கன்னியாகுமரி CSI திருமண்டலத்தில் உள்ள
மார்த்தாண்டம் அருகேயுள்ள முஞ்சிறை CSI District கன்வென்ஷன்

கன்னியாகுமரி CSI திருமண்டலத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே உள்ள முஞ்சிறை CSI District கன்வென்ஷன் கூட்டம் சிறப்பாக நடந்தது. டிஸ்டிரிக் சேர்மேன்.Rev.Oliver Stanly அவர்கள் தலைமையில், சபையின் போதகருமான Rev.Gnanadhas அவர்களும், மற்றும் சபை பொறுப்பாளர்களுடன் இணைந்து ஜெபத்தோடு இந்தக்கூட்டங்களை ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவனந்தபுரம், காரக்கோணம், மார்த்தாண்டம், களியாக்காவிளை ஆகிய பகுதிகளிலிருந்தும் மக்கள் இக்கூட்டங்களில் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டம் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது.

கவனிக்கவும்

1.குறைவான Stamp ஒட்டி அனுப்பும் பத்திரிக்கைகளை, கடிதங்களை, கவர்களை ஒரு சிலவற்றை மட்டும் திருப்பி அனுப்புகிறோம். காரணம் அனுப்புபவர்கள் அந்த தவறை சரி செய்துகொண்டு கடிதத்தின் சரியான எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப அது அவர்களுக்கு உதவும். இப்படி எழுதுவது உங்களை வேதனைப்படுத்தினால் பொறுத்துக்கொள்ளவும். கவர் அனுப்புபவர்கள் Stamp ஒட்டி அனுப்பும்போது சரியான எடை பார்த்து, அதற்குறிய Stamp ஒட்டி அனுப்பவும்.

2.Book Post என Rs.4 தபால்தலை ஒட்டும்போது திருமண அழைப்பிதழ்களில், கையெழுத்து இட்டோ அல்லது பேனாவில் எதையாவது எழுதினாலோ Due அல்லது அபராதம் (Fine) இடுவதால் தபால் அனுப்புபவர் எச்சரிக்கையாக அனுப்பவும்.

3.எங்களுடைய ஜாமக்காரன் உங்களுக்கு அல்லது அனுப்பப்படும்போது உங்களுக்கு அனுப்பும் எங்கள் கடிதங்கள் ஏதாவது காரணத்தால் தபால்துறையிலிருந்து due (fine) வசூலிக்கப்படும்போது அதை Refused என்று எழுதி தயவுசெய்து எங்களுக்கே திருப்பி அனுப்பவும். நாங்களும் எங்களை சரி செய்ய அது உதவியாக இருக்கும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM