செய்தி! செய்தி!!
இந்திய வட கிழக்கு மாகாணங்கள் கவனிக்கப்படுகின்றன.

இந்திய வடகிழக்கு மாகாணங்களான நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் இத்தனை காலம் நம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்று நம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கே விளங்காமல் இருந்தது. பத்திரிக்கைகளிலும் அந்த மாநில செய்திகள் அதிகம் வருவதில்லை.

ஆனால் சமீப காலமாக நம் இந்திய அரசாங்கம் விரிவாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. காரணம் சீன எல்லையும், நேபாள எல்லையும், வங்கதேச எல்லையும் சுமால் 50 கி.மீட்டர் இடைவெளியில் சிலிகுரி என்ற இடம் அமைந்துள்ளது. அண்டை நாட்டு அபாயம் மறைமுகமாக தாக்குதல்கள் தொடர்ந்து வரத்தொடங்கிவிட்ட நிலையில் எல்லை மாநிலங்களின் பொறுப்பு தாங்கள் இந்தியர்கள்தான் என்ற சந்தேகம் அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள இளம் சந்ததியினருக்கு வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் நம் இந்திய ஜனாதிபதி வடமாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இத்தனை காலம் அந்த மாநிலங்கள் கவனிக்கப்படாததற்கு காரணம் கலாச்சார இந்தியாவில் வாழும் பெருவாரியான மக்கள் கிறிஸ்தவ மதத்தினராக இருப்பதாகும்.

ஆதிவாசிகளும், புத்த மதத்தினரும் வசித்த அந்த மாநிலங்கள் பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை மிஷனரிகளின் கடினமான ஊழியத்தால் ஆதிவாசிகள் மனிதர்களை கொல்வதை நிறுத்தி, இயேசுவை குலதெய்வமாக ஏற்று மனம் திருந்தி வாழ்கிறார்கள். மிஷனரிகளின் முயற்சியால் ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், சுயதொழில் கல்வி திட்டங்கள் பெருகின. இங்கு மத மாற்றம் பெருமளவு ஏற்பட்டுள்ளது என்றாலும் அதற்கு காரணமான கிருத்துவ மிஷனரிகளை பாராட்டமால் இருக்க முடியாது என்று இந்த மத இயக்க தலைவர்களே கூறுகிறார்கள்.

பெரும் மலைகளும், அடர்ந்த காடுகளும் நிறைந்த இந்த மாநிலங்களில் இப்போதுதான் சாலை வசதிகளுக்கும், ரயில் வசதி, விமான போக்குவரத்துக்கும் திட்டங்கள் இட ஆரம்பிந்துள்ளார்கள். இந்த திட்டம் மட்டும் தள்ளிப்போடாமல், தாமதப்படுத்தாமல் அவசாரகால முறையில் இந்திய அரசங்கம் செயல்படுத்துமானால் அந்த மாநிலத்தவர் நாங்களும் இந்தியர்கள் என்று உரிமையோடு கூறுவார்கள்.

நான் சுமார் 20 வருடங்களுக்கு முன் AMSTORDAM (HOLLAND) (படிவத்தில்) நடந்த Dr.பில்லிகிரஹாம் அவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்தவ மாநாட்டிற்கு சென்றபோது வட கிழக்கு மாகாணத்திலிருந்து வந்தவர்களை நோக்கி நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா என்றுதான் கூறினார்களே தவிர நாங்களும் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்கிறோம் என்று ஒருவரும் கூறாதது இந்தியாவுக்கு நல்லதல்ல. அப்படி அவர்கள் கூறகாரணம் இந்திய அரசாங்கம் அந்த மாநிலங்களுக்கு குறிப்பிடதக்க உதவி, குறிப்பாக சாலை வசதிகள்கூட செய்து தரவில்லை. இங்குள்ள அருமையான நல்ல ஆவிக்குரிய மக்களுக்காக (சொல்வோம்) இதர மாநிலங்களுக்கு சுமார் 30 வருடங்களுக்குமுன் சென்றேன். ஒரு உயர்நிலை பள்ளி மண்டபத்தில் என் கூட்டம் நடந்தது. சாதாரண டீ கடையில் டீ வாங்கி குடிப்பவர்கள்கூட கையில் தேநீர் கிடைத்தவுடன் சிறு ஜெபம் செய்துவிட்டுதான் குடிக்கிறார்கள். எத்தனை அற்புதமான காட்சி அது!


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM