வெறும் நடனம், நாடகம், ஏறக்குறைய கிளப் டான்ஸ்சுக்கு சமமாக சினிமா நடன நடிகராக சகோ.ஜவஹர் சாமுவேல் மகன் ஆடும் ஆட்டம் அவரோடுகூட வாலிபப்பெண்கள் ஆடும் ஆட்டம், மிக அதிகம் இவர்கள் பாடுகின்ற பாடலின் இராகமும் சரியில்லை. பாடலின் வார்த்தைகள் புரியாதபடி வாத்திய கருவிகளின் ஆட்சியும் ஆக்கிரமித்துவிட்டது. எந்த மனிதனின் ஆத்துமாவையும் தொடாத சேனலாக பவர் ஆஃப் காட் சேனல் அமைந்தது. அது கிறிஸ்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே. அந்த சேனல் தொடங்கிய நாள் முதல் தகப்பனும், மகனும் மட்டும், எல்லா நேரமும் சேனல் முழுவதும் ஆக்கிரமித்துள்ளார்கள்.

டிவியை பார்த்து கொண்டிருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பிசாசு நீங்க நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். நன்றாக சத்தமாக துதியுங்கள். அந்நியபாஷையில் சத்தமாக பேசுங்கள். பிசாசு ஓடிப்போவான். இது செப்டம்பர் மாதம் காலை பவர் ஆஃப் காட் டிவி சேனலில் கண்டது. இது எத்தனை பிழையான உபதேசம். இவர்கள் டிவி பார்க்கும் கிறிஸ்தவர்களை எங்கோ தேவனைவிட்டு வசனத்தை விட்டு மிக தொலைவு கூட்டிசெல்கின்றனர். இந்த தவறான உபதேசங்கள் நடன நிகழ்ச்சிகள் கொண்ட பவர் ஆஃப் காட் டிவி தொடர்ந்தால் நிலைமை ஏஞ்சல் டிவி, ஆசீர்வாதம் டிவி ஆகியவைகளை விட மோசமாகும்.

இந்த பவர் ஆஃப் காட் டிவியில் ஒரே நிகழ்ச்சிகளை டிவியில் காட்டியதையே திரும்பதிரும்ப காட்டுவதின் காரணம், ஒருவேளை Sponsors கிடைக்காததாலும், இவர்கள் புதிதாக இந்த டிவி ஆரம்பிக்கப்பட்டதாலும் இவர்களின் பழைய செய்திகளையே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள்போல் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சேனலும் தொடர்ந்து நடக்குமா? நடக்காதா என்று. ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு இவர்கள் அமைந்திருக்கும் ஸ்டேஜ் அமைப்புக்கும், லைட் அமைப்புக்கும் மட்டும் சுமார் கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும். அந்த பாடல் நிகழ்ச்சிகள் யாவும் பொழுது போக்குக்கு பயன்படுவதாகத்தான் இருக்குமே தவிர, ஆத்துமாவுக்கு அந்த பாடல் பிரயோஜனப்படாது. இப்போதைய வாலிபர்கள், வாலிப பெண்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட நடன பாடல்களையும், நாட்டிய கலாச்சாரங்களையும்தான் விரும்புகிறார்கள். காபரே டான்ஸ் ஆடும் கிளப்புகளுக்கு போகமுடியாத கிறிஸ்தவ வாலிப பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட பிரேக் டான்ஸ் ஆகியவைகளை பார்க்கும்போது அந்த வாலிபர்களை நடன போதைக்கு அடிமையாக்கிவிடும்.

ரூஹா சபை சகோ.ஆல்வின் தாமஸ் போன்றவர்களும், பாஸ்டர்.மோகன் அவர்களின் மகனும், இப்போது இதே பாணியைத்தான் நடைமுறைப்படுத்தி எல்லாரையும் ஆட வைத்து சந்தோஷப்படுத்துகிறார்கள். ஆகவே இப்போதுள்ள கிறிஸ்தவ டிவி சேனல்களில் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான ஆகாரத்தை எதிர்ப்பார்க்காமல் கிறிஸ்தவ சேனல்களை பொழுதுபோக்குக்காக இரட்சிக்கப்படாத கிறிஸ்தவர்கூட பார்க்கலாம். ஆடலாம், குதிக்கலாம் அவ்வளவே?. இப்படிப்பட்ட கிறிஸ்தவ ஊழியர்களும், கிறிஸ்தவ டிவி சேனல்களை நடத்துபவர்களும் நம் கிறிஸ்தவ வாலிப பிள்ளைகளை எங்கோ ஆபத்தான இடத்துக்கு அழைத்துபோகிறார்கள் என்று உணரமுடிகிறது? இது எங்கே போய் முடியுமோ?.

பாடல் மட்டும் உண்டு - செய்தி இல்லை:

கேள்வி: நீங்கள் தமிழன் TV யில் சத்தியவசனம் சேனலில் வெறும் பாடல்மட்டும் பாடுகிறீர்கள். செய்தி கேட்க ஆவலாக இருக்கிறோம்!.

பதில்: உங்கள் வசன ஆவலுக்காக தேவனைத்துதிக்கிறேன். எனக்கு நேரமின்மையே நான் டிவியில் பிரசங்கிக்காகததற்கு காரணமாகும். எனக்கு சத்திய வசன ஸ்தாபன மதுரை பொறுப்பாளர் என்னை பிரசங்கிக்க பலமுறை அழைத்து சலித்து போய்விட்டனர். நேரம் கிடைக்கும்போது நிச்சயம் தமிழன் டிவியில் சத்தியவசனம் நிகழ்ச்சியில் பேசுவேன். நீங்கள் மதுரையிலிருந்து தானே இந்த கேள்வி கேட்கிறீர்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN