கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்
புதிய திருச்சபைகள் உருவாக்கவேண்டும்:

கேள்வி: எங்கள் மிஷனரி ஸ்தாபனத்தில் புதிய 10 திருச்சபைகள் உருவாக்க வேண்டும். 100 பேர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து (Target) ஸ்தாபனத்தில் உள்ள எல்லா மிஷனரிகளும் செயல்படவேண்டும் என்று ஸ்தாபன தலைவர்கள் எங்களைப்போன்ற மிஷனரிகளை கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் மிஷனரிகள் மன அழுத்தத்துக்குள்ளாகிறார்கள். மிஷனரி ஸ்தாபனங்கள் இப்படி கட்டாயப்படுத்துவது சரியா?

பதில்: நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நம் பிள்ளைகள் திருமணத்திற்கு என்று, பிள்ளைகள் மேற்படிப்புக்கு என்று குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே நாம் யோசிக்கிறோம், திட்டமிடுகிறோம் அல்லவா?. அதைப்போல் ஒரு ஊழிய ஸ்தாபனம் அல்லது சபை இப்படி திட்டமிடுவதில் தவறேதும் இல்லையே!. ஒரு குறிக்கோள் இல்லாமல், திட்டமிடாமல் ஒரு ஊழியத்தை யாரும் செயல்படுத்துவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஸ்தாபன தலைவர்கள் மிஷனரிகளை கட்டாயப்படுத்தக்கூடாது!. அப்படி கட்டாயப்படுத்தினால் போலி ஆத்துமாக்கள் உருவாகும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சில வருடத்துக்குமுன் குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆட்களை பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டது. இதில் பள்ளிக்கூட ஆசிரியைகளையும், ஆசிரியர்களையும் மிகவும் அதிகமாக மேல்அதிகாரிகள் கட்டாயப்படுத்தி துன்புறுத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் இத்தனை பெண்கள் அல்லது ஆண்களை குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆட்களை அரசாங்க ஆஸ்பத்தரிக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள். அதனால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் சொந்தப் பணம் செலவழித்து அழைத்து செல்லும் ஆட்களுக்கு பணமும் கொடுத்து, குடும்ப கட்டுப்பாட்டுக்கு சம்மதித்தவர்களுக்கு அரிசி வாங்க பணமும், சேலை, வேஷ்டி ஆகியவைகளை கொடுத்து ஆட்களை கூட்டிவந்து சேர்ப்பார்கள். அப்படி ஆட்களை குடும்ப கட்டுபாட்டு ஆப்ரேஷனுக்கு அழைத்துவரும் டீச்சர்மார்கள் ஆஸ்பத்திரியில் வெட்கப்பட்டு கூனி குறுகிப்போய் நிற்பது மிக பரிதாபமாக இருந்தது. மேல் அதிகாரிகளின் இப்படிப்பட்ட கட்டளைக்கு பணியாமல்போனால் உடனே அவர்களை இடம்மாற்றம் செய்துவிடுவார்கள். அந்த நாட்களில் அநேகர் கிராமங்கள்தோறும் சென்று குடும்ப கட்டுபாட்டுக்கு ஆப்ரேஷன் செய்ய வீடுவீடாக சென்று ஆட்களிடம் கெஞ்சி அழைக்கும்போது பலர் அவமானப்பட்டு, தான் வீடு திரும்பி வந்து தன் கணவனிடம் அதைக்கூறி அழுதிருக்கிறார்கள். இந்த தொல்லையிலிருந்து விடுபட மேல்அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தங்களை ஆள் தேடும்பணியிலிருந்து பலர் விடுவித்துக்கொண்டார்கள்.

ஏறக்குறைய அதேமுறையில்தான் இப்போது சில மிஷனரி ஸ்தாபனங்களில் ஞானஸ்நானத்துக்கு ஆள்பிடித்துவர, மிஷனரிகளை கட்டாயப்படுத்துகிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM