KODAIKANAL METHODIST CHURCH
திருத்தம்:
2013 டிசம்பர் பக்கம் 35: ஜாமக்காரனில்
நீங்கள் எழுதிய தகவலில் சில தவறுகள் உண்டு:.

நீங்கள் குறிப்பிட்டதைப்போல ஜான்வெஸ்லி அவர்கள் தன் சபையான மெத்தடிஸ்ட் சபையிலிருந்து நீக்கப்படவில்லை. ஆங்கிலிக்கன் சபையில் ஆயராக ஊழியம் செய்தபோது அவரின் கண்டிப்பான பிரசங்கத்தை விரும்பாமல் சபையிலிருந்து சபை மக்களே அவரை நீக்கிவிட்டனர். மனந்திரும்புதல் பிரசங்கத்தை மக்கள் விரும்பவில்லை. வெளியேற்றப்பட்ட Rev.ஜான்வெஸ்லி அவர்கள் அன்று கூறியதாவது: The World is my Parish இந்த உலகமே என் சபையாகும். இந்த உலகத்தில் நான் எங்கு ஊழியம் செய்தாலும் எல்லா காலமும் கர்த்தர் எனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றி இரட்சிப்பையும், நியாய தீர்ப்பையும் குறித்து கூறாமல் இருக்கமாட்டேன். (திருத்தத்தை சுட்டிக்காட்டி உதவியவர் என் பல வருட ஆவிக்குரிய நண்பரும், மெத்தடிஸ்ட் சபைகளின் முன்னாள் பிஷப்பும், ஆயருமான ஐயா அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்).


கொடைக்கானல் மெத்தடிஸ்ட் சபை பிரச்சனை

2013 டிசம்பர் ஜாமக்காரனில் கொடைக்கானல் மெத்தடிஸ்ட் சபை ஆலயம் வியாபார ஸ்தலமானது என்று நீங்கள் எழுதியது தவறு. நான் மெத்தடிஸ்ட் சபையில் 30 வருட அங்கத்தினன். கொடைக்கானலில் கட்டப்பட்டது ஆலயம் அல்ல. மெத்தடிஸ்ட் சபைக்கு வருமானம் பெருக்கும் நோக்கத்தோடு வாங்கப்பட்ட நிலத்தில் லாட்ஜ் (Rest House) கட்டப்பட்டது. மீதியுள்ள மண்டபம், துணி கடைக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. லாட்ஜ் கொடைக்கானலுக்கு வந்து போகும் உல்லாச பயணிகளுக்கு லாட்ஜை தின வாடகைக்கு விட்டு வருமானம் பெரும் நோக்கத்தோடுதான் அவைகள் கட்டப்பட்டது.

மெத்தடிஸ்ட் சபை ஆயர்கள், ஊழியர்கள் வருடம் ஒருமுறை கொடைகானல் உல்லாச பயணத்துக்காக போகும்போது அவர்கள் தங்கள் குடும்பமாக தங்கி இளைப்பாற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும், அதேசமயம் வருமானம் பெருக்கும் நோக்கத்தோடும் கட்டப்பட்டது. நானும் கொடைக்கானல் சென்று அவைகளை நேரில் கண்டு அறிந்து இவைகளை உங்களுக்கு அறிவிக்கிறேன். அந்த கட்டிடத்தின் மேல் John Wesley Methodist Centre என்றுதான் எழுதப்பட்டுள்ளது அதில் Church என்று எழுதப்படவில்லை.

  - ஆம்பூர்.

கொடைக்கானலில் தொடங்கப்பட்ட ஆயலத்தில் ஆராதனை நடத்தப்பட்டது:

அநேக வருடங்களுக்குமுன் கொடைக்கானலில் நாங்கள் நான்கு குடும்பங்கள் மெத்தடிஸ்ட் சபை பூர்வீக அங்கத்தினர்கள். அங்கு ஒரு ஊழியர் வந்து எங்களுக்கு முதலில் ஜெபகூட்டம் மாதந்திரம் நடத்தினார். பின் அது ஆராதனையாக நடத்தப்பட்டது. அந்த ஊழியர் சரியானவராக இல்லாததால் எங்களில் சிலர் வேறு சபைக்கு மாறினோம். அதன்பின் இன்னொரு ஊழியர் கொடைக்கானலுக்கு அனுப்பப்பட்டார். அவரும் ஒழுங்காக வருவதில்லை, அவர் ஊழியமும் செய்வதில்லை. அதன்பிறகு நாங்கள் கொடைக்கானலைவிட்டு குடும்பமாக வத்தலகுண்டு என்ற ஊரின் அருகே குடியேறி இப்போது இங்கு வாழ்ந்து வருகிறோம். நீங்கள் ஜாமக்காரனில் கொடைக்கானல் மெத்தடிஸ்ட் சொத்துக்களைப்பற்றி எழுதியது சரிதான்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM