
ஒரு நீதிமன்ற வழக்கு
(2013 ஏப்ரல் மாத தொடர்ச்சி....)
(குற்றவாளி-பாஸ்டர்.ஜோன்ஸ் V/S நீதிபதி)
(பெயர்கள் யாவும் கற்பனை பெயர்கள்)

2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் நம் ஜாமக்காரன் வாசகர் ஒருவர் மிக அருமையான அதே சமயம் யாரும் மறுக்க முடியாதபடி தசமபாக வேத சத்தியத்தை விளக்கும் ஒரு கற்பனை நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினார். அவருக்கு உங்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படிப்பட்ட வாசகர்கள் எனக்கு இருப்பதால் என் வாசகர்களுக்கு தேவையானது எது என்பதை என் வாசகர்களே அறிந்து இப்படிப்பட்ட நல்ல செய்திகளை எங்கிருந்தாவது தொகுத்து எனக்கு அனுப்பி உதவுகிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்களுக்காக நான் பெருமைப்படுகிறேன்.

இந்த செய்தி ஜாமக்காரனில் தமிழிலும், மலையாளத்திலும், இன்டர்நெட்டிலும் வெளியிட்டத்திலிருந்து அதை வாசித்த பெந்தேகோஸ்தே சபையினர், அந்த சபை மூப்பர்கள் ஆகிய ஏராளமானவர்கள் தசமபாக உபதேசத்தில் நாங்கள் இப்போது தெளிவுப்பெற்றோம் என்று கடிதம் மூலம், தொலைபேசி மூலம் எனக்கு எழுதி நன்றி அறிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒருவர் எழுதினார்: இவ்வளவு நாட்கள் எங்கள் சபை பாஸ்டர் தசமபாக விஷயத்தில் மிகவும் பொய் பேசியிருக்கிறார், அவர் எங்களை பயமுறுத்தி பணம் பெற்றிருக்கிறார். தசமபாகம் கொடுக்காதவர்கள் மீது சாபமிட்டிருக்கிறார் என்று மிகுந்த கோபத்தோடு எனக்கு எழுதி அறிவித்திருக்கிறார். (இப்படி எத்தனையோ பேர் ஏமார்ந்திருக்கின்றனர்).

மற்றொருவர் கோயமுத்தூரிலிருந்து எனக்கு எழுதினார்: அன்பான ஐயா, எங்கள் சபைக்கு பாஸ்டர்.பாலசுந்தரம் என்பவர் வந்திருந்தார், பிரசங்க வேளையில் தாவீது தனக்கான எல்லாவற்றையும் தேவனுக்கு கொடுத்தார். ஆனால் ஆபிரகாம் தாவீதுப்போல எல்லாவற்றையும் கர்த்தருக்கு கொடுக்கவில்லை. ஒருவேளை தாவீதுக்கு பிறகு ஆபிரகாம் பிறந்திருந்தால் ஆபிரகாம் நரகத்துக்குதான் போயிருப்பார் என்று அவர் மடதனமாக பிரசங்கம் செய்தார். பின்பு எல்லா விசுவாசிகளிடமும் இரண்டு பேப்பர்களை கொடுத்து எவ்வளவு பணம் சபைக்கு காணிக்கை கொடுப்பீர்கள் என்பதை அந்த பேப்பரில் எழுதுங்கள் என்றார் - சபை ஜனங்கள் எழுதிக்கொடுத்ததை அவர் வாங்கிக்கொண்டார்.

இதன்மூலம் அன்று எழுதி கொடுத்தவர்கள் உண்மை விசுவாசிகள் போலவும், எழுதி கொடுக்காதவர்கள் அவிசுவாசிகள் போன்ற குற்ற உணர்ச்சியை சபை மக்களிடையே உண்டாக்கிவிட்டு அவர் போய்விட்டார். இது எவ்வளவு பெரிய தவறான உபதேசம் அதுமட்டுமல்ல, அது தவறான செயல் ஆகும். எங்கள் பாஸ்டருக்காக இவர் நன்மை செய்ததாக நினைத்து அன்று ஆராதனையில் பிரசங்கித்த அந்த பாஸ்டர்.பாலசுந்தரத்தை எங்கள் பாஸ்டர் புகழ்ந்து தள்ளிவிட்டார் என்று இன்னொரு நபரும் அதே சபையிலிருந்து எனக்கு எழுதியுள்ளார். அதே சபையைச் சேர்ந்த மற்றொருவர் அன்று கிடைத்த ஏமாற்று காணிக்கையில் சபை பாஸ்டருக்கும் - பாஸ்டர்.பாலசுந்தரம் என்ற அந்த பாஸ்டருக்கும் 50/50 - என்று அன்றைய காணிக்கையை பாதிக்கு பாதி பிரித்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறோம். இது எத்தனை பெரிய ஏமாற்று.

ஆனால் இதை உங்களுக்கு எழுதி அறிவித்த நாங்கள் ஏமாறவில்லை. இவர்கள் எத்தனை சாபமிட்டாலும், பயமுறுத்தி பிரசங்கித்தாலும் இவர்கள் திருடர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துக் கொண்டதால் நாங்கள் ஏமாறவில்லை. ஆனால் எங்கள் சபையில் பெரும்பான்மையினர் அந்த பாஸ்டர் கூறியபடி எழுதி கொடுத்துவிட்டு அல்லேலுயா என்று கூறி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இதுதான் எங்கள் மனதை வேதனைப்படுத்தினது. எங்கள் சபை மக்கள் அறியாமையை நினைத்து வெட்கப்படுகிறோம். இப்படிப்பட்ட தசமபாக ஏமாற்று பெந்தேகோஸ்தே சபைகளில்தான் பெருகியிருக்கிறது.

இன்னொரு வாசகர் எழுதினார்: நீங்கள் எழுதிய தசமபாக செய்தியை பல பாஸ்டர்மார்களுக்கு கொடுத்தேன். அதைக்குறித்து நான் விளக்கம் கேட்டு விசாரித்த எந்த பாஸ்டரும் அதற்கு பதில் கூறமுடியவில்லை.

இன்னொரு கடிதத்தில் ஒருவர் இப்படி எழுதினார்: ஜாமக்காரனில் வந்த தசமபாக செய்தியை 5000 போட்டோ காப்பி எடுத்தோம். எல்லா பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கும் விநியோகம் செய்து எங்கள் பாஸ்டரிடமும் ஒன்றை கொடுத்து வாசிக்க சொன்னோம். வாசித்தபின் - பாஸ்டர் நீங்கள் இதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றோம். அதற்கு அவர் செய்தி மிக சரியாக இருக்கிறது. எழுதியதில் தவறில்லை. ஆனால் ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்த எழுதாத முக்கிய வேறு விஷயங்கள் உண்டு என்றார். அப்படியானால் தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்கு உண்டா? நாங்கள் மாதாமாதம் தசமபாக காணிக்கையை உங்களிடம் ஒப்படைக்கிறோமே அது வசனத்தின்படி சரியா-தவறா? என்று வரும் ஞாயிறு ஆராதனையில் கூறுங்கள் என்றோம். ஆனால் அவர் அன்று வேறு விஷயத்தைக்குறித்து பிரசங்கத்துவிட்டு தசமபாகத்தைக் குறித்து அன்று அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வாராவாரம் காணிக்கை நேரத்தில் தசமபாகத்தை குறித்து பேசும் வழக்கம் உள்ள அவர் அன்று ஒரு வார்த்தைகூட அதைப்பற்றி பேசவில்லை. ஆராதனை முடிந்தவுடன் பாஸ்டரை கேட்டோம். ஏன் தசமபாக விளக்கம் கொடுக்கவில்லை என்றோம். கர்த்தர் இன்றைக்கு எதை பேச சொன்னாரோ அதைத்தான் பேச எனக்கு உரிமை உண்டு. ஒருவேளை அடுத்த வாரம் பேசும்படி கர்த்தர் ஏவினால்தான் அதைப்பற்றி பேசுவேன் என்றார். 3 வாரம் கடந்தது. இதுவரை தசமபாகத்தைக்குறித்து பாஸ்டர் வாய் திறக்கவில்லை!. அந்த பாஸ்டரை இப்போதும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். ஆனால் இதுவரை தசமபாக விஷயத்தில் பொய் பேசியிருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டோம். தசமபாகத்துக்கு அவர் பழைய ஏற்பாட்டு வசனங்களையே சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அவர்மேல் எங்களுக்கு இருந்த மரியாதை நீங்கிப்போனது.

சகோ.மோகன் சி.லாசரஸ் உங்கள் ஜாமக்காரனை வாசித்துவிட்டு மிகவும் கோப்பட்டிருப்பார் என்று எண்ணுகிறோம். அதனால் கடந்த 2013 ஜூன் மாதம்தான் பத்திரிக்கையில் முழுவதும் தசமபாகம் கொடுப்பதால் உள்ள ஆசீர்வாதத்தையும் அதை கொடுக்கிறவர்களின் சாட்சிகளையும் புகைப்படத்துடன் பக்கம்பக்கமாக எழுதி தள்ளிவிட்டார்கள். ஜீன்மாதம் அவர் பத்திரிக்கையில் தலைப்பே நீங்கள் செழித்திருப்பீர்கள் என்பதாகும். இப்போது வேண்டுமென்றே தான் பேசும் கூட்டங்களில் தசமபாகத்தைப்பற்றியே பேசுகிறார். அதனால்வரும் ஆசீர்வாதங்களைக்குறித்து அவர் பேசி அதற்கு அடுக்கடுக்கான பொய் உதாரணங்களைக்கூறி பேசினார், அந்த உதாரணங்களை தன் பத்திரிக்கையிலும் அப்படியே எழுதியுருமிருக்கிறார். இவர்களொல்லாம் கிறிஸ்தவர்களை மாங்காமடையர்கள் என்று நன்றாக அறிந்துக்கொண்டார்கள். அதில் பலர் எங்களைப்போல் வசனத்தின்படி ஆராய்பவர்கள் உண்டு என்பதை இவர்கள் யாரும் அறியவில்லை.


ஒரே ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டர்
எனக்கு எழுதிய விமர்சன கடிதம்:

பாஸ்டர்.ஜான் (மதுரை) அவர்கள் எனக்கு தசமபாகத்தைக்குறித்து நான் ஜாமக்காரனில் வெளியிட்டதை விமர்சித்து எழுதினார். இதுவரை இந்த பாஸ்டர் மட்டும்தான் நான் எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து தைரியமாக எனக்கு எழுதினார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் அவர் எழுதிய விளக்கம் பிழையானது அவர் எழுதியது முழுவதும் தவறு ஆகும்.

"நான் பாஸ்டர்.ஜான் (மதுரை) சுதந்திர பெந்தேகோஸ்தே சபையை நடத்துகிறேன். எல்லா மாதமும் உங்கள் ஜாமக்காரனை நான் தவறாமல் வாசிக்கிறேன். பலமுறை உங்கள் ஜாமக்காரன் செய்தி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் தசமபாகத்தைப்பற்றி நீங்கள் எழுதியது பலரை தவறாக வழிநடத்தும். நீங்கள் எடுத்து எழுதிய தசமபாக விவரத்தை போட்டோ காப்பி எடுத்து பாஸ்டராகிய எனக்கு அனுப்பிய நபர் நிச்சயம் தசமபாகம் செலுத்த மனமில்லாதவராக இருக்கும்".

தசமபாகம் கொடுப்பது என்பது விருப்பமிருந்தால்(Option)மட்டும் கொடுக்கலாம் என்பது அல்ல - தசமபாகமென்பது ஒவ்வொருவரும் கண்டிப்பாக, கட்டாயமாக கொடுக்க வேண்டியதாகும். பாஸ்டர் அவர்கள் இப்படி எழுதியதற்கு அந்த ஒரு வசன ஆதாரத்தையும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிடமுடியவில்லை. அதற்கு பதிலாக 1 கொரி 9:7 வாசித்துப்பாருங்கள் என்கிறார். அதில் தசமபாகத்தைக்குறித்து ஒரு வார்த்தையும் எழுதப்படவில்லை என்பதை எப்படி அவர் அறியாமல்போனார். சம்பந்தமேயில்லா ஒரு வசனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். வாசகர்களாகிய நீங்களே வாசித்துப்பாருங்களேன்.

1 கொரி 9:7ல் எவன் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்?
எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்?,
எவன் மந்தையை மேய்த்து, அதன் பாலைச் சாப்பிடாதிருப்பான்?. என்று இந்த வசனத்தை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

ஜாமக்காரன்: மேலே குறிப்பிட்ட வசனம் முழுநேர ஊழியர்களுக்கும், சபையை நடத்தும் முழுநேர மேய்ப்பர்களுக்கும் (பாஸ்டர்களுக்கும்) உரியது ஆகும்.

அதுவும் வேலையில்லாமல் சுவிசேஷத்தைமட்டும் அறிவிக்கிற ஊழியத்தை செய்பவர்களுக்கு (வசன ஆகாரத்தை சபையில் உள்ள விசுவாசிகளுக்கு கொடுக்கும் முழுநேர ஊழியம் செய்யும் பாஸ்டர்களுக்கு சுவிசேஷத்தினாலேயே (சபை ஊழியத்தினாலேயே வாழ்க்கை நடத்தவேண்டும்) பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டுருக்கிறார். 1 கொரி 9:14.

வேத வசனம் ஊழியக்காரருக்கும் குறிப்பாக தொழிலோ, வேலையோ செய்தவர்களுக்கு அவர்களை ஜெபத்தில் தாங்குகிறவர்கள், அல்லது அவர்களுடைய சபை மக்கள்தான் அந்த ஊழியர்களுக்கு சாப்பாடு, உடை ஆகியவைகளை விளங்கிக்கொள்ளவும் அவர்கள் பிள்ளைகளின் படிப்பு செலவு ஆகிய எல்லாவற்றையும் விசுவாசிகள் தான் கொடுத்து உதவவேண்டும். அப்படி செய்வது சபை மக்களின் கடமையாகும். அதாவது அந்த சுவிசேஷ ஊழியர்களை அல்லது மிஷனரிகளை அவர்கள் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் யார் தாங்குகிறார்களோ அவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவது அவர்களின் கடமையாகும். அதை பாஸ்டரோ, சுவிசேஷகரோ அந்த உதவியை அதிகாரம் செய்து அல்லது கட்டாயப்படுத்தி அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்க வேதம் அனுமதிக்கிறதில்லை. அப்படி கட்டாயப்படுத்தி கேட்கும்நிலை அந்த சபையின் பாஸ்டர் அல்லது சுவிசேஷகர்களுக்கு வருமானால் அந்த சபையிலுள்ள அங்கத்தினர்களை அந்த ஊழியர்களே சுவிசேஷம் அறிவித்து கஷ்டப்பட்டு சம்பாதித்த உண்மையான விசுவாசிகளாக (அங்கத்தினர்களாக) இருக்கமுடியாது. நீங்கள் அந்த சபையில் ஒரு வாடகை ஊழியக்காரனாகத்தான் அந்த சபையில் இருப்பதாக அர்த்தம்.

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, மனபூர்வத்தோடு கர்த்தருக்கு கொடுக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்கள் ஊழியர்களின் தேவைகளையும் அறிந்து அவர்களாகவே அந்த ஊழியருக்கு கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதே வேதம் நமக்கு போதிப்பதாகும்.

ஒரு சபையின் பாஸ்டர் அல்லது ஜெபக்குழுவில் உள்ள சில குடும்பங்களின் மூலமாக தாங்கப்படும் சுவிசேஷகன் அல்லது அவர் ஒரு மிஷனரியாக இருந்தால் அப்படிப்பட்ட ஊழியன் உண்மையுள்ளவனாக உண்மையாக ஜெபிப்பவனாக, ஆத்தும ஆதாயம் செய்ய இரவும்-பகலும் அலைகிறவனாக இருப்பான். இப்படிப்பட்ட உண்மையான ஊழியக்காரனை தாங்குகிறவர்கள், அந்த உண்மை ஊழியர்களுக்கு கணக்கு பார்க்காமல் அள்ளிகொடுக்கிறவர்களாக மாறுவார்கள். சபை ஆரம்பித்து அல்லது மிஷனரி ஊழியம் தொடங்கி பல வருடமாகியும் ஒரு ஆத்துமாவையும் கொண்டுவராத ஒரு புதிய ஆத்துமாவையும், சபையில் சேர்க்காத ஊழியராக இருந்து ஞாயிறு ஆராதனையைமட்டும் கடமைக்காக நடத்துபவராக இருக்கும் அந்த ஊழியனை இவர் ஒரு போலி என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த கிராமம் போனேன், துண்டுப்பிரதி விநியோகித்தேன் என்று மனதார பொய் சொல்லும் ஊழியர்களும் உண்டு. அப்படிப்பட்ட எந்த ஊழியனையும் அல்லது பாஸ்டரையும் சபை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இவர்கள் கிறிஸ்தவ வீடுகளுக்குமட்டும் சென்று ஜெபித்து அங்கு காணிக்கை வாங்கிவிட்டு அந்த கிறிஸ்தவ வீடுகளிலேயே சாப்பிட்டுவிட்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களை விசுவாசிகள் காணிக்கை கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள், அவர்களை கெடுக்காதீர்கள்.

இவர்களுக்கு எப்போதும் கிறிஸ்தவ பணக்கார குடும்பங்கள், உயர்பதவியில் உள்ள கிறிஸ்தவ அதிகாரிகளின் வீடுகளில் ஒரு கண் உண்டு. அவர்களை CSI, லூத்தரன் போன்ற சபைகளிலிருந்து எப்படியாவது அவர்களோடு பேசி அவர்களை களவாடி தங்கள் சபைகளுக்கு அவர்கள் வரும்படி செய்து விடுவார்கள். காரணம் CSI, லூத்தரன் சபை ஆயர்களில் முக்கால்வாசி ஊழியர்களுக்கு வீடுகள் சந்திப்பு இல்லை. ஆனால் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களின் வாரம் 6 நாட்களும் புதுபுது கிறிஸ்தவ வீடுகளைமட்டும்தேடி கண்டுபிடித்து அவர்கள் வீடுகளுக்கு சென்று ஜெபித்து அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு சில தீர்க்கதரிசனங்களையும் கூறி வீட்டில் பிசாசு இருக்கிறது, பில்லிசூனியம் இருக்கிறது, அவைகளுக்காக நான் தனியாக உபவாசிக்கிறேன், நீங்கள் உபவாசிக்கவேண்டாம். நான் உபவாசித்து உங்கள் வீட்டைவிட்டு பிசாசை விரட்டுகிறேன் என்பார்கள். அவ்வளவுதான். நாம் கஷ்டப்பட்டு உபவாசிக்காமல் இருக்க நமக்காக இந்த பாஸ்டரே உபவாசிக்கிறார் என்றால் இவர்தான் உண்மை ஊழியர் என்று அப்படியே நம்பிவிடும் ஏமாளிகளாக பல கிறிஸ்தவர்கள் மாறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய சபையான CSI, லூத்தரன் சபைக்கு போவதையும் விடமாட்டார்கள்.

பிள்ளைகளின் கல்யாணம், கல்லறை, டீச்சர் வேலை, கல்லூரி அட்மிஷன் இதற்காக இப்படிப்பட்ட சபைகள் CSI, லூத்தரன் சபைகள் இவர்களுக்கு அவசியம். CSI, லூத்தரன் சபைகளில் இவர்கள் ஒரு ரூபாய் காணிக்கைமட்டும் போடுவார்கள் - ஆனால் பெந்தேகோஸ்தே சபைகளில் வல்லமை, அபிஷேகம், குதித்தல், கைத்தட்டல், வாத்திய கருவிகள், பாடல்கள் இவைகளால் பெரிதும் கவரப்பட்டு ஒரு வாரத்துக்கு ஒரு வாக்குத்தத்தம் கர்த்தர் தீர்க்கதரிசனமாக அந்த பாஸ்டர்மூலம் அறிவிப்பார் என்ற குருட்டு நம்பிக்கையினால் இவர்கள் தசமபாகம் என்ற பெயரில் எவ்வளவு கேட்டாலும், ஆபரண காணிக்கை போடுங்கள் என்று ஏமாற்றினாலும், அப்படியே நகைகளை கழற்றி போட்டுவிடுவார்கள். செங்கலில் அபிஷேகம் என்று கூறி செங்கலை எவ்வளவுக்கு விற்றாலும் அதையும் விலைகொடுத்து வாங்கும் ஏமாளிகள் நிறைந்த சபைகளாகத்தான் இன்றைக்கு பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகள் காணப்படுகின்றன.

மதுரை பாஸ்டர்.ஜான் அவர்கள் மேலும் கூறுகிறார்: பாஸ்டர்களாகிய எங்களுக்கு குடும்பம் உண்டு, பிள்ளைகள் உண்டு, அவர்களின் படிப்பு செலவு உண்டு. இவைகளுக்கு எந்த பணத்திலிருந்து செலவு செய்வது என்று நல்ல ஒரு கேள்வி கேட்டார். இதுவும் உண்மைதான். அதனால்தான் 1 கொரி 9:7ம் வசனத்தை சுட்டிக்காட்டினார்.

நான் வெளியிட்ட தசமபாக நீதிமன்ற நாடகத்தில் பேசிய பாஸ்டரும் இதைத்தானே சுட்டிக்காட்டினார். அது நியாயமான தேவைகள்தான். அதைக்குறித்துதான் நானே தெளிவாக மேலே எழுதியிருக்கிறேன். ஊழியர்களின் குடும்ப தேவைகளை விசுவாசிகள்தான் சந்திக்கவேண்டும். இதை வேதமும் மறுக்கவில்லை, நானும் மறுக்கவில்லை. ஆனால் நான் எழுதிய விஷயத்தில் முக்கிய விஷயம் என்ன என்பதை இந்த பாஸ்டர்கள் மறைக்கிறதை கவனித்தீர்களா? பாஸ்டர்.ஜான் எழுதியதை வாதிக்கும்போது பாஸ்டருடைய தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பது நியாயம்தானே என்றுதான் நாம் எல்லாரும் கூறுவோம். ஆனால் அது தசமபாகம் என்ற பெயரில் கொடுக்கவேண்டும் என்று இவர்கள் கேட்பதும் போதிப்பதையும்தானே வேதவசனத்துக்கு விரோதமானது என்று அப்படி கூறினால் அது ஏமாற்று தனம் என்கிறேன். புதிய ஏற்பாட்டு சபை உபதேசத்தில் தசமபாக உபதேசம் இல்லையே? 1கொரி 16ம் அதிகாரத்தில் வரவுக்கு தக்கப்படி காணிக்கை வாரம்தோறும் கொண்டுவர கேட்கிறார். இது சபை பாஸ்டர் செலவுக்கல்ல, ஏழைகளின் உதவி நிதிக்கு நான் வருவதற்குமுன் சேர்த்து வைத்திருங்கள் என்கிறார் பவுல்.

அதனால் தசமபாகம் உபதேசம் புதிய ஏற்பாடு சபைக்கு இல்லை என்பதை இப்போது வேறு வழியில்லாமல் எல்லா பாஸ்டர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களால் தசமபாகத்தைக்குறித்து இனி பேச வழியில்லை. அப்படி பேசினால் அவர் பொய் பேசுகிறார் என்று கூறலாம். இதுவரை பழைய ஏற்பாட்டையும், ஆபிரகாம், யாக்கோபு, மல்கியா, தாவீது என்று கூறி தசமபாகம் கொடுத்தே தீரவேண்டும் என்று கூறியும், பயமுறுத்தியும் சாபமிட்டும் ஜனங்களிடம் வசூலித்தது இனி செல்லாது என்பதுதான் இவர்கள் கோபம் என்மேல் திரும்பியுள்ளது என்றாலும் இப்போதும்கூட வேண்டுமென்றே தசமபாகம் பற்றி சகோ.மோகன் சி.லாசரஸ் மாதிரி சுபையில் பிரசங்கிக்கும் பாஸ்டர்கள் உண்டு. விசுவாசிகள் ஏமாறாதீர்கள்.

ஆனால் உண்மையான விசுவாசி சபையின் பராமரிப்பு தேவை, ஊழியனின் தேவை, ஊழியனின் குடும்ப செலவின் தேவை. இவைகளை மனதில்கொண்டு தசமபாகம் என்ற பெயரில் பணத்தை கணக்கு போட்டு கொடுக்காதபடி தேவைக்கு ஏற்ப காணிக்கை கொடுக்க முயலவேண்டும். சிலசமயம் அந்தத் தொகை தசமபாக காணிக்கையைவிட அதிகமாகவும் கொடுக்கவேண்டிய நிலை வரும். அப்படிப்பட்ட தேவையுள்ள சமயத்தில் ஒரு விசுவாசி தசமபாக கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. அதற்கு அதிகமாகவே கொக்கலாம்.

தேவன் நமக்கு செய்த கிருபைகளையும், அவர் நம்மை பலமுறை மன்னித்ததையும், அவர் சிந்திய இரத்தத்தையும், நம் படிப்புக்குமேல், நம் தகுதிக்குமேல் நாம் உயர்த்தப்படும்போது, ஆசீர்வதிக்கப்படும்போது அவைகளை நினைத்துப்பார்க்கும் ஒரு விசுவாசி காணிக்கை கொடுப்பதில் தசமபாக கணக்கு பார்க்கமாட்டான், தசமபாகத்துக்குமேல் அள்ளி கொடுப்பான். நன்றி உணர்வு ஒருவனுக்கு இருக்குமேயானால் தன் வீட்டின் தேவைகள் அதிகம் இருந்தாலும், திருச்சபையின் ஒரு முக்கிய தேவை என்று அறியும்போது, அவசர தேவை, மிஷனரிகளின் அவசிய தேவைகள் இவைகளை அறியநேரும்போது, மக்கதொனியா சபையினர் தங்கள் தரித்திரத்தில், கொடிய சோதனையின் நேரத்தில், உபத்திரவ நேரத்தில், தங்கள் திராணிக்குதக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் அவர்களாகவே கொடுத்தார்கள் என்பதற்கு நான் சாட்சி என்று பவுல் அந்த ஏழை சபை மக்களை புகழ்ந்து பேசுவதைப்போல நாம் கொடுக்க ஆசைப்படுவோம். அதுவும் பவுல் கூறுகிறார் அவர்கள் என் பிரசங்கம் கேட்டபின் அவர்கள் அப்படி கொடுக்கவில்லை. பிரசங்கம் கேட்கும்முன்பே அவர்களாகவே கொடுத்தார்கள் என்று குறிப்பிடுவதை கவனியுங்கள். 2 கொரி 8:1-3.

இந்த ஏழை சபை ஜனங்கள் எப்படிப்பட்ட ஆவிக்குரியவர்கள் என்பதையும் பவுல் குறிப்பிடுகிறார். இந்த சபை ஜனங்கள் முதலாவது தங்களை கர்த்தருக்கு அர்பணித்தார்கள். இவர்கள் மனந்திரும்பி தங்களையே முழுவதுமாக கர்த்தருக்கு அர்பணித்தார்கள். அதன்பின்தான் தங்களுடையதை தசமபாகம் என்ற கணக்கு பார்க்காமல் அள்ளி கொடுத்திருக்கிறார்கள். கையில் இருந்த இரண்டு காசு காணிக்கையாக போட்ட அந்த விதவையைப்போல தன் தேவையைகூட யோசித்து பார்க்காமல் நன்றிப்பெருக்கு மேலோங்க உள்ளதை அப்படியே போட்டுவிடும் அந்த நன்றி உணர்ச்சி அதைத்தான் ஆண்டவர் புகழுகிறார். மக்களுக்கு நன்றியைக்குறித்து போதனையிருந்தால் பாஸ்டர்கள் சபையில் தசமபாகம் என்ற வார்த்தையை உபயோகிக்கமாட்டார்கள்.

ஒருவனுக்கு நான் படித்தது என் சாமர்த்தியம் அல்ல,
நான் ஜீவிப்பது என் சம்பளத்தால் அல்ல,
எனக்கு கிடைத்த இந்த வேலை நான் படித்த டிகிரியால் அல்ல,
எனக்கு கிடைத்த இந்த கூலி என் சரீர பலத்தினால் கிடைத்ததல்ல,
இந்த சரீரம் என் ஆண்டவர் தந்தது, இது எல்லாம் என் தேவனின் கிருபை.
எல்லாம் என் கர்த்தர் எனக்கு போட்ட பிச்சை என்று எவன் உணருகிறானோ! அவனிடம் தசமபாகம் என்று வார்த்தையைகூறி பயமுறுத்த தேவையில்லை. சாபம்போட்டு பயமுறுத்ததேவையயில்லை. ஆபிரகாமை, தாவீதை, யாக்கோபை உதாரணம் காட்டி ஏமாற்ற வேண்டிய தேவையில்லை. நன்றியுள்ள அவன் தானாகவே யாரும் கட்டாயப்படுத்தாமலே, தேவையை அறிந்து ஆசையோடு காணிக்கை கொடுப்பான், யாத் 25:1. மனப்பூர்வமாய் கொடுக்கிறவனிடம் காணிக்கை வாங்குங்கள் என்று எழுதியுள்ளது. இது பழைய ஏற்பாட்டு வசனம்தான். இந்த கட்டளையை கொடுத்த அன்றைய கர்த்தர்தான் இன்றும் இருக்கிறார். இப்போது ஏன் மனபூர்வமாக, ஆசையாக காணிக்கை போடுவதில்லை. தசமபாகம் கொடுக்காவிட்டால் சாபம், இது ஆண்டவர் கட்டளை என்று ஏன் பொய் சொல்லி கேட்கிறார்கள். காரணம் காணிக்கை கேட்கிற அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் உண்மையில்லை. ஜனங்கள் அவர்களை நம்பவில்லை. அவர்கள் பேசும் அந்நியபாஷையில் உண்மையில்லை. அதனால் தங்கள் பாஸ்டர்களைக்குறித்து சபை ஜனங்ககளுக்கு சந்தேகம் உண்டு. ஆகவேதான் இவர்கள் தசமபாகம் என்று கூறி பிரசங்கிக்கும்போது அந்த பாஸ்டர் உண்மையில்லாதவர் என்று நன்றாக விளங்கும். மேலும் இப்போதுள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் காணிக்கை எவ்வளவு வருகிறது? தசமபாகம் எவ்வளவு வருகிறது? ஸ்தோத்திர காணிக்கை எவ்வளவு வருகிறது? என்பதை இதுவரை அந்தந்த சபை மக்கள் ஒருவருக்கும் தெரியாது. அந்த காணிக்கையிலிருந்து பாஸ்டர் எவ்வளவு எடுத்துக்கொள்கிறார். அதுவும் சபை மக்களுக்கு தெரியாது? தப்பிதவறி யாராவது கணக்கு கேட்டால் அவ்வளவுதான். மிரியாம் குஷ்டம் முதல் பலவித சாபங்கள் கூறி அந்த விசுவாசியை அல்லது கேள்வி கேட்ட உதவி பாஸ்டரை ஓரத்தில் தீண்டத்தகாதவன்போல் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

இவ்வளவு பணம் காணிக்கையாக போடுகிறோமே அவ்வளவு பணமும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒருவருக்கும் கேட்க தோன்றவில்லையே?. கேள்வி கேட்க தைரியம் இல்லையே! ஏன்?


தசமபாக கொடுமை:

புதிய ஏற்பாட்டு சபைக்கு இல்லாத உபதேசமான தசமபாகம் என்ற பெயரை சொல்லி பல பெந்தேகோஸ்தே சபைகளில் நடக்கும் கொடுமையான விஷயங்களைப்பற்றி சபை பெயரை, பாஸ்டர் பெயரை அறிவித்து வெளிவந்த பகிரங்கமான விஷயம்:


வீட்டு லோனில் தசமபாகம்:

ஒரு ஏழை சகோதரி நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி, பேங்க் மூலமாக கிடைத்த வீட்டு லோன் தொகையையும் சேர்த்து ஒரு வீடு கட்டினார். வாங்கிய லோன் தொகையிலும், அடமானம் வைத்த நகைமூலம் கிடைத்த பணத்திலும் தசமபாகம் சபைக்கு கொடுக்காவிட்டால் அந்த புதிய வீட்டை கர்த்தர் ஆசீர்வதிக்கமாட்டார், அந்த வீட்டுக்குள் பிசாசு புகுந்துவிடும் என்று அந்த சகோதரியின் சபையான பெந்தேகோஸ்தேசபை பாஸ்டர் அந்த பெண்ணை எச்சரித்திருக்கிறார். இப்படி யாராவது புறமதத்தினர் கடவுள் பெயரில் மக்களை பயமுறுத்தி பணம் பிடுங்குவார்களா? ஆனால் பெந்தேகோஸ்தே சபையில் இந்த ஏமாற்று நடக்கிறது.

மகள் திருமணத்துக்கு கொடுத்த வரதட்சணையும், கொடுத்த நகைகளிலும் அதன் தொகைக்கு ஏற்ப தசமபாகத்தை முதலில் கொடுத்தால்தான் திருமணத்தை சபையில் நடத்தவிடுவேன். இப்படி கராராக தசமபாகத்தை கேட்டு வாங்கிய விவரம் எனக்கு வந்துள்ளது. வட்டிக்கடைக்காரன்கூட இப்படி கேட்டு வாங்கமாட்டான் என்று சபை மக்கள் கூறி வேதனைப்படுகிறார்கள். ஆனால் இந்த பாஸ்டர்களுக்கு இதைப்பற்றி ஒரு தயக்கமோ, தெய்வ பயமோ இல்லை!.

அரசாங்க உத்யோகஸ்தனிடம், டீச்சர்களிடம் பி.எப் - P.F (பிராவிடன்ட் ஃபண்ட்) தொகையிலும் தசமபாகம் கொடுத்தாக வேண்டும் என்று இந்த பாஸ்டர்கள் பகிரங்கமாக கேட்டதால் பல புகார்கள் பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளிடமிருந்து வந்த வண்ணமிருக்கின்றன.

நான் தசமபாகம் செய்தி ஜாமக்காரனில் எழுதினேன். புதிய ஏற்பாட்டு சபைக்கு தசமபாகம் இல்லை என்று ஜாமக்காரனில் வசன ஆதாரத்துடன் ஆணித்தரமாக நான் எழுதியதால் இன்று பல பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்கள் எனக்கு கடிதம் எழுதும்போது ஜாமக்காரனாகிய நீங்கள் எங்கள் வயிற்றில் அடித்துவிட்டீர்கள் என்று புலம்புகிறார்கள். எங்கள் சாபம் உங்களை சும்மாவிடாது என்றும் ஒரு பாஸ்டர் எனக்கு முகவரியே இல்லாமல் கடிதம் எழுதி தன் ஆத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்.

பாஸ்டர்களினாலும் அல்லது எங்களைப்போன்ற ஊழியர்கள் யாராக இருந்தாலும் கர்த்தரிடம் நாம் உண்மையாக இருந்தால், சபை மக்களிடமும் நம்மை ஜெபத்தில் தாங்கும் குடும்பங்களிடமும், விசுவாசிகளிடமும் உண்மையாக இருப்போம். அப்போது கர்த்தரும் நம்மிடம் உண்மையாக இருப்பார். அப்படிப்பட்ட விசுவாசம் உங்களிடம் இருந்தால்போதும் நீங்கள் காணிக்கையே யாரிடமும் கேட்கவேண்டாம். கர்த்தரே விசுவாசிகளின் உள்ளத்தில் ஏவி ஊழியர்களை போஷிப்பார். இப்படிப்பட்ட விசுவாச வழியில் ஊழியர்கள் வாழாமல் இருப்பதால்தான் ரூ.1000 கொடுத்தால் 4000 கிடைக்கும் என்ற அண்டப்புளுகு பொய்களை பேசி விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாக காணிக்கை கொடுக்கும் ஏழை வீடுகளுக்கு பாஸ்டர்கள் அடிக்கடிபோகாமல் ஒரு ஜெபத்துக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்கும் குடும்பங்களை பாஸ்டர் அடிக்கடி சந்திக்கிறார். இப்படி ஜெபத்துக்கு காணிக்கை வாங்கும் ஊழியர்களை நம்பாதீர்கள்.

நம் தேவையை முதலில் கர்த்தரிடம் சொல்ல பழகுங்கள். உங்கள் தேவைகளை சபை மக்களிடம் கேட்கவேண்டாம், வாசகர்களிடம் கேட்கவேண்டாம், உங்களை தாங்குகிறவர்களிடம் கேட்கவேண்டாம், கர்த்தரே நமக்கு தருவார். நீங்கள் வேண்டிக்கொள்வதற்கு முன்பே உங்களுக்கு இன்னது தேவை என்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என்று நம் வேதம் உறுதிகூறவில்லையா? பின் ஏன் விசுவாசிகளிடம் கை ஏந்த வேண்டும்? எலியாவை காக்காவை கொண்டு போஷித்த கர்த்தர் நம்மையும் காக்காய் போன்ற மணி-ஆர்டரில் விமானத்தின் வழியாக போஷிப்பார் என்று ஒவ்வொருநாளும் போஸ்ட்மேனையும், மணியார்டரையும் எதிர்ப்பார்க்க வேண்டாம்?. என் சொந்த அனுபவத்திலிருந்து இதை அறிவிக்கிறேன். ஆகவே தசமபாகம் கேட்கும் எந்த ஊழியரும், பாஸ்டரும் புதிய ஏற்பாட்டு சபை உபதேசத்தை நம்புகிறவர்களல்ல, அவர்கள் பொய்யர்கள் ஜெபித்து, ஆசீர்வாத வசனம்கூறி மக்களை வாழ்த்தும் பொய் ஊழியர்கள். இவர்கள் மக்களின் குற்றங்களை சுட்டிக்காட்டமாட்டார்கள். ஆனால் ஆசீர்வாதம் கூறி ஜெபிப்பார்கள். அப்போதுதான் காணிக்கை அதிகம் கிடைக்கும் என்பது இவர்களின் எதிர்ப்பார்ப்பு. இவர்களை ஆவிக்குரிய பிச்சைக்காரர்கள் என்றும் கூறலாம். இப்படி தசமபாகம் சுரண்டும் ஆவிக்குரிய பிச்சைக்காரர்களை விசுவாசிகள் யாரும் ஊக்கப்படுத்தாதிருங்கள்.

நம் வேதம் செய்யதக்கவர்களுக்கு செய்யுங்கள் என்று நீதிமொழிகள் மூலமாய் பேசுகிறது.

பாஸ்டர்.ஜான் (மதுரை) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தன் சொந்த அனுபவத்தை உதாரணமாக எழுதினார். "நான் குடியிருக்கும் வீட்டின் முதலாளி பெரிய கோடீஸ்வரர். அவருக்கு நிறைய வீடுகள் உண்டு. அவர் கோடீஸ்வரராக இருப்பதால் நான் குடியிருக்கும் வீட்டின் வாடகையை உங்களுக்கு கொடுக்கமுடியாது என்று நான் அவரிடம் சொல்லமுடியுமா?" என்று எழுதி தன் கடிதத்தை முடித்திருக்கிறார். அவர் கூறிய இந்த உதாரணம் சபைக்கோ - தசமபாகத்துக்கோ - கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பதற்கோ பொருந்தாதது ஆகும். பாஸ்டரானாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுத்துதான் ஆகவேண்டும். காரணம் வீட்டு முதலாளி பாஸ்டரின் சொந்தக்காரரோ, சித்தப்பாவோ, பெரியப்பாவோ அல்லவே? அப்படி இருந்தாலும் சொந்தக்காரர்கள்கூட தன் உறவினரையே தன் வீட்டில் குடியிருக்க வைத்தாலும் வாடகையை மாதம் தவறாமல் வாங்கிவிடுவார்கள். நம் ஆண்டவர் வானத்துக்கும் பூமிக்கும் முதலாளி, அவர் பிள்ளைகள் நாம். அவர் நம்மிடம் வாடகை வாங்கிதான் அவர் வாழவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. அவர்தான் நமக்கு கொடுப்பவர்.

நாம் வாழ இந்த உடல் அவர் கொடுத்தது, இந்த உயிர் அவர் கொடுத்தது. இந்த வாழ்க்கை அவர் பிச்சையாக நமக்கு கொடுத்தது. நாம் சம்பாதிக்கும் எல்லா சம்பாத்தியத்திலும் அவர் கிருபை வேண்டும். நாம் ஆரோக்கியமாக நலமாக வாழ அவர் கிருபை நமக்கு வேண்டும். எத்தனை நிலம் இருந்து அதை உழுது எறுபோட்டு தண்ணீர்விட்டாலும் விளைய செய்பவர் ஆண்டவர்தான். ஒரு விசுவாசி இதை உணர்ந்தால் நன்றி பெருக்கால் உனக்கு ஆண்டவருக்கு அல்லது ஊழியத்துக்கு அல்லது சபைக்கு அவன் அள்ளி கொடுப்பான்.

ஆகவே இதை ஒரு கிறிஸ்தவ விசுவாசி உணர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கும் எல்லா வரவிலும் லாபத்திலும், விளைச்சலிலும், சம்பாத்தியத்திலும் கர்த்தருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை உணருவார்கள். அப்போது அவர்கள் தசமபாகம் அல்ல நன்றி பெருக்கினால் என்னுடையது அனைத்தும் அவருக்கே என்று நன்றியுடன் சமர்பிப்பார்கள்.

மதுரை பாஸ்டர்.ஜான் அவர்கள் கூறிய உதாரணத்தின்படி வீட்டு முதலாளிக்கு வாடகை கொடுப்பது போல சிந்திக்கவே கூடாது. நம் வருமானம் எதுவானாலும் அது ஆண்டவர் நமக்கு கொடுத்தது ஆகும். அதை அவருக்கே திரும்ப கொடுக்கிறோம்.

இதை நன்றி அடிப்படையில் கொடுக்கிறோமா அல்லது வாடகைபோல் கடமைக்காக கொடுக்கிறோமா! என்பதைத்தான் ஆண்டவர் கவனிக்கிறார். "கொடுக்கும் அளவை அவர் கவனிப்பதில்லை, நம் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள நன்றியை நாம்கொடுக்கும் காணிக்கையின்மூலம் அறிய ஆசைப்படுகிறார்".


சிறை தண்டனை சட்டம் 420:

மேலே நீங்கள் வாசித்தப்படி பல வகையில் பயமுறுத்தியும், இரட்டிப்பு ஆசை காட்டியும், விளம்பர யுக்திமூலம் பணம் பெறுபவர்களுக்கு சட்டம் 420 அல்லது ஊழியர்கள் ஜனங்களை ஏமாற்றிய தொகைக்கு ஏற்ப 10 லட்ச அபராதம், 2 வருட சிறை தண்டனை கொடுக்கலாம். இதை 3.6.2013 அன்று மத்திய அரசாங்கத்தில் புதிய சட்டமாக இயற்றியிருக்கிறார்கள்.. இந்த சட்டம் கிறிஸ்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள்மேல் அல்லது தசமபாகம் என்ற பெயரில் சபை மக்களை பல விதங்களில் ஏமாற்றி பணம் பறிக்கும் அந்த பாஸ்டர்கள்மேல் இந்த சட்டம் பாயுமா?.

ஒருவேளை இந்திய சட்டத்தின்படி சிறுபான்மை இனம் (மதம்) என்ற பெயரில் இந்த தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம், ஆனால் கர்த்தரின் தீர்ப்பிலிருந்து இவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது!.

இதற்குமுன்பே இளம்பங்காளர் திட்டம் என்பதும் ஒரு ஏமாற்று திட்டம் என்று ஒருவர் பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அவர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த பணம் இல்லாதபடியால் அந்த வழக்கு பாதியிலேயே நிற்கிறதாக கேள்விப்பட்டேன்.

தசமபாக விளக்கத்தை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இனி தசமபாகம் கொடுங்கள் என்ற பழைய ஏற்பாடு உபதேச வார்த்தையை உபயோகித்து சபை மக்களிடம் தசமபாகம் யாரும் கேட்கவேண்டாம்.

கடந்தமுறை தசமபாக நீதிமன்ற செய்தியை ஜாமக்காரனில் வெளியிட்டதை பலர் ஆங்கிலத்தில் வெளியிடவேண்டும் என்று கேட்டதால் அதை அப்படியே அவர்களுக்காக ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன். எல்லா நாட்டிலும் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளிலும் தசமபாகம் கேட்டு பிரசங்கங்கள் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கு ஆங்கிலத்தில் வெளியிடும் இதை விநியோகம் செய்யுங்கள். அதன் பின்னாவது தங்கள் ஊழியத்தை உண்மையாக செய்கிறார்களா என்று பார்ப்போம்.

சுவிசேஷம் அறிவித்து புதிய ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டுவராத எந்த ஊழியர்களுக்கும், பாஸ்டர்களுக்கும், மிஷனரிகளுக்கும் காணிக்கை கொடுத்து கெடுக்காதீர்கள். அவர்களை அவர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.

நீங்கள் இவர்களுக்கு கொடுக்கும் பணம் உங்களுடையது அல்ல, கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தின் பங்கு ஆகும். அதை தவறான விதத்தில், தவறானவர்களுக்கு அல்லது தவறான சபைகளுக்கு கொடுத்தால் தேவன் உங்களை சும்மாவிடமாட்டார். நம் தேவன் காணிக்கைகளை கவனிக்கிறவர். எதிலிருந்து கொடுக்கிறாய், என்ன நோக்கத்தில் கொடுக்கிறாய், எதை எதிர்ப்பார்த்து கொடுக்கிறாய், சரியான ஊழியத்திற்கு தான் கொடுக்கிறாயா? என்பதையெல்லாம் கர்த்தர் கவனிக்கிறார்.


இனி ஆங்கிலத்தில் தசமபாக நீதிமன்ற வாதத்தை வாசியுங்கள்:

Judge: Mr.Jones you have been charged with multiple counts of extortion. Your crime spree covers 20 years and thousands of victims. You have defrauded people out of their money with fear and manipulation, telling them they had to tithe 10% of their income to your church and that God would bless them if they did. You also told them that if they didn't tithe God would curse them. How do you plead?

Mr.Jones: I plead not guilty your Honor, I have done nothing wrong. I have only preached what the Bible says. In the Bible Abraham tithed to Melchizedek and God blessed him for his faithful giving. The Bible even says he was rich in silver and gold.

Judge: Is it not true, Mr.Jones, that in Genesis chapter 13 verse 2 the Bible says Abraham was rich with livestock, silver and gold?

Mr.Jones: Yes, you are exactly right, that's what I just told you.

Judge: Ok, we read about Abraham being a rich man in chapter 13 but it is not until Genesis chapter 14 that we read about Abraham's tithe to Melchizedek. So Abraham was already a rich man before he tithed to Melchizedek, wasn't he?

Mr.Jones: Yes, I suppose you are right.

Judge: So his riches were not the result of his tithe to Melchizedek?

Mr.Jones: No.

Judge: Mr.Jones, you also say God blessed him for his faithful giving. How many times is it recorded that Abraham gave tithes to Melchizedek?

Mr.Jones: Well, just once.

Judge: So the Bible never said that he gave week after week?

Mr.Jones: No it does not.

Judge: Where did Abraham get the things that he gave to Melchizedek?

Mr.Jones: Well the Bible says it was from the plunders of war?

Judge: So you are telling me that he gave from the plunders of war?

Mr.Jones: Yes that's what the Bible says.

Judge: So he basically took things that were not really his in the first place and gave them as the tithe?

Mr.Jones: That is what the scripture seems to indicate.

Judge: Is it recorded that he ever took anything from his own possessions and tithed them to Melchizedek or anyone else?

Mr.Jones: I guess not

Judge: You guess not, you are a Pastor and you are only guessing, is it or is it not written that he ever gave any of his own possessions as a tithe to anyone?

Mr.Jones: No it is not written anywhere that I have seen.

Judge: Is it recorded as to what exactly Abraham did give Melchizedek?

Mr.Jones: I believe it says plunder?

Judge: So plunder could be any number of things?

Mr.Jones: Yes, I suppose

Judge: It could have been food, cattle, sheep, the people's possessions or any number of things. It does not say it was all money correct?

Mr.Jones: Yes you are correct, it does not say just money

Judge: As a matter of fact money is never mentioned in that account at all is that correct Mr.Jones?

Mr.Jones: Yes your Honor, money is never mentioned just goods and food and people.

Judge: So there is no way you can say with any certainty that Abraham in fact gave Melchizedek any money at all?

Mr.Jones: That is right.

Judge: I only have one last question for you Mr.Jones, did God command Abraham to give this plunder tithe to Melchizedek?

Mr.Jones: No, it appears that he did this voluntarily.

Judge: So are you trying to tell me that because of this voluntary, one time gift by Abraham, that may not have even consisted of money, all Christians everywhere are obligated to bring 10% of their weekly paycheck to a local church?

Judge: Considering all the evidence I would say you are beyond any shadow of a doubt guilty of deliberately trying to make the scriptures says things they have not said for financial gain.

Mr.Jones: Ok your Honor, I can see how foolish I was to try and use the story of Melchizedeck to try and get the people to tithe money. But there are many other verses that will support my belief on tithing. Jacob said he would give God 10% of everything. I think we should follow his example.

Judge: Let's see what Jacob said. Please read the verse you are talking about for me Mr.Jones.

Mr.Jones: In Genesis chapter 28 starting at verse 20 it says. Jacob vowed a vow, saying, "If God will be with me, and will keep me in this way that I go, and will give me bread to eat, and clothing to put on, so that I come again to my father's house in peace, and Yahweh will be my God, then this stone, which I have set up for a pillar, will be God's house. Of all that you will give me I will surely give the tenth to you."

Judge: You said we should follow Jacobs's example, is that right Mr.Jones?

Mr.Jones: Yes that is right, he vowed to give a tenth and we should too.

Judge: Let me point out one thing for you Mr.Jones, Jacob said he would Give God a tenth, ONLY if He blessed him first.

So as you said previously, we should follow Jacob's example and tell God that we will only give him a tenth if he blesses us first. Is that right?

Mr.Jones: That is not what I meant.

Judge: What did you mean then?

Mr.Jones: That we should give God a tenth also.

Judge: There you go again, trying to make the scripture say what you want it to say for your benefit. I would also like you to tell me the scriptures that say that Jacob kept his vow with God. I would also like to know where he gave the tenth to because there was no temple or levites to give it to at that time.

Mr.Jones: I can not think of any scriptures that say where or if he ever tithed after his vow.

Judge: It seems fairly obvious to me that Jacob made a voluntary and conditional vow to God. This in no way can be used as a reason to demand others to bring their income to you or any other place.

Mr.Jones: I do have a few more scriptures that I believe will show that we are supposed to tithe.

Judge: You have not said anything yet to convince me one little bit that people are obligated to tithe money to the local churches and that you were justified in what you were doing. You have taken scripture and misapplied it to your beliefs and for your gain. But in order to be fair to you I will allow you to present more evidence.

Mr.Jones: In the book of Malachi chapter 3 starting at verse 8 it says, will a man rob God? yet ye have robbed me. But ye say, In what have we robbed thee? In tithes and offerings. Ye are cursed with a curse: for ye have robbed me, even this whole nation. Bring ye all the tithes into the store-house, that there may be food in my house, and prove me now with this, saith the LORD of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it. So you see your Honor, we are commanded to bring the tithes into the storehouse or God will curse us.

Judge: Answer me this Mr.Jones, were you aware that God never required anyone to tithe money?

Mr.Jones: No I didn't know that.

Judge: The tithe spoken of here was always edible products never money.

Mr.Jones: well your Honor that is because they didn't have money at the time so God had them tithe food instead.

Judge: Not true, money is first mentioned in Genesis and Malachi was written hundreds of years later. God had them bring food in so that the levites, the fatherless and widows may eat and be satisfied. The tithe was used mainly to take care of people. Also notice it says in the verse you quoted, that there may be food in my house. How do you completely overlook the word food in those verses?

Mr.Jones: I don't know

Judge: I also want you to know that these verses speak to people under the Old Testament law. As you may or may not know Jesus fulfilled the law, it is no longer binding. Tithing was part of that law that has been abolished.

Judge: Once again you have tried to completely take a scripture out of context and apply it to others for your benefit. Can you give me a single scripture where God changed the tithe from food to money?

Mr.Jones: I do not know of any.

Judge: So if God never changed it from food to money who did?

Mr.Jones: Man must have.

Judge: So far all you have done Mr.Jones is take Old Testament scriptures out of context and try to apply it to believers under the New Covenant. Is this all the proof you have?

Mr.Jones: I do have a New Testament scripture that will show that Jesus told us to tithe.

Judge: Ok let me hear it.

Mr.Jones: Jesus said in Matthew 23:23 "Woe to you, scribes and Pharisees, hypocrites! For you tithe mint, dill, and cumin, and have left undone the weightier matters of the law: justice, mercy, and faith. But you ought to have done these, and not to have left the other undone. See Jesus said we should be tithing.

Judge: Let me ask you a question, who was Jesus talking to?

Mr.Jones: The scripture says the scribes and Pharisees.

Judge: Are you a scribe or Pharisee?

Mr.Jones: Of course not.

Judge: Jesus also said in that passage, you have left undone the weightier matters of the law. Are we under the law Mr.Jones?

Mr.Jones: No.

Judge: Why not?

Mr.Jones: Because Jesus fulfilled it.

Judge: When did Jesus fulfill the law?

Mr.Jones: When He was crucified.

Judge: So the law was still in effect until Jesus death?

Mr.Jones: That is correct.

Judge: I think you know where I am going with this don't you?

Mr.Jones: Yes your Honor. Since Jesus had not yet been crucified and the law was still binding the Pharisees were required to tithe because it was part of the law. Once the law ended, tithing ended also.

Judge: I want you to take a look at that verse again. Also tell me, what were they tithing?

Mr.Jones: The scripture says it was mint, dill and cumin.

Judge: Is money mentioned?

Mr.Jones: No it was not.

Judge: Once again it was edible products that they were tithing, not money. Do you have anything else you would like to say?

Mr.Jones: If people only tithed edible products like the scripture says, then how would the church survive? We have our mortgage payment, utility bills, my salary and a host of other things that we have to pay each week. We depend on the money from the people.

Judge: The need does not justify the means. In other words, just because you have all these debts does not give you the right to twist and manipulate scripture and cause people to give under fear of being cursed by God to meet your needs.

In closing, let me recap a few things for you Mr.Jones. The tithe was never money; the tithe was an Old Testament law, which is no longer binding. When it was binding the tithe was used to take care of people, not buildings. We are under a new covenant now. Paul instructs the Corinthian believers how they are to give.

He says in second Corinthians chapter 9 verse 7, Let each man give according as he has determined in his heart; not grudgingly, or under compulsion; for God loves a cheerful giver. So each believer is supposed to give as he or she has determined in his or her heart.

If you are trying to make people give under the threat of being cursed or any other reason you are wrong. Someone can not give cheerfully if they are being forced to give. If your church can not survive on freewill offerings maybe God is not part of your church at all.

Mr.Jones: I never realized all these things, I have always been taught that we had to tithe money to the local church and that is what I have always taught. I can see now that I was completely wrong. I did not study the scripture for myself, I only took mans word for it. Yes I am guilty. I will not teach this error anymore.

Judge: Mr.Jones, I can see that you done this in ignorance and are repentant, this court will not hold you accountable. It is your responsibility to know the truth.

I would advise you and everyone else in this courtroom to really start studying the Bible and seeking God on the subject of tithing and your eyes will be open. Do not just take mans word any longer. Start seeking God as to how and where He would have you give. Court adjourned.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM