கீதையில் ஒரு கட்டத்தில் விஸ்வ ரூப காட்சியில் எல்லா உலகங்களையும் நாராயணன் தன்னுள் அடக்கியிருக்கின்றான் என்று விஸ்தாரமாக எடுத்துரைக்கப்படுகிறது. அதோடு இந்துக்களில் பல தெய்வங்கள் உண்டே. அப்படிப்பட்ட தெய்வங்களை வணங்குதல்கூட தன்னையே நாடி வந்துசேரும் என்று சொல்வதாக கீதையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் நாராயணனை சரண் அடைந்தால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்று அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்படுவதாக கீதையில் எழுதப்பட்டுள்ளது. இப்படி கிருஷ்ணன் அல்லது விஷ்ணுவின் மேன்மையை விளக்குகிற கீதை புத்தகத்தை இந்தியா அனைத்துக்கும் இந்திய புனித நூலாக ஏற்கவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தால் முஸ்லீம் மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ அதை எப்படி ஏற்பார்கள்?. இதில் நியாயம் ஒன்றுமில்லையே!.


ஆகையால் (சோவாகிய) நான் கூறுவது என்னவென்றால்:

மைனாரிட்டி மதத்தை சார்ந்தவர்களின் உணர்ச்சிகளைத் துண்டுகிற செயலாகத்தான் இவர்களின் செயல் அமையும். BJP கட்சியில் உள்ள பல MPக்கள், இன்னும் உள்ள சில முக்கியஸ்தர்கள் இப்படி பொறுப்பில்லாமல் தங்கள் மனம்போன போக்கில் பேசி வருவது ஆளும் கட்சிக்கு ஆபத்தானது ஆகும் என்று எச்சரிக்கிறேன்!.

BJP கட்சியிலேயே பிரதமர்.மோடியை உள்ளத்தில் வெறுப்பவர்கள், அவரை பிரதமராக ஏற்காதவர்கள் கட்சிக்குள் நிறையபேர் உண்டு. அப்படிப்பட்டவர்கள் பிரதமர்.மோடி அவர்களுக்கு தங்களின் இப்படிப்பட்ட பேச்சால் பிரதமர் ஆட்சிக்கு பிரச்சனை உண்டாக்க பார்க்கிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் BJP ஆட்களில் சிலர் இந்து மதத்தை ஏற்காத முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்கவேண்டாம். அவர்கள் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்றும், இந்தியாவில் வாழும் யார் ஒருவர் ராமனை தந்தையாக ஏற்கவில்லையோ அவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறந்தவர்கள் அல்ல என்ற அர்த்தத்தில் அவர்கள் யாவரும் முறைகேடாக பிறந்த இந்தியர்கள் என்று கூறி மத கலவரத்தை தூண்டுவதைப்போல் பல ஆபத்தான வார்த்தைகளால் மற்ற மத மக்களை தாக்கி துவேஷத்தை தூண்டுகிற பல பேச்சுக்கள் ஹிந்துத்துவா அமைப்புகளால் அரங்கேற்றப்படுகிறது. இது இந்திய சமாதானத்தையே குலைப்பதாகும்.

இப்படியெல்லாம் பேசி உளறிகொட்டி இந்த இந்திய தேசத்தை ஹிந்து தேசமாக இவர்களால் மாற்றிவிட முடியவே முடியாது என்பது சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த அமைச்சர்களுக்கு தெரியும். பின் ஏன் இப்படி பேசுகிறார்கள்?.

பிரதமர்.மோடி அவர்களின் பெயர் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. பிரதமர்.மோடி அவர்கள் தன் நிர்வாகத்தில் கூட உள்ள சக அமைச்சர்களிடம் நிர்வாகத்தில் கெடுபிடியை காட்டுகிறார். நிர்வாகத்தில் மோடி அவர்கள் கண்டிப்பாக இருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் BJP கட்சியில் உள்ள யாராவது பிரதமர்.மோடியை எதிர்த்தால் அவர்களுக்கு இந்து மதத்தினர் யாரும் ஆதரவு தரமாட்டார்கள் என்ற நிலை தோன்றிவிட்டது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM