பிரபல AOG சபை ஊழியர் பால் யாங்கி சோ அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்:

உலகில் மிகப்பெரிய சபை என்று பெயர் பெற்ற, சுமார் 16 லட்சம் அங்கத்தினர்கள் அடங்கிய மிக பிரம்மாண்டமான சபையை நடத்தும் ஊழியர்.பால் யாங்கி சோ அவர்களும், அவர் மகனும் சபை காணிக்கை பணத்தை கோடிகோடியாக வியாபாரத்தில் விரயம் செய்தனர். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து சபை விசுவாசிகளை அதில் பங்குதாரராக ஆக்க அவர்களை கட்டாயப்படுத்தி பணம் செலுத்தவைத்து அதை அவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக சபை மக்களே போலீஸ்ஸில் புகார் அளித்ததாலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலும் கொரியா தேச நீதிமன்றம் இருவருக்கும் சிறை தண்டனை அளித்தது. பல வருடங்களுக்கு முன்பே பால் யாங்கி சோ உபதேசத்தில் வழிவிலகிப்போனார் என்பதையும் அதன் விவரத்தையும் ஜாமக்காரனில் பக்கம் பக்கமாக எழுதினேன். அன்று பெந்தேகோஸ்தே சபை மக்கள் வழக்கம்போல் குற்றம் சுமத்தும் ஆவியில் நான் அதை எழுதினேன் என்றார்கள்.

சகோ.சாம் ஜெபத்துரை, மோகன்.சி.லாசரஸ், பால் யாங்கி சோவை பின்பற்றுகிறவர்கள் என்பதை அவர்கள் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் அறிவீர்கள். ஜெபமலை, 3 நாள் உபவாசம், 12 மணி நேரம் ஜெபம் இவைகள் யாவும் கொரியாவில் பால் யாங்கி சோ சபையில் பின்பற்றுவதாகும். கொரியாவில் உள்ள ஜெபமலையின் காப்பிதான் சகோ.மோகன் சி.லாசரஸ் கட்டியுள்ள ஜெபமலையாகும். அவரை புகழ்த்தி எழுதிய புத்தகமும் இவர்களுடைய கூட்டங்களில் விற்பனை செய்தார்கள். இப்போதும் அவர்கள் பத்திரிக்கைகளில் அதன் விளம்பரத்தை பார்க்கலாம்.

சகோ.பால் யாங்கிசோ தன்பெயரை ஏன் மாற்றிக்கொண்டார் என்ற விபரமும் இயலுமனால் இவர்களின் மற்ற முழுவிவரமும் அடுத்த ஜாமக்காரனில் வெளிவரும்.


கிறிஸ்தவ சிறுபிள்ளைகள் ஜாக்கிரதை:

மே மாதம் வியாழக்கிழமை சத்தியம் தொலைகாட்சியில் சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்திக்கு முன் 3 வயதிலிருந்து 6 வயதுக்குள்ள சிறு பிள்ளைகளை வானத்திலிருந்து தேவதூதன் இறங்கி வந்து பெற்றோர் அறியாது அந்த பிள்ளைகளை பரலோகத்துக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் கழித்து பூமியில் இறக்கிவிடுகிறார்கள். உடனே அந்த பிள்ளைகள் தீர்க்கதரிசனமும் உரைக்கிறார்கள் என்று காட்டப்பட்டது. ஆரம்பத்தில் பிள்ளைகள் காணாமல்போனதைக் குறித்து பெற்றோர் பதறிபோனார்களாம், பிறகு அவர்களை தூதர்கள் பரலோகம் அழைத்துபோன விவரம் அறிந்தபின், இப்போது பிள்ளைகள் 3 நாட்கள் வீட்டுக்கு வராமல் இருந்தாலும், காணாமல்போனாலும் பெற்றோர் கவலைப்படுவதில்லையாம். அவர்கள் தங்கள் பிள்ளைகள் பரலோகம் போயிருப்பதை அந்த பெற்றோர்கள் விளங்கிக்கொண்டதால் கவலைபடுவதில்லையாம். எப்படியும் தூதர்கள் பிள்ளைகளை திருப்பிகொண்டுவந்து விட்டுவிடுவார்கள் என்று தைரியமாக இருக்கிறார்கள். இதே அம்புலிமாமா கதையைத்தான் வின்சென்ட் செல்வகுமாரும், சாது சுந்தர் செல்வராஜ் அவர்களும், ஏஞ்சல் TVயில் விரிவாக தினசரி கதைகதையாக பரலோக நாடகத்தைக் காட்டி பெற்றோர்களின் சாட்சியுடன் TVயில் கூறி, கிறிஸ்தவ மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM