அந்த நிலை ஏற்பட்டால் நீதிபதி பதவி என்பது கோடிக்கணக்கில் விற்பனையாகும் வியாபார விளையாட்டாக மாற வழி உண்டாக்கும். பிறகு நீதிமன்றம் செல்லும் வழக்குகளின் நீதி கேள்வி குறியாகும். மேலும் இந்த குழு மூலமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நல்ல நீதிபதியை 6 பேர் குழுகளில் சேர்க்கப்பட்ட இரண்டுபேர்கள் நிராகரித்தால் அந்த நல்ல நீதிபதியின் பதவி நியமனம் செல்லாது என்றாகிவிடும். அந்த இரண்டு நபர்கள் நிச்சயமாக அரசியல்வாதியாக இருப்பார்கள் என்றால் அது மிகையாகாது. சிலவேளை இப்படிப்பட்ட ஆபத்தான முறையில் நீதிபதிகள் நியமனம் நடந்தால் திரு.மோடி அவர்கள் இலங்கை ராஜபக்ஷேப்போல சர்வாதிகாரியாக மாறினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பார்லிமெண்டில் எதிர்கட்சி தலைவர் இல்லாத பெரும்பான்மை மெஜார்ட்டி என்ற நிலை சர்வாதிகாரத்தை உருவாக்கும். அதற்கு உதவியாக இந்திய பார்லிமெண்டில் எதிர்கட்சி தலைவரே இல்லாத முதல் பார்லிமெண்ட்டாக இப்போது அமைந்து இருப்பதும் சர்வாதிகார ஆபத்துக்கு அடையாளமாகும். இலங்கை ராஜபக்ஷே அவர்கள் இலங்கை சுப்ரீம்கோர்ட் நீதிபதியை வெளியேற்றி விட்டாரே? நாட்டுக்கு நியாயம் எப்படி கிடைக்கும்?. அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் நீதிமன்ற கௌரவம் அதிகாரம் யாவும் பாதிக்கப்படும்.


பள்ளிக்கூடங்களில் கீதை போதிக்கப்படவேண்டும்.

திருவனந்தபுரம் 2014 ஆகஸ்ட் 7: RSS இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.பரமேஸ்வரன் என்பவர் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு இந்துமத புத்தகமான பகவத் கீதையை போதிப்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானதல்ல என்றும் சமீபத்தில் வெளியான இந்திய அரசியல் சட்ட புத்தகத்தின் அட்டைப்படமே கீதை உபதேசம் சம்பந்தமான படம்தான் இடம் பெற்றுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியான திரு.A.R.தாவே அவர்களும் சில தினங்களுக்கு முன் கூறியதாவது: இந்தியாவில் பள்ளிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றவர்களும், ஆசிரியர்களும் மகா பாரதத்தையும், பகவத் கீதையையும் கற்றுதரும் வகையில் பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் அவைகளை கட்டாய பாடமாக்கவேண்டும் என்றார். RSS இயக்கத்தின் துணை இயக்கமான பாரதீய விச்சார கேந்திரத்தின் டைரக்டர் அவர்கள் பகவத் கீதை ஒரு மத சம்பந்தமான புத்தகம் அல்ல என்றும், அது ஆன்மீகத்தையும், தத்துவங்களையும் போதிக்கிற புத்தகம் ஆகும்.

ஆகவே அதை இந்தியாவின் தேசிய புத்தகமாக அந்த கீதையை அறிவிக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும், இப்போதுள்ள புதிய BJP அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு சட்டமே கீதை புத்தகத்துக்கு அங்கீகாரமும், ஒப்புதலும் அளித்துள்ளது. இதை அரசியல் சட்டவிரோதம் என்று யாரும் கூறக்கூடாது என்றும் கூறினார்.


பிரதமர்.மோடியும் - கீதை புத்தக பரிசும்:

2014 செப்டம்பர் மாதம் 3ம் தேதி நம் பிரதமர் திரு.மோடி அவர்கள் ஜப்பான் நாட்டு அரசாங்க பயணமாக சென்று திரும்பும்போது ஜப்பான் நாட்டு பிரதமருக்கு இந்திய ஞாபகமாக இந்து மக்களின் புத்தகமாகிய கீதை புத்தகத்தை பரிசளித்தார்.

பொதுவாக நம் இந்திய தேச கலாச்சார அடையாள சின்னத்தைத்தான் மற்ற தேச தலைவருக்கு ஞாபகார்த்தமாக கொடுப்பது வழக்கம். ஆனால் நம் இந்திய பிரதமரோ இந்துமத புத்தகத்தை அரசாங்க ஞாபக அடையாள பரிசாக கொடுத்திருப்பது தவறு என்று பல இந்திய அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். திரு.மோடியின் அடிதளத்தில் இந்து தெய்வ வைராக்கியம் எவ்வளவு ஆழமாக புதைந்து இருக்கிறது கவனித்தீர்களா?.

அதேசமயம் நம் கிறிஸ்தவ உலகில் பிரபல பிரசங்கியரான மரித்த சகோ.D.G.S.தினகரனும் அவர் மகன் பால்தினகரன் ஆகிய இருவரும் இந்துமத தலைவர்.சங்கராச்சாரியாருக்கு இந்துமத விக்கிரங்களுக்கு பூஜை செய்யும் (போர்டபுள்) கையில் தூக்கி செல்லும் வெள்ளியினால் செய்யப்பட்ட பூஜை சாமான்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்து வந்தது எவ்வளவு கேவலம் இல்லையா?


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM