அப்படியானால் இந்த ஆயிரம் நாமத்திற்கு உரிய கடவுள் யார்? அல்லது மீதி 999 நாமங்களாவது உங்களுக்கு தெரியுமா?

யெகோவாஷாலோம் என்பது பலிபீடம்: நயீயா 6:24 கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்.

யோகோவாஷம்மா என்பது நகரம்: எசே 48:35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள் முதல் அந்த நகரம் யேகோவாஷம்மா என்றும் பெயர் பெறும்.

யெகோவா ரூபா – அவர் மேய்ப்பர்: சங் 23:1ல் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; - இதுநாமம் அல்ல

யெகோவா ராப்பா: அவர் பரிகாரி யாத 15:26 ….. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

எல்ரோயி: ஆதி 16:13 அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

லகாய்ரோயீ என்பது துரவு – ஆதி 16:14 ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் - பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.

யேகோவாயீரே என்பது இடம்: ஆதயீ 22:14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்;

யேகோவாநிசி என்பது பலிபீடம்: யாத் 17:15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, எபெனேசர் என்பது கல்லுக்கு பெயர்: 1 சாமு 7:12 அப்போழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

பலிபீடத்தின் பெயரையும், இடத்தின் பெயரையும் துரவின் பெயரையும், கல்லின் பெயரையும் மனிதன் அழைத்த விதத்தை விளங்கிக்கொள்ளாமல் தேவனுடைய நாமங்களாக நம்பிக்கொண்டிருக்கிறார்களே?: இது தவறல்லவா?

சிவகாசி C DAVIS ……. என்பவரும் இதை குறித்து எழுதுகிறார்.

சகரியா 14:9 "அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்" நாமம் (Name) என்றுதான் உள்ளதே தவிர நாமங்கள் (Names) என்று இல்லை. மத்தேயு 28:19 – இல் "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து", இங்கேயும் நாமம் (Name) என்றுதான் வருகிறது. நாமங்கள் என்று வரவில்லை என்பதை கவனிக்கவும். இந்து சமயத்தில் "விஷ்ணு" என்ற கடவுளுக்குத்தான் ஆயிரம் நாமங்கள் உண்டு. பத்து கட்டளைகளில் மூன்றாவது கட்டளை "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருபாயாக", (யாத் 20:7) வீண் என்பதற்கு மூலமொழியில் "பொய்யாக" அறிக்கை செய்யாதிருப்பாயாக என்றுள்ளது. நமது ஆண்டவர் திரியேகமுடையவர். எலொஹீம் என்பது பன்மை ஆனால் தமிழில் அதை ஒருமையில் "தேவன்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதுதான் திரியேக தேவன் இனிமேல் இப்பாடலை அர்த்தம் தெரியாமல் பாடுவதை நிறுத்துவது மிகச் சிறந்தது.

பாட்டு 2:
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை (2)
ஆவியாக தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM