உயில் ஏன் எழுத வேண்டும்?
  Selected

ஒருவரின் மரண காலத்திற்குபின் யாருக்கு அவர் சம்பாதித்த சொத்துக்கள் யார் யாருக்கு போய்ச் சேரவேண்டும் என்பதை எழுத்து மூலமாக எழுதி வைக்கப்படும் ஆவணமே உயில் ஆகும். வீடு, நிலம், தோட்டம், வெள்ளிப்பாத்திரங்கள், தங்க நகைகள், பங்குபத்திரங்கள், கலைநயம் மிக்க பொருட்கள், வங்கி முதலீடுகள் என வைத்திருப்பவர்கள் அவற்றைப் பட்டியலிட்டு எந்த சொத்து, யார்யாருக்குப் சேரவேண்டும் என்று தெளிவாக எழுதிவிடவேண்டும்.

ஒருவர் வெள்ளைத்தாளில் தன் விருப்பத்தை எழுதி, எந்தச் சொத்து யாருக்குப் சேரவேண்டும் என்பதை அதில் குறிப்பிட்டு கையெழுத்திட்டு, தேதியிட்டு, சாட்சிக்கு இருவர் கையெழுத்துடன் முடித்தாலே இந்த உயில் செல்லத்தக்கதாகிவிடும். ஆனால் உயில் எழுதும் முன்பு சரியாக சிந்தித்து மனைவி பிள்ளைகளுடன் உட்கார்ந்துபேசி ஆலோசித்துபிறகு எழுதுவது நல்லது. அசையும், அசையா சொத்து விபரங்கள் பற்றி ஜாபிதா தயாரித்து, சரிப்பார்த்துக்கொண்டால் விடுபடுவதைக் தவிர்க்கலாம். சாதாரண காகித்திலோ, பாண்டு காதிதத்திலோ உயில் எழுதலாம். அதில் "யாருடைய கட்டாயத்துக்கும் உட்படாமல் என் சுயநினைவோடு இதை எழுதுகிறேன்" என்ற உறுதிமொழி வாசகம் இருக்கவேண்டும். இதற்கு முன்பு ஏதேனும் உயில் எழுதியிருந்தால் "முன்பு எழுதிய உயிலில் உள்ளவற்றை இந்த புதிய உயில் மூலம் ரத்து செய்கிறேன்" என்று குறிப்பிட்டு எழுதப்படவேண்டும். முத்திரைத்தாள் வாங்கி அதில் எழுதுவது, பத்திர அலுவலகத்தில் சென்று பதிவு செய்வது மிகவும் பாதுகாப்பானது. இதற்கு பதிவு கட்டணம் மிகவும் குறைவு. இப்படி பதிவு செய்தால் எழுதப்பட்ட அசல் தொலைந்தாலும் சிக்கல் இல்லை. ஒருவர் பதிவாளர் முன் கையொப்பமிட்டு பதிவு செய்வதால் உயில் எழுதியவர் சுயநினைவுடன் தெளிந்த சிந்தனையுடன் இருந்து உயில் எழுதினாரா என்ற கேள்வி எழாது. உடல் நலமில்லாத நடமாட முடியாமல் இருப்பவரும் பதிவாளரை வீட்டுக்கு அழைத்து வந்து உயிலினை பதிவு செய்யலாம்.

உயிலினை அவரவர் தாய்மொழியில் எழுதுவது நல்லது. எழுதப்பட்ட உயிலில் முழுப்பொருளையும் எழுதுபவர் எளிதில் புரிந்துக்கொள்ளலாம். நன்கு எழுதப்படிக்கத் தெரியாதவர் ஆங்கிலத்தில் யாரோ எழுதிக் கொடுத்த உயிலில் கையெழுத்திடுவது பாதுகாப்பற்றது, ஆபத்தானது ஆகும். உயிலை எழுதித்தந்தவர் தனக்கோ அல்லது தன் வாரிசுகளுக்கோ உங்கள் சொத்து கிடைக்கும்படி எழுதி கையெழுத்து பெற்றுவிட்டால், உங்கள் குடும்பத்தின் உண்மையான வாரிசுகள் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்துவிடலாம். கூடியமட்டும் உயில் எழுதும்போது தனது காலத்திற்குபிறகு அல்லது தனது மரணத்துக்குபிறகு என்ற வார்த்தையை அதில் குறிப்பிடுவது நல்லது. தனது மனைவி தன்னுடைய சொத்துக்களை அவர் ஆள உரிமைக் கொடுத்து உயில் எழுதுவது அவசியமும், பாதுகாப்புமாகும். அதாவது என் காலத்திக்குப்பின் அல்லது மனைவியின் காலத்திற்குப்பின் சொத்துக்கள் எந்தெந்த வாரிசுகளுக்கு போய்ச்சேர வேண்டும் என தெளிவாக எழுதிவிடுவது முறையானதாகும்.

உயிலினை எத்தனை முறைவேண்டுமானாலும் மாற்றி எழுதலாம் என்றாலும் கடைசியாக எழுதிய உயில்தான் செல்லத்தக்கது ஆகும். சிலர் தாங்கள் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு வாரிசுக்கும் வெவ்வேறு சொத்துக்களை (Settlement) பத்திரபதிவு செய்து எழுதி வைப்பது அவரின் வாழ்நாள்வரை பாதுகாப்பிற்கு நல்லது. மேலும் தங்கள் வாரிசுகள் அவர்களுக்குள் மனதாங்கல் உண்டாகாது இருக்கவும் இந்த ஏற்பாடு மிகவும் உதவும். பிள்ளைகள் தங்களுக்குள் வழக்காடுவதையும் தவிர்க்கலாம். இதற்கும் பதிவு கட்டணம் குறைவே. இம்முறையில்மூலம் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், சண்டைகள் தவிர்க்கப்படுகிறது. தன் வாழ்நாளுக்குப்பிறகு தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் நற்பணிகளுக்கும் தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் உதவவேண்டும் என்று, தான் வாழும்போதே நடவடிக்கை எடுத்து முடிப்பவனே புத்திசாலி. இதற்கு உதவுவதே உயில் என்றும், ஆவணம் "Time & Tide waits for None, A stitch in time saves nine" என்பன போன்ற முதுமொழிகள் பல உண்டு. எனவே உரிய காலத்தில் உயில் எழுத முயற்சிக்கவேண்டும்.

  - திரு.வல்சலம்.

குறிப்பு: நான் குடியிருக்கும் வீடு, வாகனம் யாவையும் என் இரண்டு பிள்ளைகளையும் நேரில் வைத்து பேசி, ஜெபித்து பத்திரபதிவும் செய்து முடித்துவிட்டேன். மேலே குறிப்பிட்டதைப்போல தெளிவாக சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதிவிட்டேன் என்றாலும், நானோ என் மனைவியோ, இருவரின் மரணத்திற்கு பிறகுதான் பிள்ளைகள் விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியும் என்ற வாசகத்தை தெளிவாக எழுதிவிட்டேன். இது எங்கள் பிள்ளைகள்மேல் நம்பிக்கையில்லாததால் அல்ல - இது எங்கள் பாதுகாப்பின் காரணமாகவே எழுதினோம். இயேசுகிறிஸ்து கூறினார். நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே! என்றார். இது அன்பு தனிந்துபோகும் காலம். எப்போதுவேண்டுமானாலும் மனித சுபாவம் மாறலாம். அதனால்தான் பாம்பைப்போல் வினா உடையவர்களாக இருங்கள் என்றார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN