கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்
இயேசுவின் இரத்தம் ஜெயம்:

கேள்வி:நாங்கள் கத்தோலிக்க சபையிலிருந்து விசுவாசிகளாகி ஆராதிக்கிறோம். ஆனால் ஒவ்வொருமுறை ஜெபிக்கும்போது எங்கள் கத்தோலிக்க சபை வழக்கப்படி நாங்களே எங்கள் நெற்றியிலும், மார்பிலும் சிலுவையை பெருவிரல் வைத்து வரைந்து கொள்வோம். இது தவறா?

பதில்:டிசம்பர் மாத ஜாமக்காரனில் 19ம் பக்கத்தில் சிலுவை போடுவதைக்குறித்து எழுதியுள்ளேன். நீங்கள் அதை வாசியுங்கள். உங்கள் கத்தோலிக்க வழக்கப்படி நெற்றியில் நீங்களே சிலுவை வரைந்து கொள்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லையே. வரைந்த சிலுவை உங்களை காப்பாற்றாது. அது உங்களை ஆசீர்வதிக்காது, அது சுகப்படுத்தாது பிறகு எதற்கு அதை வரைந்து கொள்கிறீர்கள்.

கத்தோலிக்க சபையின் சட்ட புத்தகத்தில் ஒரு பிழையான விளக்கம் கொடுத்துள்ளார்கள். அப்படி சிலுவை வரைவது கத்தோலிக்க சபையின் சட்ட இரகசியங்களில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை அது காட்டுகிறது என்கிறார்கள். அந்த நம்பிக்கை தேவையற்ற பிரயோஜனமில்லாத நம்பிக்கை ஆகும். சிலுவை அடையாளத்தை நெற்றியிலும், தோளின் வலது பக்கம், இடது பக்கம், மார்பில் இடுவதால் நம் தேவன் திரியேகராக இருக்கிறார் என்பதையும், திருத்துவத்தின் கோட்பாட்டையும் அது காட்டுகிறதாம். வெளியில் உள்ளவர்கள் யாராவது நீங்கள் அப்படி சிலுவை வரைவதைக் கண்டால் அவர்கள் நம் தேவன் திரியேகராக இருக்கிறார் என்று விளங்கிக் கொள்வார்களா? ஊமையாய் இருப்பவர்கள்கூட அந்த அடையாளத்தை அந்த செய்கையை திரியேகம் என்று விளங்கிக்கொள்ளமுடியாதே?

இந்த சிலுவை அடையாளம் அன்றைய பாபிலோனிய மதத்திலிருந்து வந்தது. பாபிலோனிய மதத்தில் ஒருவன் சேர்ந்தால் அவன் நெற்றியில் சிலுவை போன்ற T அடையாளம் இடப்பட்டது. அது ஆசீர்வாத அடையாளமாக கருதப்பட்டது. பாபிலோனிய ஆசாரியர்கள், அரசர்கள், ஆலய கன்னிகை ஸ்திரீகள் இந்த அடையாளத்தை உடையிலும், கழுத்தில் அந்த அடையாள சின்னத்தை கயிற்றில் கட்டி மாட்டிக்கொள்ளவும் செய்தார்கள்.

அதையேதான் இன்று கத்தோலிக்கர்கள் தங்கள் கழுத்தில் சிலுவையாக அணிந்துக் கொண்டார்கள். அதையேதான் மார்தோமா, யாக்கோபையா, CSI, லூத்தரன் பிஷப்மார்கள் தங்களை தனித்துக் காட்டிக்கொள்ள மரசிலுவை, வெள்ளி, தங்கம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட சிலுவை அணிகிறார்கள்.

விலாசம் புதுப்பித்தல்

கேள்வி:கடந்த ஜாமக்காரனில் அறிவித்த விலாசம் புதுப்பித்தல் ஏற்பாடு என்பது மிக அருமை. அதனால் யாராவது ஜாமக்காரன் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களா? அல்லது உங்களுக்கு எழுதியிருக்கிறார்களா?


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM