வாசகர் கடிதம்

கடிதம்1:நீங்களுமா!?. ஜுன் மாத பத்திரிக்கையில் 27ம் பக்கம் உங்களை புகழும் கவிதையை யாரோ எழுதியதை வெளியிட்டது எங்களுக்கு ஒப்புதல் இல்லை. உங்கள் கூட்டத்தில் சுகம் பெற்றவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் எழுதிய கடிதங்களையே நீங்கள் வெளியிடுவதில்லை. அந்த சாட்சி என்னை மேன்மைப்படுத்தும் மக்கள் சுகம் பெற்றததற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது கர்த்தரின் அற்புதம். ஆகவே நான் உங்கள் சாட்சி கடிதத்தை வெளியிட விரும்பவில்லை என்று அந்த காலத்தில் நீங்கள் எழுதியது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.

கடிதம்2:உங்கள் 50 வருட ஊழிய நிறைவையும், கடந்த 50 வருடத்தில் உங்கள் ஊழியத்தில் நடந்தவைகளை நீங்கள் எழுதி சுய வியம்பரம் தேடிக்கொண்டீர்கள். நல்ல சான்ஸ்!.

கடிதம்3:15 வருடத்துக்குமுன் உங்கள் ஜாமக்காரன் பத்திரிக்கைமட்டும் எங்களுக்கு கிடைத்திராவிட்டால் நானும், என் குடும்பமும் மிக தவறான உபதேசத்தின் பின்னே போயிருப்போம். உங்கள் சரியான எச்சரிப்பு, அறிவிப்பு எங்கள் மனக்கண்களை திறந்தது. நன்றி ஜாமக்காரனுக்கு.

கடிதம்4:2014 ஆகஸ்ட் மாத ஜாமக்காரன் கடைசி பக்கத்தில் இரண்டு விதமான உங்கள் புகைப்படங்கள் 1964 - 2014 தங்களின் சரீரப்பிரகாரமான வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும் மத் 18:15-17 வரை வசனங்களின் அடிப்படையில் தங்கள் ஜாமக்காரன் பத்திரிக்கையை எனக்கு அனுப்புவதை எவ்வித முன் அறிவிப்புமின்றி நிறுத்தியது தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியின்மையும், முதிர்ச்சியின்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. உண்மைதானே!.

- Mr.A.Martin Rajan. Satchiyapuram.

ஆலோசனை - ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்:

ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன்.

ஆலோசனைக்கும் - ஜெபத்துக்கும் நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள், முன்பதாகவே நீங்கள் என்னை சந்திக்க விரும்பும் தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு எங்களிடமிருந்து பதில் பெற்றப்பின் அல்லது போனில் தொடர்புகொண்டு சந்திக்கும் நாளை உறுதிப்படுத்திக்கொண்டு வரவும்.

தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக்கொள்ளலாம். (தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயலவேண்டாம்.) குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள் ஓய்வு எடுக்கும் நேரமுமாகும்.

அந்த 3 மணி நேரம் எங்கள் தொலைபேசியை ஆஃப் செய்து வைத்து விடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

வடஇந்திய ஊழியங்களுக்கு நான் சென்றால் செவ்வாய்கிழமையில் வீட்டில் இருக்கமாட்டேன் என்பதையும் அறியவும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM