ஆப்பிரிக்கா கதை:

ஆப்பிரிக்காவில் பிசாசு பிடித்தவர்களை பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் ஒரு மந்திரவாதி உண்டு. அவனை அங்கு ஆப்பிரிக்காவில் (Charmer Doctor) பில்லி சூனியம் எடுக்கும் வைத்தியர் என்று அழைப்பார்கள். அப்படி பிசாசு பிடித்தவர்களிடமிருந்து அந்த பிசாசை அவர்கள் தலைமுடிக்கே கொண்டுவந்து இறக்கி அதன்பின் அங்கேயே உடனே மொட்டை அடித்து அந்த பிசாசு அமர்ந்த முடியை நீக்கி உனக்கு குணமாகிவிட்டது என்று கூறி அவளை அனுப்பிவிடுவார். அப்படி எடுக்கப்பட்ட முடிகளை சேர்த்து விலைக்கு விற்றுவிடுவார்களாம். அந்த முடியை வாங்கியவர்கள் பொம்மை செய்பவர்களுக்கு அந்த முடியை விற்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்ட உண்மையான மனிதமுடிக்கு நல்ல கிராக்கியும், மதிப்பும், விலையும் உண்டு. அப்படி வாங்கப்பட்ட ஆப்பிரிக்கா பொம்மைதான் என் அறையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த முடியில் உள்ள பிசாசுதான் என்னையும் தாக்கிற்று அந்த வேலைக்காரனையும் தாக்கிற்று என்று அறிந்தேன். அந்த பிசாசை அதட்டி சபித்து பிறகு நான் ஜெபித்து படுத்துவிட்டேன். அதன்பின் எனக்கு குளிர்காய்ச்சல் வரவில்லை என்றார்.

அந்த பிரசங்கத்தில் கூறப்பட்ட அம்புலிமாமா கதையின் மூலம் சபை மக்களுக்கும், டிவி காண்பவர்களுக்கும் பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் அவர்கள் என்ன கூற விரும்புகிறார்? என்பதை கடைசிவரை கூறவில்லை.

பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் வேதாகம கல்லூரியில் படித்த நல்ல வேத அறிவுள்ளவர். ஆனால் எப்போது அந்நியபாஷை பேசவும், ஊதி ஜனங்களை வீழ்த்தவும் செய்யும், உபதேசத்துக்குள் வீழ்ந்தாரோ அவர் உபதேசம் முழுவதும் வசனத்தை விட்டு விலகி முடியில் உள்ள பிசாசு, அந்த ஆப்பிரிக்கா பிசாசு இந்தியாவுக்கு கப்பல் ஏறிவந்து ஆவியில் நிறைந்து அந்நியபாஷை பேசும் (பாஸ்டர்.விக்டர் ஞானராஜ்) பாஸ்டரையே தாக்கிவிட்டது என்றால் இவரின் ஆவிக்குரிய ஆழம் எங்கே? வசனத்திலிருந்து விலகி ஆப்பிரிக்கா பொம்மை முடியை நம்பவைத்துவிட்டதே!.

உலகத்திலிருக்கிறவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் என்றல்லவா வேதம் போதிக்கிறது. சபை மக்களும் டிவி பார்ப்பவர்களும் தலைமுடி கண்டால் பயப்படும் வகையில் இவர் உபதேசிக்க ஆரம்பித்துவிட்டாரே! எத்தனைபேர் அந்த டிவி நிகழ்ச்சியை கண்டப்பின் தங்கள் பிள்ளைகளின் கையிலிருந்த பொம்மைகளை பிடுங்கி எறிந்து அந்த பிள்ளைகளை அழ வைத்தார்களோ!. அறியோம்.

இப்படிப்பட்ட TV செய்திகளை கேட்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்!.

அறிவியல் விஞ்ஞானி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சொல்லிய நல்ல வார்த்தைகள்:

நான் சரியாக செய்வதைப்பற்றி என்னிடம் சொல்லாதிருங்கள். அது எனக்கு தெரியும்.

நான் எதைப் பிழையாகச் செய்கிறோனோ அதைப்பற்றி மட்டுமே நீங்கள் என்னிடம் சொல்லவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

- ஐன்ஸ்டீன்


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM