சிலர் தினம் குடித்து விட்டு வீட்டுக்குவந்து மனைவியை துன்புறுத்துவோரும் உண்டு. சில வீடுகளில் கணவன்மார் வேலைக்குப் போகாமல் மதுபானம் குடித்து மனைவி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிட்டு மனைவியை அடிமைப்போல் நடத்தியவர்கள் உண்டு. சில கணவன்மார்கள் மனைவி பிள்ளைகள் வீட்டில் இருக்க வேறு ஒரு பெண்ணோடும் குடும்பம் நடத்தி தன் சம்பாத்தியத்தை இரண்டாம் மனைவிக்கு கொடுத்து அவளிடம் சுகம் அனுபவித்து, தாலி கட்டிய மனைவியையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் பெற்ற பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கை கேள்விக்குறியாக்கிவிட்டவர் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஒரு நாள் மனைவி மரித்தவுடன் மனைவிக்கு செய்த துரோகத்தை காலமெல்லாம் நினைத்து கதறி கதறி அழும் கணவன்மார் உண்டு.

கணவன் மரித்து மனைவியால் துக்கத்தை மறந்து வாழ முடியும். ஆனால் மனைவி மரித்துபோனவுடன் கணவனால் நிம்மதியாக வாழமுடியாது. மனைவி மரித்தபின் சில கணவன்மார் நொடிந்துபோய் மனவேதனையோடு இப்போதும் வாழ்கிறார்கள். மனைவி மரித்தபின்தான் பலருக்கு மனைவியின் அருமை புரிகிறது. ஆகவே மனைவி உயிரோடு இருக்கும்போத உங்கள் குடும்ப வாழ்க்கையை இன்பமானதாக்கி மனைவியை சந்தோஷத்துடன் வாழவையுங்கள். சிலர் வாழ்க்கையில் மனைவி மரித்தால்போதும் முழுகுடும்பமும் நிம்மதியாய், சந்தோஷமாய், சமாதானமாய் வாழமுடியும் என்று நினைக்கும் நிலையில் சில மனைவிமாரின் சுபாவம் அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர் குடும்பத்தில் மனைவி இல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைக்குமளவு சில மனைவிகள் கொடூரமானவர்களாய், கணவனுக்கும் குடும்பத்துக்கும் தலைவலியாய் இருக்கும் மனைவிமார்களும் உண்டு. அப்படிப்பட்ட மனைவியின் மோசமான சுபவாத்துக்கு அவளின் பெற்றோர் வளர்ப்பு சரியில்லாததே பிரச்சனைக்கெல்லாம் காரணமாகும். குணசாலியான பெண் வீட்டை கட்டுகிறாள். அப்படிப்பட்ட பெண் மனைவியாய் கிடைப்பது பாக்கியமே. எனவே உயிரோடிருக்கும்போதே மனைவியை நேசியுங்கள். திருமணமாகாதவர்கள் குணசாலியான மனைவி கிடைக்க ஜெபியுங்கள்.

குறிப்பு: கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டதை வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த ஜாமக்காரனிலும் கீழ்காணும் கட்டுரையை வெளியிடுகிறேன்.


உங்கள் மனைவிக்காக ஜெபிப்பது எப்படி?

கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசா 40:31).

உங்கள் மனைவியை நீங்கள் கரம்பிடித்த நாளிலிருந்து அவளுக்காக ஜெபிக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?.

ஆணுக்கு, பெண் திருமண உறவுக்குள் துணையாக இருக்கவேண்டுமென்பது தேவனுடைய அநாதி சித்தமும், தீர்மானமும் என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ளவேண்டும். திருமணம் தேவனுடைய திட்டம். ஆதி 2:18 வசனத்திலே "பின்பு தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" என்றார் என்று சொல்ல காண்கிறோம். திருமண வயதை அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஏற்ற துணை உண்டாயிருக்கவேண்டும் என்பது தேவன் ஆதியிலே, ஏதேன் தோட்டத்திலே திருவுளம் பற்றினது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM