செய்திகள்! செய்திகள்!!
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிந்தது:

60 ஆண்டு போராட்டத்துக்குபிறகு கடந்த காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவை தெலுங்கானா என்றும், சீமாந்திரா என்றும் இரண்டு மாநிலமாக பிரித்துவிட்டது. 3.6.2014 அன்று தனி தெலுங்கானாவின் முதலமைச்சராக திரு.கே.சந்திரசேகரராவ் அவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இரண்டு மாநிலத்துக்கும் தற்காலிகமாக 10 வருடங்களுக்கு ஹைதராபாத் நகரம் தலைநகரமாக அமையும்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள்: அடிலாபாத், நிஷாமாபாத், கரீம் நகர், மெடாக், வாராங்கல், ரங்காரெட்டி, கம்மம், நல்கொண்டா, மெகபுப் நகர், ஐதராபாத் ஆகும்.

சீமாந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள்: சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர், கர்நூல், ஓங்கோல், குண்டூர், கிருஷ்ணா, யானம் (பாண்டிசேரி), காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டிணம், விஜய நகரம், படுகாகுளம் ஆகும்.

இப்போது இந்தியாவில் புதிய தெலுங்கானாவுடன் சேர்த்து மொத்தம் 29ம் மாநிலமாக அமைந்துள்ளது.


கவனிக்கவும்

1. குறைவான Stamp ஒட்டி அனுப்பும் பத்திரிக்கைகளை, கடிதங்களை, கவர்களை ஒரு சிலவற்றை மட்டும் திருப்பி அனுப்புகிறோம். காரணம் அனுப்புபவர்கள் அந்த தவறை சரிசெய்து கொண்டு கடிதத்தின் சரியான எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப அது அவர்களுக்கு உதவும். இப்படி எழுதுவது உங்களை வேதனைப்படுத்தினால் பொறுத்துக்கொள்ளவும். கவர் அனுப்புபவர்கள் Stamp ஒட்டி அனுப்பும்போது சரியான எடை பார்த்து, அதற்குரிய Stamp ஒட்டி அனுப்பவும்.

2. Book Post என Rs.4 தபால்தலை ஒட்டும்போது திருமண அழைப்பிதழ்களில், கையெழுத்து இட்டோ அல்லது பேனாவில் எதையாவது எழுதினாலோ Due அல்லது அபராதம் (Fine) இடுவதால் தபால் அனுப்புபவர் எச்சரிக்கையாக அனுப்பவும்.

3. எங்களுடைய ஜாமக்காரன் உங்களுக்கு அல்லது அனுப்பப்படும்போது உங்களுக்கு அனுப்பும் எங்கள் கடிதங்கள் ஏதாவது காரணத்தால் தபால்துறையிலிருந்து Due (Fine) வசூலிக்கப்படும்போது அதை Refused என்று எழுதி தயவுசெய்து எங்களுக்கே திருப்பி அனுப்பவும். நாங்களும் எங்களை சரி செய்ய அது உதவியாக இருக்கும்.

4. பேங்க் வழியாக, Emo-மூலமாக காணிக்கை அனுப்புபவர்கள் தயவுசெய்து இ-மெயில் மூலமாகவோ, தொலைப்பேசி மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ நீங்கள் காணிக்கை அனுப்பிய தேதி - தொகை - எந்த பேங்க் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவித்தால் நல்லது. பேங்க் பாஸ்புக்கில் எங்கிருந்து அந்த தொகை வந்தது!, யார் அனுப்பியது! போன்ற விவரங்களை பேங்க் பாஸ்புக் மூலம் அறிய முடிகிறதில்லை. ஆகவே நீங்கள் காணிக்கையை பேங்க் மூலமாக என் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிய உடனே எங்களுக்கு தெரிவித்துவிடுங்கள். இவ்விஷயத்தில் ஒத்துழைப்பு தந்தால் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டும்போது அவர்கள் எங்களை குற்றம் சாட்ட முடியாதபடியிருக்க உங்கள் அறிவிப்பு உதவியாக அமையும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM