அவர் உபயோகித்த வார்த்தையையே தலைப்பாக்கி யாழ்பாண தமிழர்கள் துண்டு பிரதி அச்சடித்து வெளியிட்டார்கள். அதில் எழுதப்பட்டதாவது: எதை மறப்பது பிசாசே!, என் கணவனை, பிள்ளைகளை, பிறந்த குழந்தைகளையும் கொன்றதை மறக்கவா? கைகளை இழந்து, கண்களை இழந்து, கால்களை இழந்து, வாழ்க்கையையே முடமாக்கினீர்களே! அவைகளை மறக்கவா? தட்டிக்கேட்கவும் மனிதர்கள் இல்லாத மயானபூமியாக யாழ்பாணத்தை மாற்றி எங்கள் பெண்டினரை கற்பழித்து கெடுத்ததை மறக்கவா? எங்களுக்காக இந்தியா நாடு கட்டிக் கொடுத்த வீட்டில் சிங்களவர்களை குடியமர்த்தி எங்களை முள்வேலிக்குள் இன்னும் அடைத்து வைத்திருக்கிறீர்களே அவைகளை மறக்கவா? எதை மறக்க சொல்கிறீர்கள்?.

தமிழர்களின் உள்ள குமுறலாக கொப்பளித்த மரண வேதனையுள்ள இந்த கேள்விகள் ராஜபக்ஷே அடிவயிற்றை கலக்கின? அப்போதே தான் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்து கொண்ட ராஜபக்ஷே தனக்கு விசுவாசமான ராணுவத் தலைவர்களில் சிலரை இரகசியமாக அழைத்து தேர்தலில் தோல்வியுற்றால் கூலிபடைகளை கொண்டு செயற்கையான கலவரத்தை கொளும்பு நகரில் உண்டாக்கி அதையே காரணம் காட்டி ராணுவ ஆட்சியை கொண்டுவந்து பாகிஸ்தானைப்போல் ராணுவ சர்வாதிகாரியாக சில காலம் நாட்டை ஆளலாம் என்று திட்டமிட்டதை இந்திய இரகசிய உளவாளிகள் இலங்கை எதிர்கட்சி தலைவர்களுக்கு செய்தியாக அறிவித்து இலங்கையில் ராணுவ ஆட்சி வராமல் தடுத்தார்கள்.

தோல்வி செய்தி கேட்டவுடனே ராஜபக்ஷே இலங்கையைவிட்டு ஓட நினைத்தார். இயலவில்லை. எதிர்கட்சியினர் மிக கவனத்துடன் ராஜபக்ஷே குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்ததால் திட்டம் தோல்வியுற்றது.

மேலும் தன் சிங்கள இனத்தினரால் தன் உயிருக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை அறிந்து எதிர்கட்சியின் அதிபர் பதவி வேட்பாளருக்கும், பிரமதர் பதவி வேட்பாளருக்கும் செய்தி அனுப்பி தன் உயிருக்கு பாதுகாப்பு தருவதானால் அதிபர் மாளிகையிலிருந்து சொந்த வீட்டுக்கு எந்த பிரச்சனையும் உண்டாக்காமல் வெளியேறுவதாக வாக்களித்தார். அப்படியாக அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அதே நாள் அதிகாலையிலேயே அதிபர் மாளிகையிலிருந்து சத்தமில்லாமல் வெளியேறினார்.


யானை தன் கையாலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது:

ராஜபக்ஷே அவர்கள் அதிபர் பதவி முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கவே ஜோஸ்ஸியரை நம்பி, சூழ்நிலை தனக்கு சாதகமாக இருப்பதாக தப்பு கணக்கு போட்டு அவசரமாக தேர்தலை நடத்தினார். விளைவு! பெரும் தோல்வியையே அவர் தழுவினார். சிங்கள மக்களே பெரும்பகுதியினர் ராஜபக்ஷேக்கு எதிராக ஓட்டளித்தனர். காரணம், ராஜபக்ஷேவின் சகோதரர்கள் சொந்தங்கள் அனைவருக்கும் உயர்ந்த பதவிகளை அளித்து அரசு பணத்தை விரயமாக்கியதை கண்கூடாக கண்டதால் சிங்களர்களே ராஜபக்ஷேவை வெறுத்தார்கள். ராஜபக்ஷேக்கு எதிராக ஓட்டளித்தார்கள்.


இலங்கை நாட்டின் ஆட்சி முறை:

இந்தியாவும்-இலங்கையும் ஒரே நாளில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றது. ஆனால் ஆட்சிமுறையில் இலங்கை தலைவர்கள் தங்களுக்கென்று மாற்றம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்தியாவில் ஜனாதிபதி என்ற தலைமை பதவி ஒன்று இருந்தாலும் இந்திய பிரதமருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கும். ஆனால் இலங்கையில் (அதிபர்) ஜனாதிபதிக்குதான் அதிகாரம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர், ஜனாதிபதிக்கு உதவியாக செயல்படுவார் அவ்வளவே!. இலங்கை ஜனாதிபதி மக்களால் நேரிடையாக தெரிந்தெடுக்கப்படுவார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM