கண்டதும் - வாசித்ததும் - கேட்டதும்:
சில ஊழியர்களின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள்:
அன்றன்றுள்ள அப்பம் 2014 செப்டம்பர் வெளியீடு:
ஆசிரியர் சகோ.சாம் ஜெபதுரை அவர்கள் எழுதியதாவது:
வெள்ளை குதிரையில் வந்த கர்த்தர்:

என் தாத்தா-பாட்டி ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒருநாள் தங்கள் வழக்கத்தின்படி விக்கிரகங்களை குளிப்பாட்டி, பூஜைபோடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்யும்போது திடீரென்று கர்த்தர் ஒரு வெள்ளைக்குதிரையிலே ஏறிவந்து தாத்தாவுக்கு தரிசனமானார். அவர் சொன்னாராம். "இந்த விக்கிரகங்களை நீ வழிபடவேண்டாம், வானத்தையும், பூமியையும் உன்னையும் சிருஷ்டித்த கர்த்தரையே தொழுதுக்கொள்" என்றார்.

அதற்கு என்னுடைய தாத்தா சரி அந்த தெய்வம் யார்? அவரை எப்படி தொழுதுக்கொள்ள வேண்டும்? என்று விசாரித்துக் கேட்டபோது, வெள்ளைக்குதிரையில் வந்த கர்த்தர் சொன்னார். அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து. நீ அவரை தொழுக்கொள்ள வானத்தை அன்னார்ந்து பார்த்து அவரை தொழுதுக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டு போய்விட்டார்.

இயேசுகிறிஸ்துவைக்குறித்து இந்தியாவில் மிஷனரிகள் வந்து அறிவிப்பதற்கு முன்பாகவே எங்களுடைய குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொண்ட குடும்பம் ஆகும்.


வீட்டு முற்றத்தில் நடந்த சம்பவம்:

என்னுடைய பாட்டி ஒரு பௌர்ணமி அன்று எங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும்போது அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த பழைய குல தெய்வம் தன் காலிலே சலங்கைக்கட்டி வந்தது. அதைப்பார்த்து என் பாட்டி அதட்டினார்கள். "நீ ஏன் எங்கள் தெருவுக்கு வந்தாய்? என் பேரப்பிள்ளைகளெல்லாம் நிலா வெளிச்சத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஜீவனுள்ள தேவனை வழிபடுகிறவர்கள், இங்கே உனக்கு வேலையில்லை" என்றார்கள். அதற்கு சலங்கை கட்டிய ஆவி சொன்னது. உங்கள் பிள்ளைகளுக்கும், என் பிள்ளைகளுக்கும் வித்தியாசம் எனக்கு தெரியாதா?. உங்கள் பிள்ளைகளை என்னால் தொட முடியுமா? என்றுகூறி ஒதுங்கி போய்விட்டது. அந்த முழு கிராமத்திலும் எங்கள் (சாம் ஜெபதுரை) குடும்பம் தழைத்தது.

தலைமுடியில் பிசாசு:

பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் (திருச்சி) அவர்கள் தன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது: நான்(இந்தியாவில்) நாகர்கோவில் என்ற ஊரில் பிரசங்கிக்க சென்றபோது அங்கு என்னை ஒரு அறையில் தங்க வைத்தனர். என்னை கவனிக்கவும்,காப்பி கொடுக்கவும் ஒருவன் என் அறைக்குள் வந்தான் காப்பி வைத்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு திடீர் குளிர் ஜுரம் வந்துவிட்டது.

நன்றாக சுகதேகவாசியான அவனுக்கு என் அறைக்குள் வந்தவுடன் மட்டும் எப்படி காரணமில்லாமல் குளிர்நடுங்க காய்ச்சல் வந்தது!. தெரியவில்லை!. அன்று இரவு நான் (பாஸ்டர்.விக்டர் ஞானராஜ்) உறங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தபோது உடனே எனக்கும், குளிர் காய்ச்சல் வந்துவிட்டது. குளிரில் நடுங்குகிறேன்! என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே ஜெபிக்க தொடங்கினேன் அப்போதுதான் கர்த்தர் எனக்கு ஒரு இரகசியத்தை காட்டினார். என் அறையில் வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஒரு பொம்மையை அழகுக்காக வைத்திருந்தார்கள்.


ஆப்பிரிக்கா கடலில் கப்பல் பயணம் செய்துவந்த பிசாசு:

அந்த பொம்மையின் தலைமுடிதான் குளிர்காய்ச்சலுக்கான காரணம் என்று கர்த்தர் எனக்கு காண்பித்தார். அந்த வேலைக்காரன் குளிருக்கும் பொம்மையின் தலைமுடிதான் காரணம் என்றும் கர்த்தர் எனக்கு காண்பித்தார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM