செய்திகள்! செய்திகள்!!
சவுதி அரேபியாவில்: அவசர ஜெபவேண்டுகோள்

இந்திய கிறிஸ்தவ பாஸ்டர் இருவர் - விசுவாசிகள் 13 பேர் திடீர் கைது. சவுதி அரேபியாவுக்கு பைபிள் கொண்டுப்போகக்கூடாது என்பது அவர்கள் நாட்டு சட்டம். கிறிஸ்தவர்கள் ஆராதிக்க மற்ற அரேபிய நாடுகளில் உள்ளதுபோல் சிறிய அளவில்கூட சவுதி நாட்டில் சுதந்திரம் இல்லை என்றாலும் கிறிஸ்தவர்கள் இரகசியமாக சில வீடுகளில் கூடி ஆராதனை நடத்துகிறார்கள். சவுதியில் உள்ள இரகசிய ஜெபகுழுக்கள் இந்தியாவில் உள்ள பல மிஷனரி ஸ்தாபனங்களையும், சபைகளையும் தாங்குகிறார்கள். தனிக்குடும்பங்களாகவும் தாங்குகிறார்கள்.

ஆனால் இவர்கள் ஜெபிக்க கூடிவரும்போது இரகசிய போலீசார் கண்காணித்து அவ்வப்போது கிறிஸ்தவர்களை கைது செய்தும், நாட்டைவிட்டு துரத்தியும் விடுகிறார்கள். சிலரை கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் வைத்து கொடுமை செய்துள்ள செய்திகளையும் கடந்த காலங்களில் நாம் அறிந்தோம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க இந்திய தூதரகமும், சட்ட அடிப்படையில் உதவி செய்ய இயலாமல் இருக்கிறார்கள். அவரவர்கள் வாழும் நாடுகளின் சட்டத்துக்கு இந்தியர்கள் கீழ்ப்பட்டுத்தான் ஆகவேண்டும். சட்டத்தை மீறுகிறவர்கள் விஷயத்தில் நாங்கள் உதவ இயலாது என்றும் கூறிவிட்டனர்.

சவுதியில் வெள்ளிக்கிழமை விடுமுறை அந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் இரகசியமாக கூடுவார்கள் என்பதை சவுதி அரசாங்கம் அறிவார்கள். ஆகவே வெள்ளிக்கிழமை நாளில் அதிக கண்காணிப்பு இருக்கும் என்பதால், உண்மை கிறிஸ்தவர்கள் வியாழன் இரவு அல்லது சனி இரவு எந்த வீட்டிலாவது ஒன்று கூடி ஆராதிக்கிறார்கள். அச்சமயம் அந்த வீட்டில் பிரகாசமுள்ள விளக்குகளை அந்த வீட்டார் அணைத்து சிறிய வெளிச்சத்தில் சத்தம் வெளியில் வராமல் பயந்து கூடி ஆராதிக்கிறார்கள்.

கடந்த 2014 செப்டம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை இரண்டு பாஸ்டர்கள், 13 கிறிஸ்தவ விசுவாசிகளை போலீஸ் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள் என்று SMS செய்தி வந்தது. தண்டனை என்ன? இவர்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பது யாரும் விசாரித்து அறிந்துக்கொள்ள முடியாது. அத்தனை கடினமான சட்டம் சவுதியில் மட்டும் உள்ளது.

ஜாமக்காரன் வாசக விசுவாசிகள் இவர்கள் அனைவரும் விடுவிக்கபடவேண்டும் என்று தினசரி ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிற்காகவும், உலகத்திற்காகவும் நாம் தினமும் ஜெபிக்கவேண்டும்.

ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு:

விலாசம் மாற்றம் இருந்தாலோ அல்லது பத்திரிக்கை வரவில்லை என்றாலும் உடனே உங்களுடைய முழு விலாசத்தையும், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணினி எண்ணையும்(COMPUTER NUMBER) குறிப்பிட்டு எனக்கு CAPITAL LETTERSல் எழுதுங்கள் உங்களுக்கு உடனே ஜாமக்காரன் பத்திரிக்கை அனுப்பிவைக்கப்படும்.

உங்களுக்கு இரண்டு ஜாமக்காரன் பத்திரிக்கை வந்தாலும் உடனே எனக்கு தெரிவிக்கவேண்டுகிறேன். எங்களுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணினி எண்ணையும் குறிப்பிடவும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM