இந்தியா மக்கள் அத்தனை பேர்களும் உலக நாடுகளும் ஆவலோடு கவனித்த ஒபாமாவின் பேச்சு இந்திய பிரதமருக்கும், ஆளும் BJP கட்சிகளுக்கும் குறிவைத்து கொடுத்த ஆலோசனைப் போன்ற ஒரு எச்சரிப்பாக அவர் பேச்சு சிறப்பாக அமைந்தது.
மேலும் குடியரசு தினத்தன்று ஊர்வல காட்சி வாகன விளம்பரங்களில் இந்திய அரசியல் சாசனம் என்று எழுதப்பட்டத்தில் மத சார்பற்ற நாடு இந்தியா (SECULAR) என்ற மிக முக்கிய வார்த்தையும் சோஷலிசம் கொள்கையுடைய இந்தியா என்ற முக்கிய வார்த்தையும் நீக்கப்பட்டிருந்தது.
இவைகளெல்லாம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உள்ளத்தில் பெரும் உளைச்சலை உண்டாக்கியிருக்கவேண்டும். அது அவர் பேச்சில் திட்டமாக வெளிப்பட்டது.
 ஒபாமா அவர்கள் பேசியதாவது: இந்தியா மத நல்லிணக்கத்தை இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் உறுதியுடன் பின்பற்றவேண்டும். இந்திய துணைகண்டத்தில் மதரீதியாக ஒரு நாளும் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது. நாடு ஒற்றுமையாக இருந்தால்தான் இந்தியாவுக்கு பொருளாதார வெற்றிகள் குவியும். மத சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல. இந்தியகுடிமகன் ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. பலமுக தன்மைதான் நமது பெலம்.
உலகில் கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் போன்ற மதங்கள் உள்ளன. இத்தனை மதங்களும் உலகம் என்ற ஒரே தோட்டத்தில் மலர்ந்த மலர்களாகும். மனிதர்களில் நிறம், இனம், மதம் என்ற எவ்வித பாகுபாடும் யாரும் பார்க்ககூடாது. மனித உரிமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எனது (ஒபாமா) ஆரம்பகால வாழ்க்கையில் என் தோலின் கருப்பு நிறத்தினால் சில மோசமான அனுபவங்கள் எனக்கு நேரிட்டன. அந்த மோசமான அவமானங்கள் அனுபவங்களையெல்லாம் தாண்டித்தான் நான் அமெரிக்க நாட்டு அதிபராக உயர்ந்துள்ளேன்.
 மார்டீன் லூத்தர் கிங், மகாத்மா காந்தி போன்ற மாபெரும் தலைவர்கள்தான் எனக்கு ரோல் மாடலாக கவனித்து முன்னேறினேன்.
|