பதில்: பாரத தேசத்துக்கு தன்னுடைய வாழ்க்கையை, தான் படித்த பார் அட் லா என்ற வக்கீலின் உயர்ந்த படிப்பை இந்திய நாட்டு சுதந்திரத்துக்காக உதறித்தள்ளி, அரண்மனைப் போன்ற தன் சொந்த மாளிகையில் வாழும் வாழ்க்கையையும் அவர் துறந்து... தமிழ்நாட்டு கிராம மக்கள் மேலே வஸ்திரம் இல்லாமல் கோவணத்துடன் வாழும் வாழ்க்கையை நேரில் கண்டபின் இந்திய கிராம மக்கள் அனைவருக்கும் உடுக்க வஸ்திரம் கிடைக்கும்வரை நான் ஷர்ட், கோட், பேண்ட் போன்ற எதையும் உடுத்தமாட்டேன் என்று தியாக எண்ணத்துடன் வாழ்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க சிறையில் அடிப்பட்டு, ஜெயில் வாசம் செய்து கொடுமைப்படுத்தபட்டு முடிவில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழு இந்தியாவுக்கும் சுதந்திரத்தையும், குடியாட்சியையும் வாங்கி கொடுத்தாரே!

அதற்கான நன்றி உணர்ச்சி இப்போது ஆளும் BJPக்கோ, பிரதமர்.மோடிக்கோ இருந்திருக்குமானால் அல்லது இவர்களுக்கு இந்திய தேச பக்தி உள்ளத்தில் இருக்குமானால், நம் பாரத தேச தந்தையான மகாத்மா காந்தி அவர்கள் மதுபானத்தை இந்தியாவிலிருந்து நீக்கி விடவேண்டும் என்றும், மக்களை மதுபான அடிமையிலிருந்து காக்கவேண்டும் என்றும் பாடுபட்ட அவரை அவமானப்படுத்தும் வகையில் மதுபான டின்னுக்கு மகாத்மா காந்தி படத்தை பிரசுரித்து காந்தி பீர் என்று எழுதி விற்ற அந்த கம்பெனிமேல் அல்லது அதற்கு அனுமதி கொடுத்த அமெரிக்கா நாட்டின்மேல் தன் கண்டனத்தை தெரிவிதிருக்க வேண்டாமா?.

இவர்களுக்கு தேச பக்தி என்ற சொல் அரசியல் வியாபாரத்தில் உபயோகப்படுத்தும் சொல் ஆகும், இவர்களுக்கு உண்மையான தேச பக்தியிருந்தால் அந்த மகாத்மா காந்தியை கொன்ற RSS இயக்க தலைவர்களில் ஒருவனான கோட்சேக்கு கோவில் கட்ட பூமி பூஜை போட்டு மகாத்மா அவர்களை அவன் சுட்டது நியாயம்தான் என்றும், அது இந்திய தேசத்துக்கு அவன் செய்த தியாகம் என்பதாக இவர்கள் உள்ளத்தில் நினைப்பது உறுதியானது. என்ன மனசாட்சி?.

இதில் கொலைக்காரனுக்கு ஒரு கோவில்? கேட்கவே கூச்சமாக இருக்கிறது!.

இதுதான் இன்றைய இந்தியாவில் காவிப்படை ஆட்சியின் நிலையாகும்.

ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு:

விலாசம் மாற்றம் இருந்தாலோ அல்லது பத்திரிக்கை வரவில்லை என்றாலும் உடனே உங்களுடைய முழு விலாசத்தையும், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணினி எண்ணையும் (COMPUTER NUMBER) குறிப்பிட்டு எனக்கு CAPITAL LETTERSல் எழுதுங்கள் உங்களுக்கு உடனே ஜாமக்காரன் பத்திரிக்கை அனுப்பிவைக்கப்படும்.

உங்களுக்கு இரண்டு ஜாமக்காரன் பத்திரிக்கை வந்தாலும் உடனே எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். எங்களுடன் தொடர்புக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணினி எண்ணையும் குறிப்பிடவும். p>


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM