இப்படிப்பட்ட தலைமைக்கு மனசாட்சியினிமித்தம் (அதிகாரங்களுக்கு) கீழ்ப்படிய வேண்டும். இதற்காகவே நீங்கள் Tax, வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள்.... தேவ ஊழியக்காரர்களாகயிருக்கிறார்களே என்று கிறிஸ்தவ வேதம் போதிக்கிறது.

இந்த வசனத்தில் அரசாங்க பொறுப்பில் உள்ளவர் நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள். உன்னை மோசமாக நடத்தினால் சோர்ந்துபோகாதே? இவர்கள் யாவரும் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று வேதம் அறிவிக்கிறது.

சுவிசேஷம் அறிவிக்கிறவர்கள்தான் ஊழியக்காரர்கள் என்று நாம் நினைக்கிறோம். மோசமான தலைவர்கள், அதிகாரிகள்கூட தேவனால் அனுமதிக்கப்பட்ட தேவ ஊழியர்கள் ஆவர்.

கிறிஸ்தவ சபையில் ஒரு ஆயர் (பாஸ்டர்) இரட்சிக்கப்பட்ட அனுபவம் உள்ள உண்மையான ஊழியர் இருந்தார். அவர் சபையில் ஒரு பணக்கார குடும்பம் அவர்கள் வீட்டின் பிள்ளைக்கு முறையற்ற, தவறான திருமண ஏற்பாட்டை செய்ய ஆயர் கட்டாயப்படுத்தப்பட்டார். வேத வசனத்துக்கு அரசாங்கத்துக்கும் விரோதமான தவறான, அந்த கள்ள திருமண ஏற்பாட்டை இந்த குறிப்பிட்ட ஆயர் கையெழுத்திட்டு நடத்திதர கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த தவறான திருமணத்தை நான் நடத்தமாட்டேன் என்றார்.

டையோசிஸ் நிர்வாக கமிட்டியின் கண்டிப்பான சிபாரிசும் இதில் கலந்திருக்கிறது. ஆனால் தேவனுக்கு பயந்த அந்த நல்ல ஆயர் (பாஸ்டர்) அதற்கு இணங்கவில்லை.

பிஷப் அவர்களும் இந்த தவறான திருமணத்தை நடத்திதர அந்த ஆயருக்கு கட்டளையிட்டார். பிஷப் அவர்களின் கட்டளையையும் அந்த சபை ஆயர் (பாஸ்டர்) நிராகரித்தார்.

இதன் காரணமாக ஒரே மாதத்தில் அந்த ஆயர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மனைவி ஒரு ஆசிரியை அவரும் உடனே மிக தொலைவில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர்களின் பிள்ளைகள் பள்ளி வருடத்தின் இடைப்பட்ட மாதங்களில் புதிய பள்ளிக்கூடத்தில் சேர்க்கவும் முடியாமல் ஆயர் ஒரு இடம், ஆயரின் மனைவி மிக தூரத்தில் உள்ள ஊரில் இடமாற்றம், பிள்ளைகள் நிலை மிக பரிதாபம். ஆயரும் அவர் மனைவியான அந்த ஆசிரியையும் ஒரு மாதம் விடுப்பு (லீவ்) எடுத்து கர்த்தரிடம் உபவாசித்து ஜெபித்தார்கள். பிஷப்பிடம் கெஞ்சி பிரயோஜனமில்லை, டையோசிஸ் நிர்வாகிகளிடமும் சிபாரிசுக்கு போகவில்லை. பெரிய பணக்காரரின் விரோதத்தை சம்பாதிக்க பிஷப் விரும்பவில்லை. பெரிய தொகையாக பிஷப் கையில் திருமண குடும்பத்தினர் திணித்தனர். ஆகவே ஆயரை பிஷப்பே இடம்மாற்றம் உத்தரவு கொடுத்தார். ஆனால் ஆயர் குடும்பம் கர்த்தரிடம் மட்டும் முறையிட்டார்கள். கர்த்தர் எழுந்தருளினார். கர்த்தர் சினம் கொண்டார். முதலில் கர்த்தரின் கோபம் பிஷப்மேல் வந்தது. அதன் காரணமாக பிஷப்புக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்தபடுக்கையானார். இனி அவரால் செயல்படமுடியாது என்று சினாட் தீர்மானித்து அந்த பிஷப்புக்கு பதில் பிஷப் கமிசரியை தற்காலிகமாக சினாட் நியமித்தது.

இரண்டாவது கர்த்தர் ஆயரின் மனைவிக்காக கல்வி அதிகாரி மூலம் செயல்பட்டார். அந்த ஆசிரியை கல்வி அதிகாரியை நேரில் சந்திக்காமலே அதிகாரிகள் மூலம் செயல்பட்டார். இந்த இடமாற்றம் வருடத்தின் மத்தியில் நவம்பர் மாதம் ஏன் இந்த குறிப்பிட்ட ஆசிரியைக்கு கொடுக்கப்பட்டது என்று கிறிஸ்தவ பள்ளிகூட நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படியும், மேலும் ஒரு வாரத்துக்குள் அந்த ஆசிரியை பழைய இடத்துக்கே இடம்மாற்றம் செய்து எழுத்துமூலம் அதை அறிவிக்கவேண்டும் என்றும் கல்வி அலுவலகம் கட்டளையிட்டது. பிரச்சனை அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரிகள்வரை சென்றது. கிறிஸதவ பள்ளியின் தலைவரான பிஷப்புக்கு இதன்மூலம் அரசாங்க தண்டனை அளிக்கும் என்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் நிர்வாகமும், தற்காலிக பிஷப் கமிஷரியும் இணைந்துபேசி அந்த ஆயரையும், அந்த ஆசிரியையும் பழைய இடத்துக்கே மாற்றம் செய்துவிட்டனர். அதன்பின் சுமார் 5 வருடம் ஆயர் (பாஸ்டர்) அவர் மனைவியான ஆசிரியையும் அதே இடத்தில் பணியாற்றினார்கள். எப்படியோ திருட்டு கல்யாணத்தை வேறு ஆயர் மூலமாக அந்த பணக்கார குடும்பம் நடத்தி முடித்துவிட்டார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM