(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
- 1 கொரி 2:15


கர்த்தருக்குள் அன்பானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் யாவருக்கும் என்னுடைய புதுவருட 2014 வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன். இந்த 2014ம் வருடமும் ஜாமக்காரன் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

2013 டிசம்பர்மாத ஜாமக்காரனில் உள்ளே வைத்து அனுப்பப்பட்ட விலாசம் புதுப்பித்தல் கார்டுகளை பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பி ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி. என் விலாசப்பட்டியலிலிருந்த ஏறக்குறைய அத்தனை வாசகர்களும் விலாசங்களை பூர்த்தி செய்து கார்டுகளை எனக்கு அனுப்பி ஜாமக்காரனை தாங்கள் எத்தனையாய் நேசிக்கிறார்கள் என்பதை அதன்மூலம் நிருபித்துவிட்டனர். Inland Card-ல் 2.50 பைசா ஸ்டாம்ப் ஒட்டி தபாலில் அனுப்பினால் ஒருவேளை அது தவறிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து சிலர் Speed Post, Courier, ரிஜிஸ்டர், கவர் ஆகியவைகளின் வழியாக விலாசம் புதுப்பித்தல் கார்டுகளை எனக்கு அனுப்பி குவித்துவிட்டனர். சந்தா இல்லை என்று நான் தெளிவாக குறிப்பிட்டும் ஏராளமானவர்கள் பூர்த்தி செய்த கார்டுகளுடன் நிறைய பணத்தை காசோலைமூலமாக இணைத்து வைத்து அனுப்பியுள்ளார்கள். கார்டுகளை பூர்த்தி செய்து அதை எனக்கு அனுப்பி புது விலாசபட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேர்களுக்கும், காணிக்கை அனுப்பியவர்களுக்கும் மறுபடியும் நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம்.

விலாசம் புதுப்பித்தல் கார்டுகளை பூர்த்தி செய்து எனக்கு அனுப்பிய இந்தியா, வெளிநாட்டு வாசகர்கள்மட்டுமே ஜாமக்காரன் வாசககுடும்பத்தில் நிரந்தர அங்கத்தினர்களும், பங்காளிகளுமாவார்கள். உங்கள் அனைவருக்காகவும், உங்கள் குடும்பங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.


Pages ||| 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN