சகோ.பி.சாமுவேலின் வழி நடத்துதல் எமில் மூலமாக நிறைவேறியதால் FMPB இத்தனை ஆத்துமாக்களை மிஷனரிகள் மூலமாக சேர்த்தது அதன் காரணமாக ஆயிரக்கணக்கில் சபைகள் உருவானது.

சகோ.எமிலை அந்நியபாஷையை பேசவிடாமல், இந்தியாவின் அனைத்து பாஷை மக்களுக்கும், இயேசுவே தெய்வம் என்று எமில் மூலம் கர்த்தர் அறியச்செய்தார். கர்த்தரின் அந்த அற்புதமான வழிநடத்துதலுக்காக தலை வணங்குகிறேன். எமிலின் ஊழியங்களுக்காகவும், சாட்சியுள்ள வாழ்க்கைக்காகவும் நான் தேவனை துதிக்கிறேன்.

ஜாமக்காரன் வாசகர்கள் சகோ.எமிலின் ஊழியங்களுக்காகவும் சாட்சியுள்ள, கண்ணீருடன் ஜெபிக்கும் அவர் சாட்சியுள்ள அர்பணிப்புள்ள வாழ்க்கைக்காகவும் தேவனைத் துதிப்போம்.

(குறிப்பு: நான் மேலே எழுதிய விவரங்களில் தவறான தகவல்களோ! மிகைப்படுத்தலோ! இருந்தால் உடனே எனக்கு எழுதி தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.).


சகோ.எமிலின் வானொலி ஊழியத்தின் சாட்சி:

கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பி வந்த ரஷ்யாவின் ஒலிபரப்பு கோபுரங்களின் வானொலி மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் மாபெரும் பணியைச் செய்தவர் எமில் ஜெபசிங்.

அதிகாலை 05:30 மணிக்கு வானொலி மூலம் இவர் ஒலிப்பரப்பிய ஒவ்வொரு நாளும் ஒரு வேத பகுதியை வாசித்தல் என்ற நிகழ்ச்சியை கேட்டு பயன் பெற்றோர்களில் முன்னாள் இந்திய பிரதம மந்திரி திருமதி.இந்திராகாந்தியும் ஒருவர் என்று இவர் சொன்ன சாட்சி நமக்கெல்லாம் ஆச்சரியம் தந்த ஒன்று ஆகும்.

சகோ.எமிலின் ஆத்ம அமைதி

சகோ.எமில் அவர்கள் FMPB ஸ்தாபனத்தைவிட்டு விலகியபின் 1979ம் வருடம் அவர் சொந்தமாக ஆரம்பித்த பத்திரிக்கையான ஆத்ம அமைதி பத்திரிக்கையிலிருந்து சில துண்டு செய்திகள்:

கர்த்தர் நமக்கு உதவி செய்தார்:
புது வருட செய்தி:

அசரியா என்பது ஒரு அழகான வேதாகமப் பெயர் ஆகும். அந்த பெயரின் பொருள் கர்த்தர் எனக்கு உதவி செய்தார் என்பதாகும். நெல்லை மாவட்டத்தில் வெள்ளாளான் விளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவனின் பெயர் அசரியா என்பதாகும். கர்த்தர் அந்த சிறுவனுக்கு உதவி செய்ததினாலே ஆந்திரா மாநிலத்தின் அறிப்படாத பகுதியில் பல ஆலயங்கள் எழும்பி, டோர்ணக்கல் என்ற திருமண்டலமே பிறந்தது. அசரியா என்ற பெயர் எபிரேயர்களுக்குள் மிகப் பழகிய பெயராகும். சாலமோன் அரசனின் பிரதம மந்திரியின் பெயர் அசரியா ஆகும்.

எசேக்கியா அரசனின் பிரதான ஆசாரியனின் பெயர் அசரியா என்பதாகும். பாபிலோனில் ஆபேத்நேகோ என்று அழைக்கப்பட்டவனின் இயற்பெயர் அசரியா (தானி 1:7). என்பதாகும். அசரியா என்ற பெயரைப்பெற்று வேத புத்தகத்தில் காணப்படும் அனைவரும் தேவனின் உதவி பெற்றவர்களே ஆவர். அவர்களது வாழ்வு தேவனால் நிலைநிறுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டது. கர்த்தரின் உதவி அனைவருக்குமே உரியது. அதனைக் கடந்த ஆண்டு பெற்றவர் இந்த ஆண்டும் பெறுவார்களாக. சென்ற ஆண்டில் பெறத்தவறியவர்கள் இப்புத்தாண்டில் பெற்று சுகிப்பார்களாக.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM