ரோம 1 : 22 : அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

ரோம 1:25 : தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.

இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

அப்படியே ஆண்களும், பெண்களைத் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே-ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால் தகாதவைகளைச் செய்யும்படி தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

விக்கிரக ஆராதனையை நம் வேதபுத்தகத்தின் ஆரம்பத்திலிருந்தே நம் தெய்வம் வெறுப்பதை வாசித்திருக்கிறோம்.

அதனால்தான் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் போட்டோ முன்நின்று கைகூப்பி வணங்குவதில்லை. அப்படி வணங்கினாலே அது விக்கிரகமாகிவிடுகிறது.

அப்படியே சிலுவை அடையாளத்தை பார்த்து கைகூப்பி வணங்கினாலும் அது விக்கிரகமாகிவிடுகிறது. அதனால்தான் நாம் இயேசுகிறிஸ்துவின் புகைப்படத்துக்கு மாலை அணிவிப்பதோ, ஊதுபத்தி வைப்பதோ, மெழுகுதிரி கொளுத்துவதோ இல்லை. காரணம், அது விக்கிரக வணக்கமாகிவிடும்.

மேலும் அப்படி செய்தால் இயேசுகிறிஸ்து செத்துப்போனவராகிவிடுவார். செத்துப்போனவர்களின் படத்துக்குதான் புறமதத்தினர் மாலை அணிவிப்பார்கள். நம் தேவன் உயிரோடிருப்பவர். அவர் ஜீவிக்கிறவர், அதனால் நாமும் ஜீவிக்கிறோம். மேலே குறிப்பிட்டப்படி இயேசுவையும், மரியாளையும், அந்தோணியாரையும் கத்தோலிக்க சபையை சேர்ந்தவர்கள் மட்டுமே விக்கிரகமாக்கி மாலை அணிவித்து வணங்குவார்கள்.

மார்டீன் லூத்தர்

அதனால்தான் மார்டீன் லூத்தர் அவர்கள் இப்படிப்பட்ட விக்கிரக ஆராதனை சடங்குகளிலிருந்து கிறிஸ்தவர்களை வேறுப்படுத்தி புரோட்டோஸ்டன்ட் என்ற சபையை உருவாக்கினார்.

மரியாள், அந்தோணியார், பேதுரு ஆகியவர்கள் பரிசுத்தவான்களானாலும் அவர்கள் எல்லாரும் செத்துப்போனவர்கள். ஆகவே அவர்களை வணங்கக்கூடாது. அவர்களிடம் ஜெபித்தாலும் அவர்கள் காதில் விழாது.

ஆகவேதான் வேளாங்கண்ணி மாதா, லூர்து மாதா, அந்தோணியார் ஆகியவர்களின் சிலையை வைத்து வணங்கவும் இயேசுவையே சிலையாக வடிவமைத்து வணங்கவும், சேவிக்கவும்கூடாது. அது விக்கிரக ஆராதனையாகும். அதை நம் தெய்வம் வெறுக்கிறார்.

தாவீது கூறுவதைப்போல், நீர் வெறுப்பதை நானும் வெறுப்பேன், நீர் நேசிப்பதை நானும் நேசிப்பேன் என்ற வைராக்கியம் கிறிஸ்தவர்கள் உள்ளத்தில் உருவாக வேண்டும்.

இப்படியிருக்க நம் இந்திய அரசாங்கம் நாணயத்தில் இந்து தெய்வ விக்கிரகத்தை உள்நோக்கத்தோடு மற்ற மதத்தினர் மனம் நோக திணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM