செய்திகள்! செய்திகள்!!
RSS தலைவர்கள் படித்த கிறிஸ்தவ பள்ளி-கல்லூரிகள்:

அத்வானி படித்தது - செயின்ட் பேட்ரிக்ஸ் ஹைஸ்கூல்
அருண் ஜெட்லி படித்தது - செயின்ட் சேவியர் ஸ்கூல்
ஸ்மிருதி இரானி படித்தது - ஹோலி சைல்டு ஆக்ஸிலியம் ஸ்கூல்
சுப்ரமணியசுவாமி படித்தது - ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ்
துக்ளக் சோ படித்தது - லயோலா கல்லூரி

வாஜ்பாய் முதல் இப்போதுள்ள RSS, BJP, VHP, பஜ்ரங்தள் இயக்கத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் அனைவரும் நல்ல படிப்புக்கும், சன்மார்க்கம், ஒழுங்கு இவைகளை கிறிஸ்தவ பள்ளிக்கூடம்தான் எனக்கு போதித்தது என்று கூறியவர்களாகும்.

காங்கிரஸ்ஸில் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்ஜய் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்கா கணவர் ராபர்ட் ஆகிய பெரும்பான்மை காங்கிரஸ்காரர்கள் எல்லாரும் கிறிஸ்தவ பள்ளிகளிலும், கிறிஸ்தவ கல்லூரிகளிலும் படித்தவர்களே.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவ கான்வென்டில் தங்கியும், கிறிஸ்தவ கான்வென்டிலும் படித்தவராவார்.

ஆனால் அகில பாரத இந்து மகா சபை தன் துண்டு பிரசுரத்தில் இந்துக்களே கிறிஸ்தவ பள்ளிகளை புறக்கணியுங்கள். உங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் சேர்க்கமாட்டோம் என்று தீர்மானம் எடுங்கள் என்று அதில் எழுதி அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். (2014 டிசம் 24)


மரண அறிவிப்பு:

நீண்டகால ஜாமக்காரன் வாசகரும், சேலம் CSI உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமாய் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு.வி.ஜான்சன், MA, BT., அவர்கள் தனது 77ம் வயதில் 2014 டிசம்பர் மாதம் கர்த்தருக்குள் நித்தியடைந்தார். இவர் கேரளாவில் திருவல்லா என்ற ஊரை சொந்த ஊராக கொண்டவர்.

ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பே கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து மருத்துவ தொழில் புரிந்த, மரித்த Dr.P.Varkey அவர்களின் மகனான திரு.ஜான்சன் அவர்கள் தமிழ்நாட்டிலேயே படித்து தமிழ்நாட்டிலேயே கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, தமிழ்நாட்டில் சேலத்திலேயே ஆசிரியர் பணி செய்து மரித்தவராவார்.

இவருக்கு மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் உண்டு. இவர்களின் ஆறுதலுக்காக ஜெபிப்போம். மார்தோமா சபை அங்கத்தினரான இவர் அன்றைய காலங்களில் மார்தோமா சபை அன்று சேலத்தில் இல்லாததால் ஆரம்ப முதல் CSI சபை அங்கத்தினராகவே சபையில் சேர்ந்து ஆராதித்து வாழ்ந்து மரித்தார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM