விலாசம் புதுப்பித்தல்:

ஜாமக்காரன் புதிய விலாச பட்டியல் ஏறக்குறைய முழுவதுமாக தயாரிக்கப்பட்டுவிட்டது. விலாசம் புதுப்பிக்கும் கார்டை அல்லது ஜாமக்காரன் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் கடிதங்களை வைத்து புது விலாச பட்டியல் தயாரித்ததில் சுமார் 9000 (ஒன்பது ஆயிரம்) விலாசங்களை நீக்கியிருக்கிறோம். அது எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. பழைய வாசகர்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இரண்டுமுறை ஜாமக்காரன் மூலம் விலாசம் புதுப்பித்தல், ஞாபகமூட்டல் அறிவிப்பை எழுதியும், இந்த 9000 நபர்களிடமிருந்து பதில் ஏதும் எங்களுக்கு வந்துசேராததால், வேறு வழியில்லாமல் அவர்கள் விலாசத்தை நீக்கிவிட்டோம். ஆனால் இவர்களெல்லாம் இப்போது மிக தாமதமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் அறிவிப்பை கவனிக்கவில்லை என்றும், எங்கள் விலாசத்தை மறுபடியும் சேர்க்கவேண்டும் என்றும், ஏராளமானவர்கள் எங்களுக்கு எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் பெயர்களை நாங்கள் புதிய விலாச பட்டியலில் உள்ள புதிய அங்கத்தினர் விலாசப்பட்டியலில் இணைத்து ஆகஸ்ட் மாத ஜாமக்காரனிலிருந்து அவர்களுக்கு ஜாமக்காரனை அனுப்ப ஆரம்பித்துவிட்டோம். புதிதாக யாராவது ஜாமக்காரன் தங்களுக்கும் வேண்டும் என்று விரும்பினால், உங்கள் முழு விலாசத்தையும் எங்களுக்கு எழுதி விண்ணப்பித்தால் உடனே விலாசப்பட்டியலில் நேரிடையாக அவர்கள் விலாசத்தை இணைத்துக்கொள்வோம். எங்கள் வாசகர் குடும்பத்தில் ஒருவராக அவர்களை இணைத்துக்கொள்வதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். அவர்களுக்காக ஜெபிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

புதிய விலாசப்பட்டியலுக்கு நாங்கள் கேட்டுக்கொண்டப்படி அவரவர்களின் விலாசங்களை எங்களுக்கு எழுதியும், பழைய விலாசத்திலுள்ள தவறுகளையும் குறிப்பிட்டு, தெளிவாக எங்களுக்கு கடிதம், இமெயில் மூலமாக எழுதி இந்த புது விலாசப்பட்டியலை தயாரிக்க எங்களோடு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

- (ஜாமக்காரனுக்கு சந்தா ஏதும் இல்லை).


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 |||
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM