காவல்துறை குடும்ப சிறப்பு கூடுகை (தூத்துக்குடி மாவட்டம்)

தூத்துக்குடி மாநகரில் காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் கூடி ஏற்பாடு செய்திருந்த இந்த ஜெப ஐக்கியம் மிகவும் சிறப்பானது. மிகவும் தேவையானதும் ஆகும்.

எல்லா அரசு வேலைகளிலும் சோதனைகள் உண்டு. ஊழல்கள் உண்டு. இவர்களில் மிகவும் கடினமான வேலை காவல்துறையினரின் வேலையாகும். 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்ய வேண்டியதாக அமைகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை அதிகாரிகளின் கண்டிப்பாலும், இவர்களின் வித்தியாசமான வேலையின் நிமித்தம் உயிருக்கும் ஆபத்தான நிலை இவர்களில் பலருக்கு உண்டு. இப்படிப்பட்ட ஆபத்தான, ஓய்வில்லாத பணிதான் போலீஸ் காவல்துறையின் பணியாகும். இதனால் ஏராளமானவர்கள் மனஉளச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக அவர்களின் இயற்கை சுபாவங்களும் மாறுபட்டு இருதயம் கடினப்பட்டுவிடுகிறது. காவல்துறை செல்பவர்களின் குடும்பங்களில், சமாதானம் சந்தோஷம் இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு மிக தேவை. இரட்சிக்கப்பட்டவர்களின் ஐக்கியம் இவர்களுக்கு தேவை. தமிழ்நாட்டில் போலீஸ்துறையில் இருப்பவர்களுக்கு இப்போது ஆங்காங்கு ஜெபஐக்கியம் தொடங்கியிருப்பது அறிந்து தேவனைத்துதிக்கிறேன். இப்படிப்பட்ட போலீஸ்துறையினர் தங்கள் குடும்பத்தோடு இந்த கூட்டத்தில் கலந்துகொண்டது சந்தோஷத்தைகொடுத்தது. இவர்களிடம் கர்த்தரின் வார்த்தையை பகிர்ந்துக்கொள்ள அழைக்கப்பட்டேன். போலீஸ்துறையில் முக்கிய பதவி வகிக்கும் திரு.அ.பால்சுதாகர் ஜெபமணி என்பவருடன் பல உயர் போலீஸ் அதிகாரிகளும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தியது நல்லசாட்சியாக இருந்தது. தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் எதிரே உள்ள கத்தோலிக்க நற்செய்தி மண்டபத்தில் இக்கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள் இரட்சிப்பின் அனுபவம், லஞ்சம் வாங்காமல் இருப்பதால் ஏற்படும் சோதனை அவைகளை கர்த்தரின் கிருபையிலும் வசனத்தாலும், சாட்சியுள்ள ஜீவியத்தாலும் எப்படி அந்த சோதனைகளை மேற்கொண்டார்கள் என்று சாட்சி கூறியது மிக பிரயோனமாக அமைந்தது. நானும் வேதவசனங்கள் மூலமாக என் மிலிடெரி அனுபவமும், ஆரம்பத்தில் நானும், போலீஸ்துறையில் சேர்ந்து செலக்ட் ஆகியும் பின் பயிற்சிக்கு அழைக்கப்படாமல்போன காரணங்களையும் அனுபவங்களையும் பகரிந்துக்கொண்டேன். 24 மணி நேரமும் போலீஸ் துறையில் உள்ளவர்கள் பணி செய்தாகவேண்டும். அப்படிப்பட்ட போலீஸ்துறையில் வேலை செய்யும் கணவர்களின் குடும்பத்திலுள்ள மனைவிமார்களின் மன உளைச்சல் ஆகியவற்றைக்குறித்து சுமார் 2 மணி நேரம் பகிர்ந்துக்கொண்டேன். Addl. Supdt of Police (Rtd) Mr.Paul Devadas அவர்களின் தலைமையில் இக்கூட்டங்கள் சிறப்பாக அமைந்தது. இந்த கூட்டத்தில் Supt of Police Austin, Mr.Vetri Sezhiyan, Inspector Uniform Recruitment Board Mr.Sounderrajan, A.S. of Police இன்னும் பல உயர் அதிகாரிகளும், காவலர்களும் குடும்பமாக இக்கூட்டத்தில் பங்குகொண்டனர். கூட்டம் காவலர்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்ததாகவும், ஆசீர்வாதமாக அமைந்தது என்று கூறியபோது தேவனைத்துதித்தேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN