CIGM (Cylone & India General Mission) என்ற நல்ல சபை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உண்டு. பள்ளிக்கூடம், ஏழைப்பிள்ளைகளுக்காக இலவச இல்லங்கள் கட்டப்பட்டது. அரூர், அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், சிறுமுகை இன்னும் பல இடங்களில் ஆலயம் உண்டு. இப்போது ஆலய இடங்களில் கொஞ்சகொஞ்சமாக விற்றுக்கொண்டு வருகிறார்கள். மிஷனரிகள் யாரும் இப்போது இல்லை. அந்தியூர் போன்ற சில ஊர்களில் ஆலயத்தைச்சுற்றி ஏராளமான நிலங்கள் உண்டு. அதில் ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் கட்டலாம். ஆனால் நிர்வாகம் பொறுப்பில் உள்ளவர்கள் ஆலயத்தில் உள்ள சிலரை தங்களுக்கு சாதகமாக்கி ஆலய நிலங்களை விற்க பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சபையினர் விழித்துக்கொண்டனர். நிலம் விற்காதபடி நீதிமன்றம் மூலம் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆக, சபை மக்கள் ஒன்று சேர்ந்தால் தங்கள் ஆலயம் சுற்றியுள்ள எந்த நிலத்தையும் விற்கக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் எந்த நிர்வாகமும், எந்த பிஷப்மார்களும், சபை மக்களை மீறி ஒரு துண்டு நிலத்தையும் விற்கமுடியாது. கொடைகானலில் உள்ள மெத்தடிஸ்ட் நிலங்களைப்போல சில இடங்களில் உள்ள மெத்தடிஸ்ட் சபைகளின் நிலங்கள் விற்க பல இடங்களில் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. CSI, CNI, Luthern, CIGM, SBM இப்படி எந்த சபையை சார்ந்த நிலங்களானாலும் எதையும் விற்க விடாதிருங்கள். சபைமக்கள் யாவரும் ஒன்றாக ஒற்றுமையாக எதிர்த்து நின்றால் போதும். நம் சந்ததிக்கு நல்ல ஏற்பாடுகளை செய்ய நமக்கு மிஷனரிகள் வாங்கிக்கொடுத்த நிலங்கள், கட்டிடங்கள் எதையும் விற்ககூடாதபடி சபைமக்கள் ஜெபத்துடன் எதிர்த்துநில்லுங்கள்.

மிஷனரிகள் நமக்கு வாங்கிக்கொடுத்த நிலங்கள், கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள் யாவற்றுக்கும் பண உதவி செய்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அமெரிக்கா, சுவிஸ்ஸர்லாந்து, டென்மார்க், கொரியா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் வாழும் ஏழை குடும்பங்கள், நடுத்தர குடும்பங்கள், சிறுபிள்ளைகள் சில பணக்காரர்கள் ஆகிய இவர்களெல்லாம் தங்கள் குறைவுகளிலிருந்து தங்கள் தேவைகளைக்குறைத்து அந்த பணத்தை சேமித்து இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இதை நானே பல நாடுகளில் நேரில் கண்டிருக்கிறேன்.

ஆகவே நல்ல காரியங்களுக்காக ஆலயத்துக்காக அனுப்படும் பணம், ஆலய நிலம் இவைகளை அபகரிக்க நினைக்கும், நிர்வாகிகளுக்கு ஆயர்களுக்கு, பிஷப்மார்களுக்கு ஐயோ! என்று வேதம் கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற பலனை கர்த்தர் கொடுப்பார். ஜாக்கிரதை!. ஆலய பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். சுனாமி பணத்தை கொள்ளையடித்தவர்கள் அந்த பணத்தை பங்குபோட்டு யார் யார் அந்த பணத்தை தவறாக பயன்படுத்தினவர்களோ! அத்தனை பேர்களுக்கும் நியாயதீர்ப்பின் தண்டனை காத்திருக்கிறது.

கொடைக்கானல் மெத்தடிஸ்ட் நிலத்தை விற்றவர்களுக்கும், கொடைக்கானலில் நல்ல நிலம் கட்டிடம் இருந்தும் ஆராதனைக்காக பயன்படுத்த ஏற்பாடு செய்யாதவர்கள் அதன் நிர்வாகிகளும் தேவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்!. ஜாமக்காரனில் வெளியிட்டதால் என்மேல் கோபப்பட்டு பிரயோஜனமில்லை. இனியாவது நல்ல நடவடிக்கை எடுங்கள் ஆத்துமாக்களை சேர்க்கமுயலுங்கள். ஆயலம் எழும்பட்டும். கொடைக்கானல் போன்ற இடங்களில் எத்தனையோ உல்லாச பயணிகளும் திறந்த ஆலயத்தில் ஜெபிக்க வருவார்கள். ஸ்தாபகர் ஜான் வெஸ்லியின் ஆசையை நிறைவேற்றுங்கள். இதற்காக ஜெபிப்போம்.


மோசேயும் ஆட்டுக்குட்டியும்:

மோசே தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்பொழுது ஒருநாள் ஒரு ஆடு மந்தையைவிட்டு தள்ளி ஓடியது. மோசே அதனைப்பின் தொடர ஆடும் வேகமாக ஓடியது. பொறுமையுடன் ஓடிய மோசேயும் அந்த ஆட்டினை இறுதியில் ஒரு தடாகத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கக் கண்டார். அதன் அருகில் சென்று ஆட்டுக்குட்டியே நீ அதிகத் தாகமாக இருந்தததினால் இப்படி ஓடினாயோ? ஓடிய களைப்பு உனக்கு இருக்கும். எனவே உன்னை நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று அதனை தன்மேல் தூக்கிகொண்டு மோசே! நடந்தார். அப்போழுது தேவன், மோசே, உன்னிடம் ஆடுகளை எப்படி நடத்தவேண்டும் என்ற தகுதி இருக்கின்றது. நீதான் இஸ்ரவேலாகிய என் ஆடுகளையும் மேய்க்கவேண்டும் வருவாயா? என்று கேட்டார் என யூதர்களின் பாரம்பரியம் மோசேயைப்பற்றி இப்படி கூறுகின்றது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM