இலங்கை சரித்திர சக்கரம் சுழன்றது

உலகமே மிகவும் எதிர்ப்பார்த்த தேர்தல் இலங்கை நாட்டு தேர்தலாகும். அதுவும் போர் குற்றவாளி என்று வர்ணிக்கப்பட்ட ராஜபக்ஷே மறுபடியும் இலங்கை அதிபராவாரா? என்று நான் சென்றுவந்த அனைத்து நாட்டினராலும் ஆவலோடு கேட்கப்பட்ட கேள்வியாகும்.

நடந்துமுடிந்த தேர்தலில் அவரின் ராஜதந்திர முறை மிக ஆச்சரியமானது. மிக தைரியமானதுமாகும். இலங்கை சிங்களர்களின் ஆட்சியில் இருந்தாலும், இலங்கையில் தேர்தல் முடிவு இலங்கை வாழ் தமிழர்களின் கையில்தான் இருந்தது. ஆகவே இலங்கை தமிழர்களை குறிப்பாக தான் கொன்று குவித்த யாழ்பாண (Jaffna) தமிழர்களையே இவர் சுற்றிசுற்றி ஓட்டு சேகரிக்க ஓடினார்.

தேர்தலில் ஜெயித்த திரு.மைத்திரிபாலா அவர்களை மனதில் கொண்டு தமிழர்களை பார்த்து கூறியது என்ன தெரியுமா? நீங்கள் அறியாத தேவதையைவிட, நீங்கள் அறிந்த பிசாசை நம்பலாம் என்றாரே அதுதான் அவரின் உச்சக்கட்ட மேலும் உண்மையான தேர்தல் செய்தியாகும்.

தன்னை ராஜபக்ஷே பிசாசு என்று வர்ணித்துக்கொண்டது அது ஆங்கில பழமொழியாக இருந்தாலும் அதுதான் உண்மையும்கூட. இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ஷே ஒரு பிசாசாகத்தான் அமைந்தார். அன்று உலகத்தின் முதல் பிசாசான லூசிபர் ஏதேன் தோட்டத்தை துவம்சம் செய்ததைப்போல் இலங்கை தமிழர் பகுதிகளை குறிப்பாக யாழ்பாண தமிழர்களின் குடும்பங்களை தேடிதேடி கொன்று குவித்து பிசாசு துவம்சம் செய்ததைப்போல் மனிதர்களை மனிதர்களாக பாராமல் ஈவு இரக்கமின்றி பந்தாடிவிட்டார். இத்தனை கொடூரங்களையும் செய்துவிட்டு அந்த தமிழர்களிடம் நேரில் சென்று ஓட்டு சேகரித்தார். இவரே தன் படங்களை மரம் உயர வரைந்து தமிழ் மாநிலம் முழுவதும் அலங்காரத்தோடு இவரை வரவேற்பதுபோல் பணத்தை தேர்தல் விளம்பரத்துக்காக அள்ளி தெளித்ததோடல்லாமல் அந்த தமிழர்களை நேரில் தனித்தனியாக சந்தித்து தயவுசெய்து பழையதை எல்லாம் மறந்துவிடுங்கள்!. உங்கள் தமிழ் மாநில முன்னேற்றத்துக்காக நான் பாடுபடுவேன். இப்போது நான் செய்த முன்னேற்றங்களை பாருங்கள். சாலைகள் செப்பனிட்டது, உங்கள் மறுவாழ்வுக்காக நான் செய்த உதவிகளை ஞாபகத்தில் வைத்து என்னை ஜெயிக்க உதவுங்கள் என்றபோது, ......


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM