பிரதமர் திரு.மோடி அவர்களின் நல்ல ஏற்பாடு

இந்தியா எங்கும் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணை கைதிகள் என்ற பெயரில் லட்சக்கணக்கானவர்கள் பல வருடங்களாக சிறைச்சாலையில் அடைப்பட்டுள்ளனர். அதில் பலர் ஆயுள்தண்டனை கைதிகளைவிட மிக அதிகமான வருடங்கள் ஜெயிலில் அடைந்திருக்கிறார்கள். குற்றம் என்ன? தண்டனை என்ன? குற்றவாளியா? நிரபராதியா? என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையின் அதிக காலங்களை குடும்பத்தை இழந்து சிறைக்குள் வாடி வதங்கிபோனார்கள். சிலர் மனநோயாளியாகவே காலம் கழிக்கிறார்கள்.

சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்டவர்கள் கலவரம் நடந்த பகுதியில் கூட்டத்தோடு கூட்டமாக விவரம் அறிய வேடிக்கை பார்த்தவர்கள். அதிகாலையில் பஸ் பிடிப்பதற்காக இரவில் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தவர்கள், இப்படிப்பட்ட பலர் சந்தேக வழக்கில் பிடித்துக்கொண்டுபோய் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி எந்த குற்றமும் செய்யாதவர்கள் லட்சக்கணக்கில் தாங்கள் எதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று அறியாமலேயே பல வருடங்கள் கூண்டு கிளிகளாக சிறையில் அடைப்பட்டுள்ளார்கள்.

சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் பலர் பழிவாங்கப்பட்டவர்களாய் போலீஸ் உதவியுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இதில் உண்டு. விசாரணையும் நடக்காமல், தான் செய்த குற்றம் என்ன என்று அறியாத அப்பாவிகள் விசாரணை கைதிகளாக இன்றைக்கும் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி சிறையில் இடம் இல்லாமல் பல சிறைகளில் விசாரணை கைதிகள் நிரம்பி வழிகிறார்கள்.

இவர்களுக்காக சாப்பாடு, வைத்திய சிகிச்சை போன்ற பராமரிப்பு செலவு என்று அரசாங்கத்துக்கு தேவையில்லா செலவாக பல கோடிகள் செலவழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்காக பலமுறை நான் ஜாமக்காரனில் வாசகர்களிடம் ஜெபிக்க கேட்டுக்கொண்டேன். இவர்களுக்கு இப்போது பிரதமர் திரு.மோடி அவர்கள் ஆட்சியில்தான் விடிவுகாலம் வந்தது.

உச்சநீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்றில் விசாரணை கைதிகளுக்கு சீக்கிரம் மத்திய அரசு தீர்வுகாணவேண்டும் என்று கட்டளையிட்டது.

அநேக ஆண்டுகளுக்குமுன்பே உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரியும், கடந்தகால ஆட்சி இது விஷயமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதமர்.திரு.மோடி அவர்கள் பொறுப்பெற்றவுடன் உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டார்.

2014 செப்டம்பர் 8ம் தேதி பல லட்சம் விசாரணை கைதிகள் பல்வேறு மாநிலங்களில் விடுதலையாக்கப்பட்டார்கள். இதற்காக திரு.மோடி அவர்களை வாழ்த்துகிறோம். உச்சநீதிமன்றத்தையும் வாழ்த்துகிறோம்.


இனிமேல் வர இருக்கும் ஆபத்துக்கள்:

பல வருடங்கள் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் ஆகியவர்களின் குடும்ப உறவு பாசம் ஆகியவற்றை இழந்து வெளி உலகத்தை காணாத ஒரு புது உலகத்துக்குள் வாழ்ந்த இவர்களில் பொரும்பாலானவர்களின் சுபாவம் மாறியிருக்கும். மனதில் வெறுப்பு, அவமானம், வஞ்சம் தீர்த்தல், பதிலுக்குப்பதில் செய்தல் போன்ற பயங்கர மூர்க்க குணாதிசயங்களுடன் பலர் விடுதலையாகி வெளிவருவார்கள்.

இவர்களில் அநேகருக்கு போக்கிடம் இல்லாமல் சொந்த குடும்பத்தினரே இவர்கள் தங்கள் வீட்டுக்கு வருவதை விரும்பாத நிலையில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ! என்ற அவமானத்தில் சிறையிலிருந்து வரும் இவர்களை சொந்த குடும்பத்தினரே வேறு புதிய இடத்தில் குடியிருக்க இவர்களிடம் கேட்டுக்கொள்வார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM