திடீர் அப்போஸ்தலர்

இப்போதெல்லாம் திடீர் பிஷப், திடீர் மாடரேட்டர், திடீர் டாக்டர், திடீர் Reverend இப்படிப்பட்ட கூட்டத்தில் இப்போது பாஸ்டர்.விக்டர் ராஜாமணி (சென்னை) அவர்கள் திடீர் அப்போஸ்தலர் ஆகிவிட்டாரே!.

அவர் தன் பத்திரிக்கையில் தனக்கு கிடைத்த பட்டத்தைக்குறித்து எழுதும்போது: அப்போஸ்தலர் என்பது பெயருக்குமுன் இடும் பட்டமும், பதவியும் என்றால் அது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று எழுதிவிட்டு அதே பத்திரிக்கையில் தன் பெயருக்கு முன் அப்போஸ்தலர்.விக்டர் ராஜாமணி என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். முரண்பாடாக அவருக்கு தெரியவில்லை!. ஆசை யாரைவிட்டது!.

கடந்த ஜாமக்காரனில் அந்நிய பாஷைக்கும் - பரிசுத்த ஆவியானவருக்கும் பாஸ்டர்.விக்டர் ராஜாமணி அவர்கள் கொடுத்த தவறான விளக்கங்களும் அதற்கு அவர் சுட்டிக்காட்டிய பிழையான, சம்பந்தமில்லாத வசனங்களும் வியாக்கியானங்களையும் குறித்து ஆகஸ்ட் 2014 ஜாமக்காரனில் வெளியிட்டேன்.

அவரின் 10 நாட்கள் முழுவதும் அந்நியபாஷையில் ஜெபம் செய்யும் ஏற்பாடும் அமாவாசையன்று ஜெபம் செய்வதும் போன்றவைகளைக்குறித்து அது தவறு என்று வேத வசன அடிப்படையில் நான் எழுதிய விளக்கங்களை குறித்து நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

இப்போது அதை தொடர்ந்து பாஸ்டர்.விக்டர்ராஜாமணி அவர்கள் இப்போது அப்போஸ்தலர் என்ற பட்டத்தையும், தன் பெயரின் பின்னே குறித்துக்கொண்டார்.

இந்த பட்டத்தை தான் பெற்றுக்கொள்ள அவர் தன் பத்திரிக்கையில் கூறிய காரணம் என்ன தெரியுமா? எனக்கு சபையின் நடுவேயும், ஊழியர்கள், தலைவர்கள், மத்தியிலேயும் எனக்கு அங்கிகரிப்பு தேவை!. அதற்காகத்தான் அப்போஸ்தலர் அங்கிகரிப்பு என்ற இந்த ஏற்பாடு அவசியம் என்று கண்டு இதை ஏற்றுக்கொண்டேன் என்றார்.( 2014 செப்டம்பர் பக்கம் 3). இந்த பதிலை உண்மையான பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார் அங்கீகரிக்கிறீர்களா? என்பதை அறிவிக்கவும்.

எப்படியோ இவர் அப்போஸ்தலர் ஆகிவிட்டார். தினசரி நரகத்துக்கும், பரலோகத்துக்கும் சர்வ சாதரணமாக போய் வருகிறவர் என்று தன் பிரசங்கத்தில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சகோ.ஆலன் பாலுக்கு பிஷப் (பேராயர்) டாக்டர் ஆகிய பதவிகள் கிடைத்துவிட்டது!. பிறகு என்ன?

இப்போது இந்த கேள்விகேட்ட பல வாசகர்களின் சிந்தனைக்கு மீதியுள்ள விவரங்களை யோசிக்க விட்டுவிடுகிறேன்.


தகுதியற்ற ஆயர்! தகுதியற்ற பிஷப் கம்மிஸரி!:
பிஷப்மார்களுக்கு (கண்காணிக்கு) தற்காலத்தில்
தகுதி ஏதும் வேண்டாம் போல் தெரிகிறது!.

கிறிஸ்தவ சபை ஊழியம் என்பது புதிய ஏற்பாட்டு சட்டத்தின்படிதான் அமையவேண்டும். காரணம் நியாயத் தீர்ப்பின் நாளில் நம் கையில் உள்ள வேத வசனத்தின்படிதான் பிஷப், மாடரேட்டர் பிஷப் கமிஷரி, ஆயர், சபை விசுவாசிகள் ஆகியவர்களிடம் கர்த்தர் நியாய தீர்ப்பை நடத்துவார்.

இப்போதெல்லாம் எந்த ஊழியத்துக்கும், வேதம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்பதில்லை இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கென்று ஒரு சட்டம் அமைத்து கொண்டு சபையை தங்கள் இஷ்டம்போல் நடத்துகிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM