மனிதனின் புலம்பலும்
தேவனின் ஆறுதல் வார்த்தைகளும்

மனிதன்: என்னை நேசிப்பார் யாருமில்லை

தேவன்: எரேமி 31:3-அநாதி சிநேகத்தால் (நான்) உன்னைச் சிநேகித்தேன்.

மனிதன்: எனக்கு பயமாக உள்ளது

தேவன்: 2 தீமோ 1:7ல் பயமுள்ள ஆவியைக் தேவன் நமக்கு கொடுக்கவில்லை.

மனிதன்: என்ன செய்வதென்றே தெரியவில்லை

தேவன்: பிலி 4:13 - என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எதையும் செய்யமுடியும்.

மனிதன்: கவலைகளால் சோர்ந்து போனேன் என்ன செய்வது?

தேவன்: 1 பேது 5:7- அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் கவலைகளை அவர்மேல் வைத்துவிடலாம்.

மனிதன்: எனக்கு உதவுபவர்கள் யார்?

தேவன்: சங் 50:15 - ஆபத்துக் காலத்தில் (இயேசுவை) என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மனிதன்: இது என்னால் இயலாதது

தேவன்: லூக் 18:27- மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்

மனிதன்: நான் சோர்ந்து போயிருக்கிறேன்

தேவன்: மத் 11:28- நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு கூறுகிறார்

மனிதன்: என்னால் முன்னேறவே முடியவில்லையே

தேவன்: 2 கொரி 12:9 - என் கிருபை உனக்குப் போதும் என்று கர்த்தர் கூறுகிறார்

மனிதன்: என் தேவைகளை நிறைவு செய்யமுடியவில்லையே

தேவன்: பிலி 4:19 - என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

மனிதன்: நான் ஒரு அனாதையைப்போல் வாழ்கிறேன்

தேவன்: சங் 27:10 - என் தகப்பனும், என் தாயும் என்னைக் கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்.

மனிதன்: நான் மதியற்றவன் என்று பிறர் ஏளனம் செய்கிறார்கள்

தேவன்: 2 நாளாகமம் 1:12 - ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்று கர்த்தர் கூறுகிறார்.

மனிதன்: நான் ஒரு பாவி எனக்கு மன்னிப்பு கிடைக்குமா?

தேவன்: 1யோவான் 1:9 - பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்று அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.

மனிதன்: மரண பயம் என்னை கலக்குகிறது

தேவன்: யோவான் 11:25- நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.

- தொகுப்பு: ஜார்ஜ் மனாசா


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM