அல்லேலூயா - ஆமென்

கேள்வி: நீங்கள் உங்கள் பிரசங்கத்தின் இடையிடையே ஆமென்!, அல்லேலூயா! சொல்வதில்லையே ஏன்?

பதில்: ஆமென், அல்லேலூயா வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் அறிந்தவர் யாரும் பிரசங்கத்தின் நடுவே அல்லேலூயா என்றோ, ஆமென் என்றோ கூறமாட்டார்கள்.

இப்படி கூறுபவர்கள் தாங்கள் அர்த்தமில்லாமல் பிரசங்கத்தின் நடுநடுவே இப்படி கூறுவதோடல்லாமல் ஜனங்களையும், ஆமென் என்று கூற சொல்கிறார்கள். அதுதான் கொடுமை. சபை ஜனங்களும், பரிதாபமாக கிளிப்பிள்ளையைப்போல் அர்த்தம் தெரியாமல் ஆமென் கூறுகிறார்கள்.

பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் பிரசங்கிக்கும் ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடையே அடுத்தது என்ன பேசலாம் என்பதை யோசிக்க அல்லேலூயா, ஆமென் என்ற வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது!. திருத்தவும் முடியாது!. பழகிப்போனார்கள். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் அப்படி பழகிபோனதால் அவர்களை மாற்றுவது கடினம்.

திடீர் பிஷப்

கேள்வி: Blessing TV (ஆசீர்வாதம் டிவி) சகோ.ஆலன்பால் அவர்களை திடீர் பிஷப் ஆக்கிவிட்டார்களே?

பதில்: பிஷப் ஆக்கவில்லை. பிஷப் ஆக்கிக்கொண்டார். பிரதர்.ஆலன்பால் என்று மக்கள் தன்னை அழைப்பதை கேட்டுகேட்டு சலித்துவிட்டதுபோல் இருக்கிறது என்று சாத்தூர்காரர் ஒருவர் எழுதியிருக்கிறார். இப்போது அவருக்கு பிஷப் பட்டம் மட்டும் அல்ல, டாக்டராகவும் ஒரு சில நிமிடத்தில் பட்டம் கிடைத்துவிட்டது.

இவர் திடீரென்று சென்னையில் பிளஸ்ஸிங் சபை என்ற பெயரில் மிகப் பெரிய சபையை ஆரம்பித்துள்ளார்.

மற்ற பெந்தேகோஸ்தே சபைகளிலிருந்தெல்லாம் ஆட்களுக்கு சாப்பாடு போட்டு அவர்களை ஆராதனைக்கு வந்துசேர இலவசமாக பஸ் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். அதனால் பல பாஸ்டர்கள் மனவருத்தமடைந்துள்ளனர். தங்கள் சபையை விட்டுவிட்டு, இவர் சபையில் சேர ஆட்கள் தயாராக இருக்கிறார்களே! என்று சென்னையில் மற்ற பாஸ்டர்கள் புலம்பினார்கள்.

தன் சபை ஆட்களை ஆலன்பால் கவர்ந்து தன் சபைக்கு அழைத்து செல்கிறார் என்று ஆதங்கப்பட்டு தங்கள் சபையிலேயே பிரசங்கத்தில் ஆலன்பாலை தாக்கி பேசியவர்களெல்லாம் இன்று அவர் பிஷப் ஆனதை புகழ்ந்து அவர் பத்திரிக்கையில் வாழ்த்து எழுதியுள்ளார்கள்.

ஒரு பிரியாணி பொட்டலம் 100 ரூபாய் பணம் இந்த கூலிக்கு ஆட்களை அமர்த்தி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்கு ஆட்களை சேர்ப்பதுபோல் ஆலன்பால் நம் சபையிலிருந்து சபை ஆட்களை கொண்டுபோகிறார் என்று புகார் செய்த ஒரு பாஸ்டர் உண்டு.

அவர்கூட ஆலன்பால் பத்திரிக்கையில் அவர் பிஷப்பானதைக்குறித்து புகழ்ந்து எழுதியிருக்கிறார். அவரின் திடீர் பிஷப் பதவி பெற்றதை புகழ்ந்து பேசியவர்களின் புகைப்படங்களை ஆலன்பாலின் மாதப் பத்திரிக்கையில் பாருங்கள்.

அதிலுள்ள பலருக்கு ஆசீர்வாதம் டிவியில் தங்கள் முகம் காண்பிக்க வாய்ப்பு கிடைத்த நன்றி கடனுக்காக ஆலன்பாலை புகழ்ந்து எழுதியுள்ளார்கள். அப்படிப்பட்ட கூட்டம் சிலரையும் அந்த புகைப்படங்களில் காணலாம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM