வேதாகம "ரூபம்'' அவருடைய தன்மை, குணங்களை, சுபாவத்தை உள்ளடக்கிய (likeness = in attribute, attitude, approach, ability, glory etc.,) தேவன் ஆவியாயிருக்கிறார், என்பது உண்மை ஆனால் நிச்சயமாக அவர் ரூபம் உடையவர். இயேசு கிறிஸ்து அந்த ரூபத்தை உடையவராக இருந்தார் என்பது மட்டுமல்ல, நம்மையும் அவர் ரூபத்திலேயே (அவரது சாயலின்படியே) உண்டாக்கினார் என்று நம் வேதம் தெளிவாக கூறுகிறது.

ஆதி: 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியே (குணத்தின்படியும்) மனுஷனை உண்டாக்குவோமாக... (Let Us make man in Our image, according to Our likeness...)

ஆதி 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பிலிப் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், ....ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே என்று பாடக்கூடாது இங்கு ஏன் சொருபம் ஒன்றும் இல்லை? என்று குறிபிடப்பட்டுள்ளதின் காரணம் சொரூபம் உண்டாக்ககூடாது என்பது வேத கட்டளை, அதனால்தான் சொரூபம் செய்யப்படவில்லை. இதை அறியாதவர்கள் எழுதின பாட்டும் காரணமும்தான் - ரூபமில்லாததால் சொரூபம் ஒன்றும் செய்யவில்லை என்பது பிழையான கருத்தாகும்.

பாட்டு 3:
இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன்... : காணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்.

குறிப்பு: இப்பாட்டில் காணக்கூடாதவர் என்று குறிப்பிடுவது பிதாவையாகும். அப்படிப்பட்டவர் எப்படி கல்வாரியில் தோன்ற முடியும். பிதாவை யாரும் பார்க்கமுடியாதே!

யோவ 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை (பிதாவை) வெளிப்படுத்தினார்.

1 தீமோ 6:16ல் ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.

யோவ 6:46ல் தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை.

சிலுவையில் மரித்தது: பிதா அல்ல, சிலுவையில் மரித்தது பிதாவின் திட்டப்படி, சித்தப்படி அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துதான் சிலுவையில் மரித்தார் என்று வேதம் கூறுகிறது. பாட்டு எழுதுகிறவர்கள் வேண்டுமானால் குழம்பட்டும், ஆனால் பாடுகிறவர்கள் குழம்பாதீர்கள்.

பாட்டு 4: சகோ.சாராள் நவரோஜி அவர்கள் அற்புதமான அர்த்தமுள்ள பல பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் ஏனோ கீழ்காணும் இந் பாட்டில் வர்ணிக்கப்படும் நபரை தவறாக கணித்துவிட்டார். பெண்ணை ஆணாகவும், ஆணை - பெண்ணாகவும் மாற்றி வர்ணித்துவிட்டார்.

பாட்டு தேவா பிரசன்னம் தாருமே என்ற பாடலில் "சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்'' என்ற வரிவரும். இந்தப் பாடலில் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான பல பாடல்களில் "சாரோனின் ரோஜா''வாக "இயேசுகிறிஸ்து'' சித்தரிக்கப்படுகிறார். "பாரீர் அருணோதயம்போல் உதித்து வரும் இவர் யாரோ'' போன்ற பாடல்களில் இவ்வித வரிகளை நாம் காணமுடிகிறது. இந்த வரி உன்னதப்பாட்டு 2:1-2 வசனங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். உன் 2:1 ஆம் வசனத்தை மணவாட்டி தன்னைப் பார்த்து கூறுகிறாள். "நான் சாரோனின் ரோஜாவும். பள்ளத்தாக்குகளில் லீலி புஷ்பமுமாயிருக்கிறேன்''. அதற்கு மணவாளன், மணவாட்டியைப் பார்த்து கூறுகிறார். "முள்ளுகளுக்குள்ளே, லீலி புஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்''. அப்படியானால் "சாரோனின் ரோஜா'' என்பது இயேசுக்கிறிஸ்துவை குறிக்கவில்லையல்லவா? இனிமேல் இவ்வித பாடல்களைப் பாடும்போது இந்த வரிகளை மட்டும் தவிர்ப்பது நல்லது. பழக்க தோஷம் என்ற காரணத்தை தேவனிடம் கூற முடியாது. அவர் அதை ஒத்துக்கொள்ளமாட்டார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM