அங்கே "விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும் நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும் விலகியிருக்கும்படி" நான் தீர்மானிக்கிறேன் என்று சொன்ன யாக்கோபு, முகவுரையாக எதைச் சொன்னார் என்று கவனித்தீர்களா? 19வது வசனத்தில் "புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாது" என்று நோக்கத்திலேதான் அந்த தீர்மானத்தை யாக்கோபு எடுத்தார்.

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கலாகாது என்ற மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானம் அது. ஆனால் யூதர்களும், புறஜாதியரும் சபையிலே கைகோர்த்து ஒன்றாக தேவனை வழிபடக்கூடி வர அது ஏதுவாக அமைந்தது.

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும் (தீத்து 1:15). ஆனால் விசுவாசித்திலே நம்மைவிட கீழுள்ளவர்களுக்காக, நாம் நல்லது என்று கருதுவதையும், அவர்கள் இடறலடையாதபடிக்கு விட்டுவிலகுவது நல்லது.

இந்த விஷயத்தைக்குறித்து பவுல் 1 கொரிந்தியர் 8:4-13 வசனங்களில் கீழ்காணும் காரியங்களைத் தெளிவுப்படுத்தினார்.

இரட்சிக்கப்பட்ட நமக்கு விக்கிரகம் ஒன்றுமில்லை.

ஆனால் இரட்சிக்கப்படாதவர்களுக்கு அது ஒரு பொருள் (ஒரு வல்லமை, தேவன் அல்லது தேவி)

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு உலகமும், அதிலுள்ள சகலதும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தராலும், அவர் மூலமாயும் உண்டாயிருக்கிறது என்பது தெரியும்.

ஆனால், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது. காரணம், புசிப்பதினால் நமக்கு மேன்மையுமில்லை. புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

இருப்பினும் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் அதிகாரம் பலவீனருக்கு (சரீரப்பிரகாரமல்ல, விசுவாசப் பிரகாரமாக) எந்த விதத்திலும் தடையாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கக்கூடாது.

நம் நிமித்தம் பலவீனமுள்ள சகோதரன் கெட்டுப்போகக்கூடாது என்பதே இந்த போதனையின் கருப்பொருள். காரணம். கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. இங்கே பலவீனமுள்ள சகோதரன் என்பவன் ஒரு நடக்கையை எதிர்ப்பவனோ, கேள்வி கேட்பவனோ அல்ல, மாறாக பலட்சயமான விசுவாசத்தினால் எளிதில் பாவத்தில் தவறி விழுபவனே பலவீனமான சகோதரனாகும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும்.

விக்கிரகப் படையலைக் குறித்து குறிப்பாக சொல்லாவிட்டாலும் பவுல் ரோமர் 14ம் அதிகாரத்தில் கூறின சில கருத்துக்களையும் நாம் இங்கே மனதிற்கொள்ளவேண்டும்.

புசிக்கிறவன், புசியாதிருக்கிறவனை அற்பமா எண்ணாதிருப்பானாக, புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக. தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே (வசனம் 3).

ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயத்திருக்கிறேன். ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். (வச 14).

போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால் நீ அன்பாய் நடக்கிறவனல்ல, அவனை உன் போஜனத்தினால் கெடுக்காதே. கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே (வசன 15) மேலும் ரோம 14:20-2 பார்க்கவும்.

விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டவைகளைக் குறித்து 1கொரி 10:19-21ல் சில காரியங்களை வெளிப்படுத்தின. பிறகு பவுல் சொல்வதைக் கவனியுங்கள். "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு. ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது" (வச 23).

விக்கிரகப் படையலின் காரியத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்கள்: இந்த விஷயத்தில் என் வேதம், என் விசுவாசம், பிறர் மனசாட்சி என்ன சொல்கிறது? (1 கொரி 15:20, ரோம 14:14, 1கொரி 10:27029). என்று உணரவேண்டும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM