இலங்கை 1947ம் ஆண்டில் இந்தியாவைப்போல் சுதந்திரம் பெற்றாலும் மக்களால் ஆளப்படும் குடியரசு நாடாக 1972ம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டது. 1978ம் ஆண்டில்தான் (ஜனாதிபதி) அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தபட்டது. முதல் அதிபர் தேர்தல் 1982ம் ஆண்டுதான் நடைப்பெற்றது. அதுவரை பிரதமர்தான் அதிகாரம் உள்ளவராக இருந்தார்.

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் இரண்டுமுறை மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் ராஜபக்ஷே பதவிக்கு வந்தபின் சட்டத்தை மாற்றினார். அரசியலமைப்பு சட்டம் 18வது சட்டப்பிரிவைத்திருத்தி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த புதிய சட்டத்திருத்தம் இவருடைய பதவிக்கே உலை வைத்தது. எதிர்ப்பார்த்தப்படி அவர் ஜெயிக்க முடியவில்லை.

முதல்முறை அதிபராக பதவி ஏற்றதும் விடுதலைப் புலிகளோடு உள்நாட்டு யுத்தம் செய்ய தீவிரம் காட்டினார். அதன் முடிவாக 2009ம் ஆண்டில் வெற்றியும் பெற்றார். அதையே பெரும் வெற்றியாக காட்டி 2010ல் உடனே தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார். ஆனால் மூன்றாவது முறையும் அதே வழியில் பதவி காலம் முடியும் முன்பாக தேர்தல் நடத்தி பெரும் வெற்றி பெறுவோம் என்று பெரிய அளவில் நம்பினார். ஆனால் அது இத்தனை பெரிய தோல்வியை உண்டாக்கும் என்றோ, தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி போடும் என்றோ ராஜபக்ஷே அவர்கள் கற்பனையிலும் சிந்திக்கவில்லை.

இந்த முறை ராஜபக்ஷே தோற்றதற்கு முக்கிய காரணங்கள் திரு.மைத்திரிபாலா சிறிசேனா அவர்களை அதிபர் வேட்பாளராக அறிவித்து அவரை முன் முன்நிறுத்தி அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டன. ரனில் விக்கிரமசிங்கே, சரத் பொன்சேகா, விஜய குமாரதுங்கா போன்றவர்கள் அனைவரும் ஒன்றாக கூட்டாக இணைந்து மைத்திரி அவர்களை ஆதரித்தனர். கடந்த 9 வருடங்களாக அரசியலைவிட்டு விலகியிருந்த சந்திரிகாவும் எதிர்கட்சிகளுடன் இணைந்து மைத்திரியை ஆதரித்தார்.


இலங்கையில் தமிழர்களின் எதிர்ப்பு:

இலங்கையில் மலையில் வாழும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் இந்திய வம்சாவழி தமிழர்களும், யாழ்பாண தமிழர்களும் ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷேயை எதிர்த்து ஓட்டுபோட்டனர்.

தமிழர்களின் நிலங்களை நிரந்தரமாக கையகப்படுத்த முயன்றது. தமிழர் வாழும் பகுதியை முழுவதையும் ராணுவ கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்தது. கல்வி, வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது. தமிழ்நாடு என்று தனியாக இருக்கக்கூடாது என்று தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றியது, வடக்கு மாகாண தமிழ் அரசுக்கு உரிய அதிகாரங்களை தர மறுத்தது. ஆகியவைகளை தமிழர்களை கூடுதல் வெறுப்படைய செய்தன.

அதோடு சிங்கள தீவிரவாதிகள் முஸ்லீம்களை அடிக்கடி தாக்கி துன்புறுத்தியதை ராஜபக்ஷே தடுக்கவில்லை. ஆகவே அனைத்து முஸ்லீம்களும் ராஜபக்ஷேக்கு எதிராக ஓட்டளித்தனர். சிங்கள புத்த பிட்சுக்கள் கிறிஸ்தவ ஆலயங்களை சுமார் 200 ஆலயங்களை தாக்கியது. கிறிஸ்தவர்கள் அனைவரும் ராஜபக்ஷேக்கு எதிராக ஓட்டளித்து தோற்கடித்தனர்.

இலங்கையில் கூடுதல் செல்வாக்கை பெற்ற சிங்கள புத்தபிட்சுகளின் ஜாதிக ஹேல உருமய என்ற கட்சியும், ராஜபக்ஷேயை இம்முறை வெறுத்து ஒதுக்கியது மைத்திரி அவர்கள் ஜெயிக்க காரணமாக அமைந்தது. மேலும் தமிழ்நாட்டைப்போல் ராஜபக்ஷேவின் குடும்பங்கள் அனைத்துக்கும் பெரும் பதவிகள் அளிக்கப்பட்டது. அவர்களின் பலரின் அட்டகாசம் சிங்களருக்கு வெறுப்பை உண்டாக்கி ராஜபக்கேஷவை ஒதுக்கியது. இப்படியாக ராஜபக்ஷே என்ற பயங்கர சர்வாதிகாரி அதிபர் பதவியிலிருந்து திரும்ப வரமுடியாத அளவு தோல்வியடைந்து இலங்கை சரித்திரத்தின் கருப்பு புள்ளியாக சரித்திரத்தில் இடம்பெற்றார். அவர்கள் அத்தியாயம் ஒருவழியாக முடிவு பெற்றது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM